Daily Archive: October 30, 2019

இருத்தலின் ஐயம்

  அன்புள்ள ஜெயமோகன்   பெரும் சோர்வு தான் எஞ்சுகிறது. இலக்கியமாகட்டும் இயலுலகவியலாகட்டும் புகைப்படக்கலையாக்கட்டும் எதுவும் ஒரு கட்டத்திற்குமேல்  சோர்வையே அளிக்கிறது.தேடலை மட்டுப்படுத்தும் சோர்வல்ல. பேரியக்கமொன்றில் பங்கெடுத்த உணர்வு.இறுக்கமான பள்ளி கல்விச் சூழலில் எத்தகைய பண்பாட்டு நுனிகளாலும் தீண்டப்படாமல்  பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு வெற்று ஜடமாய் வெளிவந்து அடர்த்தியான உள் உலகமொன்றை  புலன் உணரப் பெறுவது சவுக்கியமாகத் தான் இருக்கிறது. சிந்தனை உருப்பெறுகிறது.நம்மை அடையாளப்படுத்தும் படைப்புகளே முதலில் நிறைவு தருகிறது. ‘நான்’ எனும் கருத்தாக்கம் இல்லாத படைப்புகளின் மீதான கிண்டல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127091

நுழைவு

பூதான் சாதி திண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம் ஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி இரு காந்திகள். இன்றைய காந்திகள் சுதந்திரத்தின் நிறம் அன்புள்ள ஜெ   நலம்தானே மேலே கண்ட புகைப்படம் எனக்கு மிகவும் பிடித்தமானது. எந்த சம்பிரதாய நிகழ்வாக இருந்தாலும் அதிலொரு செயற்கைத்தன்மையும் ஒரு சின்னத் தடுமாற்றமும் வந்துவிடும். கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் அருகே நிற்க நீங்கள் ஊழியரகத்தின் விழாவை திறந்து வைக்கும் படத்தில் அந்தச் சின்னப்பையன் சுவாதீனமாக உள்ளே மண்டையை நுழைக்கும் படம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127069

திருவிழாவில் வாழ்தல்

  பல ஆண்டுகளுக்கு முன் கோணங்கியின் நண்பரான ஒரு கிழவரைச் சந்தித்தேன். அவர் கோயில்பட்டி இனிப்பு செய்பவர். ஓய்வுபெற்றுவிட்டார். பிள்ளைகள் ‘செட்டில்’ ஆனபின் திருவிழா விற்பனைக்குச் செல்லவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். காலில் வாதம் வேறு. ஆனால் வாழ்க்கையே அழிந்துவிட்டது, இனி சாவுதான் கதி என சோர்வுடன் சொன்னார்.   அவர் சொன்ன காரணம் வியப்புக்குரியதாக இருந்தது. தன் வாழ்க்கை முழுக்க அவர் திருவிழாக்களில்தான் கழித்திருக்கிறார். ஒரு விழா முடிந்ததும் அப்படியே அடுத்த விழா.  ‘திருவிழாவிலே வாழணும்னாக்க குடுத்துல்லா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127075

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-46

பகுதி ஏழு : தீராச்சுழி – 2 யுதிஷ்டிரன் தேவிகையைப் பார்க்க வருகிறார் எனும் செய்தியை ஏவலன் வந்து அறிவித்தபோது அதை பூர்ணைதான் முதலில் கேட்டாள். அவள் குடில்வாயிலில் அமர்ந்திருந்தாள். ஏவலன் அவளிடம் செய்தியைச் சொன்னபோது “நான் அரசியிடம் தெரிவிக்கிறேன்” என்று அவள் சொன்னாள். “அரசியிடம் தனிப்பட்ட முறையில் தெரிவிக்க வேண்டுமென்று ஆணை” என்று ஏவலன் கூறினான். பூர்ணை “அரசியிடம் நான் தெரிவித்துவிடுகிறேன்” என்றாள். ஏவலன் உறுதியுடன் “அரசுச் செய்திகள் அரசியிடம் நேரில் கூறப்படவேண்டியவை” என்று கூறினான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127115