Monthly Archive: October 2019

ஓர் அரிய நாள் -பாலா

  அன்பின் ஜெ.. 1990 ஆம் ஆண்டு, நான் எனது மேலாண்மைப் படிப்பை முடித்ததும், கல்லூரியில், வேலைக்கான நேர்முகத்தேர்வுகள் நடத்தப்பட்டன. அதில் ஒன்று ASSEFA (Association of Sarva Seva Farms). மதுரையில் வேலை. ஆனால், ஊதியம் மிகக் குறைவு. எனக்கு அறிவு அதைவிடக் குறைவு. அம்மாவையும், ஜெகன்னாதன் ஐயாவையும் அறிந்திராத காலம். தொழில் உலகை எனது மேலாண் அறிவின் மூலம் வெல்லும் நோக்கம் வேறு. எனவே வேறு வேலைக்குச் சென்று விட்டேன். லௌகீகப் பாதையில் சென்று, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127066/

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-45

பகுதி ஏழு : தீராச்சுழி – 1 முதுசேடி பூர்ணை தன் அரசி தேவிகையின் ஆடைகள் அடங்கிய மென்மரப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளிவந்தாள். ஏவலன் அவளை நோக்கி ஓடிவந்து அதை வாங்கிக்கொண்டு தேரில் வைத்தான். தேவிகையும் பலந்தரையும் விஜயையும் அருகருகே நின்றிருந்தனர். மூவரின் முகங்களும் மேலாடையால் மூடப்பட்டிருந்தன. அவர்கள் ஒருவருக்கொருவர் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளவில்லை. முகத்தின்மீது மேலாடையை இழுத்துவிட்டுக்கொள்வது பல நாட்களாகவே அவர்களின் வழக்கமாக ஆகிவிட்டிருந்தது. முகத்திரை சரிந்தாலே தலையும் குனிந்துவிடுகிறது. முகத்திரை அவர்களை புறஉலகத்திலிருந்து பிரித்தது. ஓசையில்லாமல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127054/

கலைப்படம் இங்கே உருவாவதற்கு முன்…4

  கலைப்படம் இங்கே உருவாவதற்கு முன்…3 கலைப்படம் இங்கே உருவாவதற்கு முன்…2 கலைப்படம் இங்கே உருவாவதற்கு முன்…1 [முன் தொடர்ச்சி] இன்று தமிழ்ச்சூழலில் கலைப்படங்கள் உருவாவதற்கு இருக்கும் முதன்மையான அகவயமான தடைகளையே குறிப்பிட்டேன். கலைப்படங்களுக்குரிய ரசனைச்சூழலே இல்லை. அதை உருவாக்காமல் படங்களை உருவாக்கி பயனில்லை. இன்று தமிழில் இடைநிலைப் படங்கள் மட்டுமே சற்றேனும் கொண்டாடப்படுகின்றன. அல்லது தரமான வணிகப்படங்கள்.  கலைப்படங்கள் இடைநிலைப்படங்கள் வணிகப்படங்கள் என்னும் வேறுபாடு நிலைநிறுத்தப்படவேண்டும்  ஒவ்வொரு வகைமைக்கும் உரிய ரசனைமுறை உருவாக்கப்படவேண்டும். அதற்குரிய ஓர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127096/

தன்னறம் – கடிதம்

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு, நீங்கள் மகன் உறவைச் சொல்லும்போது  “தந்தைக்கும் மகனுக்குமான உறவென்பது தொடுதலின் வழி நிகழ்வது’ எனக் குறிப்பிடுவீர்கள். தன் மகனை குளிக்கவைத்த ஒவ்வொரு தந்தையும் ஒப்புக்கொள்ளும் நிஜமிது. வழக்கமாக, ஒரு குழந்தை தன்னுடைய அப்பாவின் உடல்வாசனையை உட்பெற்றே இளம்பிராயத்தைக் கடக்கும். ஆனால், ஞாபகங்களை குடிக்கத்துவங்கிய நாள் முதல் நான் என்னுடைய அப்பச்சியின் உடல்வாசனையைத்தான் அதிகம் தன்வசப்படுத்தியிருக்கிறேன். அப்பாவிடமிருந்து நான் புறக்கணிப்படைந்த நாள்தொட்டு, அவர்தான் என்னை கைகால்களை நீவிக்கொடுத்து குளிக்க வைப்பார். என்னுடைய அப்பச்சியின் பெயர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127008/

ஹரால்ட் ப்ளூம் -ஒரு கட்டுரை

ஹெரால்ட் ப்ளூம்- அஞ்சலி -ஜெயமோகன் ஹரால்ட் ப்ளூம் பற்றி போகன் சங்கர் எழுதியிருக்கும் கட்டுரை. மிகைப் பாவனைகளோ செயற்கையான மொழியோ இல்லாமல் நேரடியாக ப்ளூமின் பங்களிப்பு ,எல்லைகள் பற்றிப் பேசுவது ஒரு பாதிப்பின் மரணம்: ஹரால்ட் ப்ளூம் – போகன் சங்கர்

