Daily Archive: November 5, 2019

பொன்னீலன் 80- விழா

  கட்சி, அரசியல் அனைத்துக்கும் அப்பால் பொன்னீலன் குமரிமாவட்டத்தின் அறிவுச்செயல்பாட்டின் முகம். நான் அவரைப் பார்க்கத்தொடங்கி முப்பதாண்டுகள் கடந்துவிட்டிருக்கின்றன. 1988ல் அவரை சுந்தர ராமசாமியின் இல்லத்தில் சந்தித்தேன்.1994 ல் அவருடைய புதியதரிசனங்கள் நாவலின் விமர்சனக்கூட்டத்திற்காக நாகர்கோயில் சென்றிருந்தபோது அவருடைய இல்லத்திற்கும் சென்றேன். அவருடைய புனைவுலகம் அறம்,சமூக மாற்றம் என்னும் விழுமியங்களின் அடிப்படையில் அமைந்தது. அவருடைய அன்பில் வாழ்த்தில் உருவாகி வந்த இரண்டாவது தலைமுறை எழுத்தாளன் நான். இன்று அவருடன் மூன்றாவது தலைமுறை உரையாடிக்கொண்டிருக்கிறது   அவருடைய எண்பதாவது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127036/

சமணமும் கல்வியும்

அழகியமரம் அன்புள்ள ஜெமோ, உங்களை அட்லாண்டாவில் சந்தித்து அளாவளாவியது குறித்து மிக்க மகிழ்ச்சி. உங்களின் எழுத்துக்களின் வாயிலாக உங்களை சில ஆண்டுகளாக தெரியும் ஆதலால் தயக்கமின்றி உரையாட முடிந்தது. உங்களிடம் கேள்விகளை நேரில் கேட்டு பதில் பெறுவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை; இரண்டரை மணி நேர உரையாடல் பத்தவில்லை. உங்களின் விரல் மற்றும் தாடைகுணமாகி இருக்கும் என்று நம்புகிறேன். பௌத்தம் மற்றும் சமணம் குறித்து அன்று உங்களிடம் மூன்று கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றேன். உங்களிடம் அன்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127290/

வெள்ளையானை- கடிதம்

மதிப்பிற்குரிய ஜெ., வணக்கம், தங்களின் நாவலான வெள்ளையானையை வாசித்து முடித்தேன். பாராட்ட வார்த்தைகள் இல்லை. பல உணர்வுகள் ஊடாக என்னை கொண்டுசென்றது. தமிழர்க்கே குறிப்பாக கீழ்ச்சாதி என்று அழைக்கப்பெற்ற மக்களுக்கே உரியதான மனதாழ்மையை மிக துல்லியமாய் எழுதியுள்ளிர்கள்.   விவரிக்க முடியாததும் மற்றும் மிக சிக்கலான‌ ஜாதிய கட்டமைப்பை மிக மிக அருமையாக விவரித்துள்ளிர்கள். மேற்க்கத்திய கோட்பாடுகளுக்குள் அடங்க மறுக்கும் ஜாதி மற்றும் இந்திய சமூகச்சூழலை ஆங்கிலேயர்கள் எவ்வாறு கையாண்டார்கள் என்றும் புரிந்தது. பலர் அதை தங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127222/

ராகுலும் யானைடாக்டரும்

அன்புள்ள ஜெயமோகன் சார்.   எனது நண்பர் குலசேகரம் பகுதியை சேர்ந்த ராகுல்.அவரை நான் முதன் முதலாக நேரில் சந்திக்கும்போது அவர் கையில் உங்கள் காடு நாவல் இருந்தது. அதன்பின் உங்களை நேரில் வீட்டில் சந்தித்து பேசியதாக சொன்னார். நீங்கள் கொடுத்த அறம் புத்தகம் அதனுடைய கதைகள் குறித்து மிகவும் சிலாகித்து சிலாகித்து பேசினார். குறிப்பாக யானை டாக்டர் கதை ,வணங்கான் கதை, அறம் கதை என எல்லா கதையும் மிகவும் பிடித்திருப்பதாக சொன்னார் இது ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127219/

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-52

பகுதி எட்டு : விண்நோக்கு – 2 முக்தவனத்தை அவர்கள் அடையும்போது பகல் அணைந்து அந்தி எழத்தொடங்கிவிட்டிருந்தது. பகல் முழுக்க வளைந்த பிரம்புக்கூரைக்குக் கீழே அசைந்தாடிய மஞ்சத்தில் உஜ்வலன் துயிலிலேயே இருந்தான். சுகோத்ரன் அவனருகே நீர்ப்பரப்பை நோக்கியபடி அமர்ந்திருந்தான். படகோட்டிகளின் கரிய முதுகுகள் வெயிலில் நெய்ப்பாறை என மின்னின. அவர்களின் மூச்சொலி சீராக எழுந்தது. படகின் விலாவில் அறைந்த அலைகளின் ஓசையுடன் அது இணைந்தது. அவ்வப்போது வெண்பறவைகள் வந்து பாய்மரக் கயிறுகளின் மேல் அமர்ந்து காற்றுக்கு வெவ்வேறு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127194/