Daily Archive: November 14, 2019

சகஜயோகம்

இந்துமதமும் வலதுசாரி அரசியலும் மனுஷ்யபுத்திரன், திராவிட இலக்கியம் அன்புள்ள ஜெ   இது நேரடியான எளிமையான கேள்விதான். திராவிட இயக்கத்தவரின் அடாவடியையும் அவர்களின் தரம்தாழ்நத நக்கல்களையும் பற்றி சரியாகவே சொல்லியிருந்தீர்கள். ஆனால் இந்துத்துவ அரசியல் கொண்டவர்களின் தரம் என்ன? ஒரு படி கீழேதானே? அவர்களும் இதே புளிச்சமாவு வசையையும் நக்கலையும் மட்டும்தானே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்? அரவிந்தன் நீலகண்டன், ஒத்திசைவு ராமசாமி போன்றவர்கள் நீங்கள் அடிவாங்கியபோது கொண்டாடினார்கள். அவர்களும் இதை விட கீழான தரத்தில் புளிச்சமாவு நக்கலையும் நாலாந்தர வசைகளையும்தானே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127549

மாணவர்களுக்கான இலக்கிய வாசிப்பு

  அன்புள்ள ஜெயமோகன், நலமாயிருக்கிறீர்களா ?   நாகர்கோவில் பொறியியல் கல்லூரியில் இலக்கியம் குறித்து நீங்கள் ஆற்றிய உரையைக் கேட்டேன். ரகுராம் ராஜன் சொன்னதாக நீங்கள் சொன்ன செய்திகள் முற்றிலும் உண்மையே. யுவல் நோவா ஹராரியின் ’21 lessons for the 21st century’ நூலில் இவை குறித்த ஆழமான கட்டுரைகள் உள்ளன. சமீபத்தில் நிகழவிருக்கும், தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் பெருமாற்றங்களைச் சொல்லியிருப்பார்.   அந்த நூலில் அவர் கேட்கும் கேள்விகள் மிகவும் நுட்பமானவை. ஒருவனது வாழ்நாளில் 2-3 …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127486

ஆஸ்திரேலிய யக்ஷி

யக்ஷி உறையும் இடம் தீமை, அழகு- கடிதங்கள் அன்புள்ள ஜெ,   வணக்கம்   தங்களது ‘யட்சி உறையும் இடம்‘ பதிவு படித்தேன். படிக்கும் போதே நீண்ட நாட்களுக்கு முன்பே இதே கதையை எங்கோ படித்த ஞாபகம் உறுத்திக்கொண்டே இருந்தது. நீண்ட ஞாபக கிளறல்களுக்குப்பிறகு, மெல்பர்ன் அருங்காட்சியகத்தில் படித்த கதை ஞாபகம் வந்தது. பின் இணையத்தில் தேடி அந்த 130 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வின் கட்டுரைகளை கண்டேன். அதன் இணைப்புகள்:   https://en.wikipedia.org/wiki/Martha_Needle   https://www.news.com.au/lifestyle/real-life/true-stories/mentally-ill-or-clever-and-calculating-the-thrilling-story-of-aussie-woman-who-poisoned-her-entire-family/news-story/929c1a55323b325bd71fefddd4d3251c …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127501

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-61

பகுதி ஒன்பது : சிறகெழுகை – 3 யுதிஷ்டிரன் முன்னால் நடக்க அவருடைய விரைவுக்கு முந்தாமலும் பிந்தாமலும் யுயுத்ஸு சற்று பின்னால் நடந்தான். அவன் உடன் வருவதை யுதிஷ்டிரன் உணர்ந்ததுபோல் தெரியவில்லை. தனக்குத்தானே பேசிக்கொள்பவர்போல உதடுகள் அசைய, கைகள் சுழிக்க, சிற்றடிகளுடன் முன்னால் தெறித்து தெறித்து விழுபவர்போல நடந்தார். அத்தனை விரைவான நடை அவருக்குப் பழக்கமில்லாததால் சற்று தொலைவு சென்று மூச்சிரைத்தார். அவருடைய கழுத்தில் நரம்புகள் துடித்தன. முகம் சிவந்துவிட்டது. யுயுத்ஸு சற்று அருகே சென்று “நாம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127530