Permanent link to this article: https://www.jeyamohan.in/127061/

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-44

பகுதி ஆறு : விழிக்குமிழிகள் – 5 விதுரருடன் நடந்தபோது சகதேவன் தன் உள்ளம் ஒழிந்து கிடப்பதை உணர்ந்தான். ஒரு நினைவு கூட இன்றி, அடுத்த கணம் குறித்த ஒரு துளி எண்ணம் கூட இன்றி, வெறுமனே மின்னிக்கொண்டிருந்த இலைப்பரப்புகளையும், மரக்கூட்டங்களையும், ஒளி எழத் தொடங்கியிருந்த வானையும், எழுநிழல்களின் மேல் அமர்ந்திருந்த கூழாங்கற்களையும், பல்லாயிரம் பாதச்சுவடுகளாக விரிந்திருந்த செம்மண் நிலத்தையும் பார்த்துக்கொண்டு நடந்தான். அன்று காலை எழுந்த பின்னர் அத்தனை நிகழ்வுகள் ஒன்றன்மேல் ஒன்றென விழுந்து உள்ளத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127006/

கலைப்படம் இங்கே உருவாவதற்கு முன்…3

கலைப்படம் இங்கே உருவாவதற்கு முன்…2 கலைப்படம் இங்கே உருவாவதற்கு முன்…1 [முன் தொடர்ச்சி] இங்கே சினிமா குறித்த பேச்சுக்களில் சில வகையான மொண்ணைத்தனங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லியாகவேண்டும். அ.சினிமா என்பது ஒரு கலைவடிவம். முதன்மையாக அதன் கலைத்தன்மையே ரசனை மற்றும் மதிப்பீட்டில் கருத்தில்கொள்ளப்படவேண்டும். மாறாக சினிமாவில் ஏற்கத்தக்க அல்லது தேவையான கருத்துக்கள் சொல்லப்பட்டிருந்தால் அதை நல்ல சினிமா என்று சொல்வது அக்கலைக்கே எதிரான பார்வை. ஆனால் இங்கே ஓங்கியிருப்பது அதுவே. சாதகமான அரசியல்நிலைபாடு கொண்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127027/

பூதான் சாதி

திண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம் ஜெமோ, என்னுடைய சிறுவயதில் நிறைய தாத்தாக்கள் அடிக்கடி  இப்படிச் சொல்லக் கேட்டதுண்டு, “நான் இப்ப கஷ்டப்படுறதுக்கு காரணம், எங்களோட அப்பா பொறுப்பில்லாம சொத்தையெல்லாம் ஊருக்கு எழுதி வச்சதுதான்…” இரண்டு தலைமுறைக்கு முன்பு நடந்த இந்த விஷயத்தின் பின்புலம் எதையுமே தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் கூட இல்லாமல் கடந்து வந்திருப்பதுதான் சற்று நெருடலையும், வேதனையையும் அளிக்கிறது. இப்புத்தகத்தைப் பற்றிய அவதானிப்புகளை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். பூதான சாதி அன்புடன் முத்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127000/

குருதிப்புனல் வாசிப்பு

குருதிப்புனல் வாங்க   அன்பின் ஜெ, நான் கிராமத்திலேயே வளர்ந்ததாலும் தகப்பனார் அவருடைய வேலையின் பெரும்பகுதியை வருவாய்துறையின் ஆதிதிராவிடர் நலத்துறையில் செய்ததாலும் சாதிவெறி எவ்வாறு ஒரு சமூகத்தை பின்னோக்கி இழுத்துச்செல்கிறது என்பதை உணர்வுபூர்வமாக அறிய பல சந்தர்ப்பங்கள் வாய்த்தன. சிறுவனாக இருந்தபொழுதில் தினமும் பால்வண்டி வந்து பால் நிலையத்தில் கொட்டப்பட்ட பாலினை காலையிலும் மாலையிலும் தருமபுரிக்கு எடுத்துச்செல்லும். ஏதாவது சாதித்தகராறு என்றால் முதலில் தெரிவது இந்த பால்வண்டி வராததே. உடனே பால் வியாபாரிகள் சல்லிசான விலையில் பாலை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126728/

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-43

பகுதி ஆறு : விழிக்குமிழிகள் – 4 சங்குலன் திருதராஷ்டிரரின் அறையிலிருந்து வெளிவந்து, விதுரரை பார்த்ததும் நின்றான். அவர் அருகணைந்ததும் அவன் முகம் விரிந்து புன்னகையாகியது. தலைவணங்கி விலகி நின்றான். விதுரர் அவனருகே சென்று அவனுடைய தோளில் கை வைத்து புன்னகையுடன் “மெலிந்துவிட்டாய்” என்றார். அவன் நாணத்துடன் சிரித்து தலைகுனிந்து “போர் நாட்களில் மலையில் இருந்தேன். போதிய உணவில்லை” என்றான். அவர் அவன் தோளில் கைவிரல்களைச் சுருட்டி இருமுறை குத்திய பின் “அங்கும் வேட்டையாடி உண்டிருப்பாயே” என்றார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126998/

Older posts «

» Newer posts