Monthly Archive: November 2019

அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரிக்கு ஞானபீடம்

  மலையாள கவிஞர் அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி அவர்களுக்கு இவ்வாண்டுக்கான ஞானபீட விருது வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டி ஒரு நினைவு. 2007ல் மலையாள திரைப்பாடலாசிரியரும் கவிஞருமான ஓ.என்.வி.குறுப்ப்புக்கு ஞானபீடம் வழங்கப்பட்டபோது மலையாள வார இதழான மாத்ருபூமிக்கு நான் அளித்த நீண்ட பேட்டியில் ஓஎன்வி அவர்களுக்கு ஞானபீடம் வழங்கப்பட்டதை கண்டித்து அப்பரிசுக்கு எவ்வகையிலும் தகுதியானவர் அக்கித்தம் அவர்கள்தான் என்றும், அவர் இருக்கையில் ஓஎன்விக்கு அளிக்கப்பட்டது ஒரு வகை மீறல் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.   அது ஒரு சிறு விவாதத்தைக் கிளப்பியது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127974

கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -3

கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள்-1 கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -2 3 தன்னைக் கடத்தலின் கொந்தளிப்பும் அமுதும்   பிரமிளின் ஆன்மீகம் எது? அவர் முதலில் எழுதியதாகக் கூறப்படும் ‘நான்’ என்ற கவிதையை வைத்து இதை மிகத்திட்டவட்டமாக விவாதிக்க முடியும். பொதுவாக கவிஞர்களை, புனைவிலக்கியவாதிகளை அவர்களின் தொடக்க்காலப் படைப்புகளைக்கொண்டு சுருக்கிக்கொள்வது ஒரு நல்ல பயிற்சி. அப்போது அவர்களின் புனைவுலகம் தேர்ச்சியற்றதாக இருக்கும். ஆகவே மறைப்புகள் இருக்காது, மயக்கங்கள் நிகழாது. அவர்களின் அடிப்படைக் கேள்விகள் அவ்வண்ணமே பதிவாகியிருக்கும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127786

காந்தி வாசித்த நூல்கள்

  அன்புள்ள ஜெ   காந்தி வாசித்த நூல்களின் பட்டியல். நிறையவே வாசித்திருக்கிறார் என தெரிகிறது. மதநூல்களுக்குச் சமானமாகவே வானியல்நூல்களும் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது http://www.gandhi-manibhavan.org/eduresources/bks_read_by_g.htm   மணிபவன் என்னும் இந்தத் தளம் மிக உதவிகரமானது   கிருஷ்ணன் ஈரோடு    

Permanent link to this article: https://www.jeyamohan.in/127874

கே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகள்

  ஒரு வாக்குறுதி   பொன்சூடி நீ சிவந்தபோது உன்னை கொய்தெடுத்து கட்டினான் அல்லவா? மிதித்தான், புடைத்தான் செம்புக்கலத்தில் அவித்தான் எரிவெயிலில் உலத்தினான் உரலில் இட்டு உள்ளை வெளியே எடுத்தான் கொன்றவர்களுக்க்கும் வென்றவர்களுக்கும் அன்னமாக்கி பரிமாறினான்   எனினும் ஏன் சீதை அவன் மீண்டும் வரும்போது காதல் நடிக்கும்போது நிலம் ஒருக்கும்போது சம்மதத்துக்காக தொட்டுப்பார்க்கும்போது மிதித்து அகற்றாமல் அவனை புன்னகைத்து ஏற்கிறாய்?   சிரிப்பல்லாமல் விளைவதென்ன அக்கா? யாருடையதோ என் வயல் என்று அறியப் பிந்தியது என் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127863

கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -2

கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள்-1 2. நடிக்கும் காலாதீதம்   பிரமிளின் கவிதையில் இந்தமூன்று சரடுகள் எப்படி முயங்குகின்றன என்பதை இரு தளங்களில் காணவேண்டும். அவரது வெற்றி பெறாத – கவித்துவ எழுச்சி நிகழாத – கவிதைகளிலும் கவித்துவம் கைகூடிய சிறந்த கவிதைகளிலும். வெற்றி பெறாத கவிதைகளில் அவரது தன்முனைப்பு மேலோங்கி நிற்கிறது. அதை நிறுவும் தர்க்கக் கட்டுமானமாக மீபொருண்மை சுருங்கி விடுகிறது. ஆன்மிக தரிசனமோ அத்தன்முனைப்பை நியாயப்படுத்தும் வெற்றுச்சொற்களாக கோஷமாக பாவனையாகச்சுருங்கிச்சிறுத்துக் காணப்படுகிறது.   எங்கிட்டுவெங்கிட்டு? …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127780

