Daily Archive: November 16, 2019

ஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது

ஆ.சிவசுப்ரமணியன் விக்கிப்பீடியா   ஆய்வாளர் ஆ.சிவசுப்ரமணியன் அவர்களுக்கு 2019 ஆம் ஆண்டுக்கான இயல்பிரிவு விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரலாற்றின் மீது வெளிச்சம் வீழ்த்திய முக்கியமான ஆய்வுநூல்களை எழுதியவர் ஆ.சிவசுப்ரமணியன். ஆய்வாளர் நா. வானமாமலை அவர்களை முன்னோடியாகக் கொண்டவர். மார்க்ஸியச் சமூகவியல் நோக்கில் ஆய்வுசெய்தவர். ஆகவே பெரும்பாலும் அடித்தளமக்களின் வரலாறாகவும், ஒடுக்குமுறையின் இயங்கியலை விளக்குவதாகவும் அமைந்த ஆய்வுகள் அவை   1984ல் சுந்தர ராமசாமி ஆ.சிவசுப்ரமணியன் எழுதிய அடிமை முறையும் தமிழகமும் என்னும் நூலை எனக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127636

உலகெலாம்…

  சென்னையில் ஒரு நண்பரின் காரில் சென்றுகொண்டிருந்த போது அவர் பட்டி மன்ற கேசட் ஒன்றைப் போட்டார். துளித் துளியாக நான் கேட்டிருந்த திண்டுக்கல் லியோனியின் குரலைத் தொடர்ந்து பதினைந்து நிமிடம் கேட்டது அப்போது தான். சுருளிராஜன், தீப்பொறி ஆறுமுகம் கலவை. அது மிக வெற்றிகரமாக தமிழ்நாட்டை வலம் வருவதற்கான காரணங்கள் பல இருக்கலாம். முக்கியமானது முழுமையான அறியாமை மட்டுமே அளிக்கும் அவரது தன்னம்பிக்கை . அறிவார்ந்தது, முக்கியமானது, பிரபலமானது எனக் கருதப்படும் விஷயங்களையெல்லாம் திண்டுக்கல் லியோனி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16756

பாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை

  பாவண்ணனுக்கு விளக்கு விருது இனிய ஜெயம்   உங்கள் தளத்தில் எழுத்தாளர் பாவண்ணன் அவர்களுக்கான விருது அறிவிப்பினைக் கண்டேன். மிக்க மகிழ்ச்சி. [எங்கூர் பக்க எழுத்தாளர் ]  தொடர்ந்து சலிப்பே இன்றி எழுத்துப் பணியில் இருப்பவர். கடுமையான விமர்சனங்கள் அற்றவர். ஆகவே அனைவரின் நட்பிலும் உடனிருப்பவர்.இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நாளில்,எங்கோ ஒருவர் அவர் மொழிபெயர்த்த பைரப்பா அவர்களின் பர்வா நாவலை வாசித்துக் கொண்டிருப்பார். பாவண்ணன் விளக்கு  விருது பெற்றமை குறித்து மகிழ்ச்சி.   அதே சமயம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127621

புத்தசாந்தம்

அன்புநிறை ஜெ,   நான் வந்திருப்பது பெண்களுக்கான பயணக்குழுவினருடன். எனவே முழுக்க முழுக்க எங்கு என்ன வாங்கலாம், என்ன சாப்பிடலாம் எனபதே பயணம் முழுக்க விவாதிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் சற்று ஒவ்வாமையாகத் தோன்றவே, தனியாக ஒதுங்கி இருந்தேன். பிறகு மற்றொரு முறை எனக்கான பயணத்தை நான் தனியாகவோ தக்க நண்பர்களுடனோ மேற்கொள்வது என்று முடிவெடுத்து நீரோட்டத்தில் கலந்துகொண்டேன். நேற்று காசியிலிருந்து போத்கயா நாள் முழுவதும் வந்து ஒருவழியாய்  சேர்ந்தோம். எனவே மகாபோதி ஆலயம் மட்டுமே செல்ல முடிந்தது. எனக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127567