Daily Archive: November 2, 2019

விஷ்ணுபுரம், ஒரு நம்பிக்கை

  அன்புள்ள ஜெ விஷ்ணுபுரம் விழா அணுகிக்கொண்டிருக்கிறது. பத்தாண்டுகள் கடந்துவிட்டிருக்கின்றன. விஷ்ணுபுரம் விழாவைப்பற்றிய செய்திகளைத்தான் தொடர்ச்சியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறேனே ஒழிய நான் இதுவரை அதில் பங்குகொண்டதில்லை. ஜெனிஸ் பரியத் எழுதியிருந்ததை வாசித்தேன். அவர் பல மாபெரும் இலக்கிய விழாக்களில் பங்கு கொண்டவர். அவர் விஷ்ணுபுரம் விழாவின் பிரம்மாண்டத்தையும் ஸ்பிரிட்டையும் புகழ்ந்து எழுதியிருந்தார். இந்த ஆண்டும் விழா சிறப்புற நிகழும் என நினைக்கிறேன். ஆண்டுக்காண்டு செலவு ஏறிக்கொண்டே செல்லும் சூழலில் இவ்வாறு ஒரு விழா முழுக்கமுழுக்க வாசகர்களாலேயே ஒருங்கிணைக்கப்படுவது என்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127202

அபியின் வடிவ எளிமையும், பொருள் வலிமையும்

    அபி புகைப்படங்கள் அபி கவிதைகள் நூல் அன்பு ஜெயமோகன்,   கவிஞர் அபியின் சில கவிதைகளை முன்னரே வாசித்திருக்கிறேன். ஆனால், ஊன்றிக் கவனித்ததில்லை. சமீபமாய்த்தான், அம்மனநிலை வாய்த்தது.   நேற்று இருந்த ’நான்’ இன்றில்லை. இன்று இருக்கும் ’நான்’ நாளை இருக்கப்போவதும் இல்லை. இவ்வுண்மைக்குத் தலையாட்டும் நம்மால் அதை அப்படியே ஒப்புக்கொள்ள இயல்வதில்லை. ‘மாறாத நான்’ எனும் கனவை உருவாக்கத் தலைப்படுகிறோம். அதிலும் ‘நான் விரும்பும் வகையிலான மாறாத நான்’ என்பதைக் கனவின் விதையாக்கவும் துடிக்கிறோம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127143

ஓர் அறைகூவல்

  வணக்கம். நான் கிருஷ்ணமூர்த்தி. கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் விலங்கியல் இணைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறேன். இத்துடன் நான் எழுதியுள்ள புத்தகங்களை இணைத்துள்ளேன். இப்புத்தகங்கள் இன்னும் எந்தப் பதிப்பகத்தின் சார்பாகவும் வெளியிடப்படவில்லை. இவற்றை எனது இணைய தளம் Thamizhkrishna.com வழியாகவும் தரவிறக்கிக் கொள்ளலாம். புத்தகம் எழுதியுள்ளதன் நோக்கம் மனிதகுலத்தை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றுவதே. புத்தகங்களின் கருத்துக்கள் அனைத்திற்கும் நானே பொறுப்பு. இவற்றின் கருத்துக்களை பொதுவெளியில் பகிர்ந்து கொள்ள கேட்டுக் கொள்கிறேன். நன்றி. கிருஷ்ணமூர்த்தி   அன்புள்ள கிருஷ்ணமூர்த்தி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127207

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-49

பகுதி ஏழு : தீராச்சுழி – 5 பூர்ணை குடிலிலிருந்து வெளியே வந்து சில கணங்கள் வெறும் வெளியை நோக்கியபடி நின்றாள். பின்மாலையின் சாய்வெயிலில் மரக்கிளைகள் ஒளிகொண்டிருந்தன. காட்டுக்குள் சாய்ந்திருந்த ஒளிச்சட்டங்கள் அங்கு அசையா நெருப்பு நின்றிருப்பதுபோல் தோன்றச் செய்தன. பறவைகளின் ஒலிகள் மாறுபட்டு கான்முழக்கம் கார்வை கொண்டிருந்தது. குடில் நிரைகளில் இருந்த ஏவலர்கள் பேசும் ஒலிகளும் பின்முழக்கம் ஒன்றைச் சூடியிருந்தன. குடில் முன் நின்றிருந்த புரவி அரைத்துயிலில் தலையை நன்கு தாழ்த்தி ஏதோ எண்ணத்திலாழ்ந்திருந்ததுபோல் உறைந்திருந்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127286