விஷ்ணுபுரம் விழா- விருந்தினர்-1 கே.ஜி,.சங்கரப்பிள்ளை

விஷ்ணுபுரம் 2019 விருதுவிழாவில் கலந்துகொள்ளும் கே.ஜி,சங்கரப்பிள்ளை 1948ல் கொல்லம் அருகே சவறா என்னும் ஊரில் பிறந்தவர் கே.ஜி.சங்கரப்பிள்ளை. கொல்லம் எஸ்.என்.கல்லூரியிலும், கேரள பல்கலைகழகத்திலுமாக மலையாளம் முதுகலைப் படிப்பை முடித்தபின் 1971ல் மலையாள ஆசிரியராக பணியில் நுழைந்தார். எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரில் முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்   இடதுசாரி அரசியல்நம்பிக்கையாளராக திகழ்ந்த கே.ஜி.சங்கரப்பிள்ளை சமரசமற்ற களப்போராளி என்று அறியப்பட்டவர். எழுபதுகளில் இடதுதீவிர அமைப்புக்களின் முகமாக திகழ்ந்தார். அக்காலத்தில்தான் ‘பங்காள்’ போன்ற புரட்சிகரக் கவிதைகள் வழியாக கேரளமெங்கும் அறியப்பட்டார்.  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127866

வெயிலில் ஃப்ராய்ட்

  வெயில் கவிதைகள் அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு,   தங்களின் வெய்யில் கவிதை உரையின் எழுத்து வடிவம் படித்தேன். கட்டுரையின் கடைசியில் இருந்த இணைப்பான Freud இன் குடலும் வெய்யில் கவிஞரின் வெப்பமும் இதை பதிவிட தோன்றுகிறது.   முதலில் ரயிலில் சந்தித்த மனிதரில் இருந்து ஆரம்பிப்போம். இங்கு நான் Freud இன்  இரண்டு மனஞ்சார்ந்த தற்காப்புகளை குறிப்பிட வேண்டி இருக்கிறது. தயவு செய்து பொறுத்துக்கொள்ளுங்கள். (Freud ஐ இழுத்தது நீங்கள் தான்!!) ஒன்று வெளியேற்றுதல் (Projection …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127857

கொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள்-1

  1. மூன்று பின்னல்களின் கோலம்   மூன்று கோடுகள் பின்னி உருவாகும் கோலம் என்று பிரமிளின் படைப்பியக்கத்தைச் சொல்லலாம். அவரது படைப்பியக்கம் என்பது பெரும்பாலும் அவருடைய முதற்கட்டக் கவிதைகளினால் தீர்மானிக்கப்படுவது.அவருடைய கட்டுரைகளில் அவ்வப்போது நிகழும் திறப்புகள், அப்போது அவருடைய மொழி அடையும் வேகம் ஆகியவை காரணமாக அவற்றைச் சற்றுத் தயக்கத்துடன் அடுத்தபடியான இலக்கியப் பங்களிப்புகள் என்று கூறலாம். அவரது கதைகள் அக்கதைகளில் அவ்வப்போது உருவாகிவரும் படிமங்கள் காரணமாக மட்டுமே பொருட்படுத்தத்தக்கவை. அப்படிமங்கள்கூட அவரது கவிதையுலகில் உள்ள …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126605

நலமறிதல்,குக்கூ…

  நான்கரை வருடங்களுக்கு முன்பாக எங்கள் முத்து வெங்கட் குக்கூ நிலத்தை வந்தடைந்தான். ஆம்பூருக்கு அருகிலிருக்கும் சின்னவரிகம் கிராமத்தில் வசிக்கும் எளியகுடும்பம் முத்துவுடையது. பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு, தன் நண்பர்களின் உதவியால் அலோபதி மருந்துகளை விற்கும் விற்பனை-பிரதிநிதியாக பணிக்குச் சேர்ந்தான். பின்பு, முத்துவும் ஒருசில மருத்துவர்களும் கூட்டாக இணைந்து ஒரு மருந்துக்கம்பெனி நிறுவனத்தைத் துவங்கினார்கள். அந்த நிறுவனம் சொற்பமான விலைக்கு மருத்துகளை வாங்கி, மிக அதிகமான இலாபம் ஈட்டும் இலக்கை கொண்டிருந்தது. இருபது காசு, முப்பது காசு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127764

மும்மொழிக்கொள்கை -இரண்டாம் மறுப்பு

மும்மொழிக்கொள்கை மறுப்புக்கு மறுப்பு   அன்புள்ள ஜெ,   புதிய கல்விக் கொள்கை மீதான விவாதங்களின் சூடு ஆறிய இந்த நேரத்தில் சாய் மகேஷ் அவர்களின் எதிர்வினை https://www.jeyamohan.in/127827#.XdzE_ugzZPY குறித்து சிலவற்றைச் சொல்லலாமென நினைக்கிறேன். அவருக்கு எழுதுவதால் எனக்கும் கற்க எதாவது கிடைக்கிறது.   புதிய கல்விக்கொள்கை குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடரில் நிகழப்போவதாக அறிந்தேன். நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கிற அரசின் முடிவுகள் குறித்த விவாதங்கள் இந்த நேரத்தில் மீண்டும் இத்தளத்தில் முன்னுக்கு வந்திருப்பது குறித்து மகிழ்ச்சி. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127908

Older posts «