Daily Archive: November 1, 2019

பாலைநிலப் பயணம்

  நேற்று காலை சென்னையிலிருந்து கிளம்பி ஒரு ஏழுநாள் பாலைநிலப் பயணம். ஜெய்ப்பூருக்கு காலை பத்தரை மணிக்கு வந்து சேர்ந்தோம். அங்கிருந்து ஓசியான் வரை காரில் வந்து ஓரு விடுதியில் தங்கியிருக்கிறோம். பாலைநிலம் வழியாக  மூவாயிரம் கிலோமீட்டர் திட்டம். குஜராத் கட்ச் வளைகுடாவுக்குள் புகுந்து அங்கிருந்து ஊர் திரும்புகிறோம். பன்னிரண்டு நண்பர்கள் இரண்டு கார்கள்.   ராஜஸ்தான் பாலைநிலம் வழியாக இரண்டுமுறை ஏற்கனவே வந்திருக்கிறோம். அருகர்களின் பாதை பயணத்தின்போது தவறவிட்ட இடம் ஓசியான். ஊழ் இங்கே கொண்டுவந்திருக்கிறது.

Permanent link to this article: https://www.jeyamohan.in/127282

ஒரே ஆசிரியரை வாசித்தல்

  அன்புள்ள ஜெயமோகன், தங்களை தினமும் தவறாமல் வாசிப்பவர்களில் நானும் ஒருவன். சில வருடங்கள் முன், என் வாசிப்பு பாலகுமாரன் மற்றும் சுஜாதாவை கடக்க முடியாமல் (முயலாமல்),  அதே சமயம்  அவர்களின் போதாமையை உணர்ந்தவண்ணமும் தவித்தவேளை, என் நண்பன் ஒருவன் மூலம் உங்களை அறிய நேர்கையில், உங்களின் மேல் காரணமற்ற  வெறுப்பு, விலக்கத்துடன் தங்கள் படைப்புகளை தவிர்த்தேன். பின் ஒருநாள், விஷ்ணுபுரத்திற்குள் நுழைந்த பின் இன்றுவரை உங்கள் எழுத்துக்களை முடிந்தவரை பின் தொடர்கிறேன். இலக்கியம், ஆன்மீகம், வரலாறு, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127082

ப்ளூம்- கடிதம்

ஹெரால்ட் ப்ளூம்- அஞ்சலி -ஜெயமோகன் ஹரால்ட் ப்ளூம் -ஒரு கட்டுரை அன்புள்ள ஜெ நலம்தானே? நானும் நலம். ஹெரால்ட் ப்ளூம் பற்றிய கட்டுரைகள் மிக உதவியாக இருந்தன. அவரைப்பாற்றி இங்கே பெரிதாகப் பேசப்படவில்லை. நான் ஆங்கில இலக்கியம் முதுகலை பயின்றதனால் வகுப்புகள் வழியாக அவரைப்பற்றி அறிந்திருக்கிறேன். குறிப்பாக ஷேக்ஸ்பியர் வகுப்புகளில் அவரைப்பற்றிய பேச்சு இருக்கும். சமகாலத்தில் ஷேக்ஸ்பியரை முதன்மையாக முன்வைத்தவர் அவர் என்பது அவரைப்பற்றிய கல்லூரி வழியாக கிடைக்கும் பிம்பம். அவருடைய ஒட்டுமொத்தமான சித்திரத்தை உங்கள் கட்டுரை அளித்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127199

எழுத்துரு ஓர் எதிர்வினை

மொழி மதம் எழுத்துரு- கடிதம் தமிழ் எழுத்துருவும் கண்ணதாசனும் எழுத்துரு விவாதம் ஏன்? எழுத்துரு கடிதங்கள் எழுத்துருக்கள்-எதிர்வினைகள் மொழி,எழுத்து,மதம்- அ.பாண்டியன் மும்மொழி கற்றல் தமிழ் ஆங்கில எழுத்துவடிவம்- ஒரு கேள்வி அன்புள்ள ஆசிரியருக்கு, தமிழ் எழுத்துரு தொடர்பாக நீங்கள் எழுதியுள்ள கருத்துக்களை  தொடர்ந்து வாசித்திருக்கிறேன் .அவைகளைப் பொறுத்தவரை சில மாற்றுக்கருத்துக்கள் எனக்கு இருக்கின்றன.தமிழ் எழுத்துரு மாற்றத்தைப் பொறுத்தவரை நீங்கள் முன்வைப்பது வரலாற்று யூகத்தை.அதன் மூலம் மானிட சமூகத்தின் வரலாற்றைக் கவனிக்கும் போது நேற்றைய வரலாற்று தரவுகளையும் இன்றைய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127118

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-48

பகுதி ஏழு : தீராச்சுழி – 4 இளைய யாதவர் வரும்போது பூர்ணை சுபத்திரையின் குடில் வாயிலில் நின்றிருந்தாள். இளைய யாதவர் தேரில் வருவார் என்று அவள் எண்ணினாள். அவர் தொலைவில் நடந்து வருவதைக் கண்டதும் மெல்லிய திகைப்பு ஏற்பட்டது. அவர் களைத்து தனித்து வருவதாக முதலில் தோன்றியது. ஆனால் அணுகுந்தோறும் இளமை கொண்டு சிறுவனென்றாகிவிட்டதாக விழிகள் மயங்கின. தலையிலிருந்த பீலி காற்றில் அசைந்தது. இருபுறமும் நோக்கி, அவ்வப்போது நின்று கூர்ந்து பார்த்து, முகம் மலர தனக்குள் மகிழ்ந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127275