Daily Archive: November 7, 2019

அபி: ‘காலத்தின் மீது விழும் மெல்லிய வெயில்’ – யாழன் ஆதி

  வாழ்வின்மீதான அனுமானங்களில் எப்போதும் ஓர் ஏக்கத்தொனியோடுதான் படைப்புகள் தன்னளவில் உருக்கொள்கின்றன. குறிப்பாக மொழி மனித மனத்தின் தேடல்களை அதன் ஒளிவுமறைவுகளில் எப்போதும் ஒரு சுண்டெலியைப் போலவே சுரண்டிக்கொண்டிருக்கிறது. மொழியின்மீதான அவதானமும் அது தரும் நம்பிக்கையின் பேரொளியும் ஓர் ஆக்கவாளியைத் தொடர்ந்து அவர்போக்கில் இயங்கவைக்கிறது. ஓர் ஓவியர் தனக்கான வெளியை எங்கிருந்து உருவாக்குகிறார். ஒரு புனைவுக்காரர் தனக்கான ஆக்கத்திற்கான ஜீவனை எதிலிருந்து பிடுங்கிக்கொள்கிறார். எத்தகைய நல்லவை அணில்கள் தங்கும் இந்தக் கிளைகள் என்னும் சொற்றொடரின் இருப்பில் என்ன …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127232/

யாழன் ஆதி

யாழன் ஆதி யாழன் ஆதி கவிதைகள் அன்பின் ஜெ. அவர்களுக்கு “கொங்குத்தேர் வாழ்க்கை-2”  தொகுப்பில் என் பதின்ம பருவத்தோழன் இராம்.பிரபு என்கிற யாழன் ஆதியின் கவிதைகள் இடம்பெறாதபோது அவரைவிட அதிகமாக நான் வருந்தியிருக்கிறேன். வேலூர் ஊரிஸ் கல்லூரியிலிருந்து படித்துக் கொண்டிருந்த அந்த 1990-களிலிருந்து இன்றுவரை 6 கவிதை தொகுப்புகளும், பல்வேறு சிற்றிதழ்களில் வெளிவந்து தொகுக்கப்படாமல் உள்ள நூற்றுக்கணக்கான கவிதைகளையும் எழுதியவர் யாழன் ஆதி. இன்று உடல்நலம் குன்றி அதே வேலூரின் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127237/

தொல்பழங்கால அரியலூர் – கடலூர் சீனு

    இனிய ஜெயம்   அமெரிக்கா சென்று இறங்கி இருப்பீர்கள் என நினைக்கிறேன். கடந்த ஞாயிறு நீங்கள் அமெரிக்கா கிளம்பும் முஸ்தீபில் பெங்களூரில் இருந்த சூழலில், உங்களை விட்டு விட்டு நாங்கள் விஷ்ணுபுர குழும நண்பர்கள் ஒரு பத்து பேர் வரை ஒரு சிறிய ஒரு நாள் பயணம் சென்றோம். செல்வேந்திரன் அவரது நண்பர் சந்ரசேகர் அரியலூரில் தொல்பழங்கால உயிரிப் படிமங்கள் அருங்காட்சியகம் அமைய அரசுக்கு ஆவன செய்த தன்னார்வலர்களில் ஒருவர். செல்வேந்திரன் தலைமையில் அவருடன்,அவரது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127247/

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-54

பகுதி : எட்டு விண்நோக்கு – 4 விதுரர் சுகோத்ரனிடம் “அப்போது உன் அகவை என்ன?” என்றார். “ஆறு. நான் இலக்கணக் கல்வியை முடித்து நெறிநூல்களை கற்கத் தொடங்கியிருந்தேன்” என்றான் சுகோத்ரன். “அந்த அகவையில் அது பெரிய பொறுப்புதான்” என்றார் விதுரர். “ஆம், ஆனால் அந்த அகவையில் என்பதால்தான் என்னால் உறுதியான முடிவை எடுக்கமுடிந்தது” என்றான் சுகோத்ரன். நான் அந்த ஏட்டுச் சுவடியுடன் அங்கேயே அமர்ந்திருந்தேன். சிற்றறை அது. அதன் ஒவ்வொரு அணுவும் இன்று என என் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127340/