Daily Archive: November 12, 2019

தொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்

  நான் கே.கே.முகம்மது அவர்களைக் கண்டடைந்தது மத்தியப்பிரதேசத்தில் படேஸ்வர் ஆலயவளாகத்தைப் பற்றி வாசிக்கும்போதுதான், அங்கே செல்வதற்கு நான்குநாட்களுக்கு முன்பு. அவரைப்பற்றி மையநிலப்பயணம் குறிப்புகளில் எழுதியிருந்தேன்.   மையநிலப்பயணம் 9 மையநிலப்பயணம் 8 படேஸ்வர் ஆலயத்தொகை இடிபாடுகளின் குவியலாக கிடந்தது. சம்பல்சமவெளிக்குள் வரும் பகுதி அது. கூர்ஜ்ஜரப்பிரதிகார குலத்து அரசர்களால் கட்டப்பட்டது. பொன்னிறச் சேற்றுப்பாறைக் கற்களால் ஆன ஒர் ஆலயச்செண்டு. அப்பகுதி கே.கே.முகம்மது ளில் புகழ்பெற்ற சம்பல் கொள்ளையனான நிர்பய்சிங் குஜ்ஜாரின் கட்டுப்பாட்டில் இருந்தது. கே.கே.முகம்மது அங்கே தொல்லியல்துறை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105241

நினைவுகளின் இனிய நஞ்சு

  சிலநினைவுகள் பழைய காலத்திலிருந்து எழுந்து வருவதற்கு சினிமாப்பாடல்களைப்போல உதவுபவை வேறில்லை. ஆராதனா என் பழைய திருவனந்தபுரம் நினைவுகளுடன் பின்னிப்பிணைந்துள்ளது. அன்று திருவனந்தபுரம் நியூ திரையரங்கில் நூறுநாட்கள் ஓடியபடம். பாட்டுக்காகவே ஓடியது என்பது ஒரு மரியாதைக்கூற்று. ஷர்மிளா டாகூர் என்னும் பேரழகிக்காக ஓடியது என்பது மேலும் கொஞ்சம் உண்மை. அவருடைய ஒற்றைத் தெற்றுப்பல்லுக்காக ஓடியது என்று சொன்னால் அதுவே கடவுளுக்குச் சம்மதமான உண்மையாக இருக்க முடியும் அன்றைய திருவனந்தபுரம் பெரும்பாலும் ஓட்டுக்கட்டிடங்களால் ஆனது. தாழ்வானகூரை கொண்டவை. மேலே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127454

திராவிட இயக்கம் – மனுஷ்யபுத்திரன் எதிர்வினை

மனுஷ்யபுத்திரன், திராவிட இலக்கியம் மனுஷ்ய புத்திரன் என்கிற திமுக தெருமுனைப்பேச்சாளனின் அடாவடிக்கு ஜெயமோகன் ஆற்றியிருக்கும் எதிர் வினை இதில் திராவிட இயக்கத்தினர், இடதுசாரிகளின் இலக்கிய நுண்ணர்வு அளவு குறித்த லாப் டெஸ்ட் ஒன்றுள்ளது. இடதுசாரிகள், திராவிய இயக்கதினரில் இலக்கிய வாசிப்புக்கொண்டவர்கள் மிகவும் அரிதாம். ஒரு கதை இருக்கிறது. அரசன் ஒருவன் தனக்கு சவரம் செய்யும் சவரத் தொழிலாளியிடம் ’’ நாட்டு மக்கள் சுபிட்சமாக வாழ்கிறார்களா?’’ என்று கேட்டானாம். ’’ ஆம், மன்னா எல்லோரும் எலுமிச்சம் பழம் அளவு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127507

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-59

பகுதி ஒன்பது : சிறகெழுகை – 1 யுயுத்ஸு சுகோத்ரன் செல்வதை விழிநிலைக்க நோக்கிக்கொண்டிருந்தான். அவன் சென்று மறைவதை கண்டபின் விழிவிலக்கி கங்கைச்சூழலை நோக்கினான். அங்கிருந்த அனைவருமே சுகோத்ரனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்கள். விட்டுச்செல்பவனுக்கு அமையும் அந்த நடை எவருக்கேனும் இயலுமா என்று யுயுத்ஸு எண்ணிக்கொண்டான். எடையின்மை. தளையின்மை. இறந்தகாலம் இன்மை. ஒருவகையில் எதிர்காலம் இன்மையும்கூட. இறந்தகாலத்தை உதறிவிடமுடிகிறது. உலகியலாளன் எதிர்காலத்தை ஒருகணமும் அகற்ற முடிவதில்லை. நிகழ்காலத்தின்மேல் அது பேரெடையுடன் ஏறி அமர்ந்திருக்கிறது. ஒவ்வொரு கணத்தையும் முடிவு செய்கிறது. நாளை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127496