Daily Archive: November 4, 2019

எளிமையான படைப்புகள்

அன்புள்ள ஜெ   நான் தொடர்ச்சியாக இலக்கியங்களை வாசித்துவருபவன் என் வாசிப்புக்கு எளிமையான நடையும்,நேரான அமைப்பும் கொண்ட படைப்புக்களையே விரும்ப முடிகிறது. பெரியநாவல்கள், சிக்கலான நாவல்களை வாசிப்பது சலிப்பை அளிக்கிறது. அவை அறிவார்ந்தவை என்றும் எளிமையான சின்ன படைப்புக்களே கலைப்படைப்புக்களுக்கு உரிய ஓர்மை உள்ளவை என்றும் ஓர் எண்ணம் உருவாகியது. இதை நண்பர்களிடம் சொல்லியபோது நீங்கள் இதை மறுப்பீர்கள் என்று சொன்னார்கள். ஆகவே நீங்கள் என்ன சொல்வீர்கள் என அறியும் ஆர்வம் ஏற்பட்டது.ஆகவே இதை எழுதுகிறேன். உங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127087

யுவன் நிகழ்வு – கடிதம்

யுவன் சந்திரசேகர், மதுரை, ஒருநாள் யுவன் சந்திரசேகரின் புனைவுலகம்- உரைகள் வணக்கம் ஜெயமோகன், யுவன் சந்திரசேகர் நிகழ்விற்கு வந்திருந்து சிறப்புரை வழங்கியதற்கு மிக்க நன்றி. நிகழ்வில் சிறு சிறு பிசிறுகள் இருந்தன அவை தவிர்க்க முடியாதவை அதை நீங்களும் பெரிதுபடுத்தவில்லை என்று நேர்பேச்சில் தெரிவித்தீர்கள் அதற்கும் சேர்த்தே எமது நன்றிகள். நாங்கள் யுவனின் ஓவியம் வரைந்து அதனை நினைவு பரிசாக வழங்க எண்ணியிருந்தோம். எனது தோழி வரைந்து தருவதாக சொல்லியிருந்தார். ஆனால் அது நிகழவில்லை. நீங்கள் நிகழ்வின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127214

குறள் பற்றி…

  திருக்குறள் உரைகள் காணொளியாக   ================================================================================================================ குறள் என்னும் தியானநூல் குறள் – கவிதையும், நீதியும். எங்கும் குறள் =============================================================================================================== இந்திய சிந்தனை மரபில் குறள் 5 இந்திய சிந்தனை மரபில் குறள் 4 இந்திய சிந்தனை மரபில் குறள் 3 இந்திய சிந்தனை மரபில் குறள் 2 இந்திய சிந்தனை மரபில் குறள்.1   =============================================================================================================== குறள் கடிதங்கள் குறள்;இருகடிதங்கள் குறள் அறிதல்- கடிதம்  

Permanent link to this article: https://www.jeyamohan.in/127312

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-51

பகுதி எட்டு : விண்நோக்கு – 1 ஹம்சகுண்டத்திலிருந்து சுகோத்ரன் கிளம்பியபோது அவனுடன் அவனுடைய இளைய சாலைமாணாக்கனாகிய உஜ்வலன் மட்டுமே இருந்தான். எட்டாண்டுகளுக்கு முன்பு அவன் அங்கே நிமித்தநூல் கற்கும்பொருட்டு வந்தபோது இளையவனாக அறிமுகமானவன். நிமித்தநூல் ஆசிரியரான ஃபலோதகரின் குருநிலையில் அவன் மட்டுமே ஷத்ரியன். பிற அனைவருமே நிமித்தநூல் நோக்கும் சூதர் குடியைச் சேர்ந்தவர். ஃபலோதகரும் சூதர்தான். ஆகவே அவனுக்கு அங்கே ஓர் அயல்தன்மை இருந்தது. அவனை பிற மாணவர்கள் மதிப்புடன் வணங்கி அகற்றினர். அங்கே உஜ்வலன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127171