Daily Archive: November 10, 2019

அஞ்சலி:இயக்குநர் அருண்மொழி

  ‘காணிநிலம்’ ”ஏர்முனை’ போன்ற திரைப்படடங்கள் வழியாக அறியப்பட்டவர் இயக்குநர் அருண்மொழி. தமிழில் ஒரு கலைப்பட இயக்கத்தை உருவாக்க முயன்றவர்களில் ஒருவர். தமிழில் அதற்கான எந்த அறிவுப்புலமும் இல்லை. ஆகவே எந்தவகையான நிறுவன ஆதரவும் இருக்கவில்லை. ஆகவே அவருடைய முயற்சிகள் பெரும்பாலும் நிறைவேறவில்லை.   நவீன திரைப்பட தொழில்நுட்பம் வந்தபின்னர் அருண்மொழி குறும்படங்கள் எடுப்பதில் ஈடுபட்டார். சென்னை பிரசாத் ஸ்டுடியோவுடன் இணைந்து திரைத்தொழில்நுட்பத்தைப் பயிற்றுவிக்கும் நிறுவனத்தை நடத்தினார். வெவ்வேறு தருணங்களில் அவரைச் சந்தித்திருக்கிறேன்.   ருத்ரைய்யாவின் ‘அவள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127462

மனுஷ்யபுத்திரன், திராவிட இலக்கியம்

அமேசான் போட்டி, பரப்பிய எழுத்து, இலக்கியம்[ முன் தொடர்ச்சி]   அன்புள்ள சந்தானம்,   மனுஷ்யபுத்திரன் சொன்னதை நேரடியாகப் பார்த்தால் திமுக கட்சிக்காரர் ஒருவரின் மிகையான தற்கூற்றாகத்தான் கொள்ளவேண்டும். அது அரசியல்சூழலில் இயல்பான ஒன்றே. அமேசான் போட்டிபற்றிய சூழலில் அவர் அப்படிச் சொல்கிறார். உண்மையில், அவர் திமுகவைப் போல பிற கட்சியினரும் வேண்டுமென்றால் இப்படி கூட்டு அமைத்து வெல்லட்டுமே என்று அறைகூவல் விடுக்கிறார்.   உண்மையில் வேறெந்த கட்சியாவது இப்படி இன்று செய்யமுடியுமா? முடியாது என்பதுதானே பதிலாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127405

வெண்பா கீதாயனின் ‘நீ கூடிடு கூடலே’- ஆஸ்டின் சௌந்தர்

  நீ கூடிடு கூடலே வாங்க   வெண்பா கீதாயனை , நான் நேரில் பார்த்திருக்கிறேன். இலக்கியக் கூட்டம் ஒன்றில், எனக்கு முன்னால் இருந்த  இருக்கையில் அவர் அமர்ந்திருக்க, “பரவாயில்லை , என் மகளின் வயதில் உள்ள பெண் புத்தகமெல்லாம் வாசிக்கிறார். நம் மகள் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும்” என்று கனா கண்டிருக்கிறேன்.  வாசித்து வாசித்து கூடிப் பேசும் நண்பர்கள் மூலம், அவர் குமுதத்தில் தொடர் எழுதியுள்ளார், புத்தகம் போட்டிருக்கிறார் என்று எல்லாம் பிறகு தெரிய வர,  நேரில் பார்த்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127368

யானை டாக்டர் – கடிதங்கள்

ராகுலும் யானைடாக்டரும் அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,   ராம் தங்கம் யானை டாக்டர் குறித்து எழுதிய கடிதம் வாசித்தேன்.   நான் யானை டாக்டர் முதலில் வாசிக்கும் போது அது என்னை கவரவில்லை. ஆனால் சில வருடங்களுக்குப் பின் இரண்டாம் முறை வாசித்த போது, பல இரவுகள் அதனுடன் கழித்தேன்.   பல சிறுகதைகளை வாசித்தாலும், யானை டாக்டர், நூறு நாற்காலிகள், ஊமைச் செந்நாய், புலிக்கலைஞன் போன்ற சிறுகதைகள் ஏற்படுத்திய தாக்கத்தை வேறு எதுவும் ஏற்படுத்தவில்லை..   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127362

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-57

பகுதி எட்டு : விண்நோக்கு – 7 சுகோத்ரன் கண்களை மூடி அந்தக் காலத்தையும் இடத்தையும் கடந்து வேறெங்கோ இருந்தான். உஜ்வலன் அசைந்து அசைந்து அமர்ந்தான். அவ்வப்போது சுகோத்ரனை நோக்கினான். வேள்வி தொடர்ந்து நடக்க வெளியே பறவைக்குரல்கள் மாறுபட்டன. கீழே கங்கையிலிருந்து எழுந்த காற்று மாறுபாடு கொண்டது. அதில் நீராவியின் வெம்மை கலந்திருப்பதை உடல் உணர்ந்தது. அதுவரை காட்டிலிருந்து கங்கை நோக்கிச் சென்று சுழன்று வந்த காற்று வடக்கு நோக்கி செல்லத் தொடங்கியது. புகையை அது முழுமையாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127432