Daily Archive: October 27, 2019

கலைப்படம் இங்கே உருவாவதற்கு முன்…3

கலைப்படம் இங்கே உருவாவதற்கு முன்…2 கலைப்படம் இங்கே உருவாவதற்கு முன்…1 [முன் தொடர்ச்சி] இங்கே சினிமா குறித்த பேச்சுக்களில் சில வகையான மொண்ணைத்தனங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லியாகவேண்டும். அ.சினிமா என்பது ஒரு கலைவடிவம். முதன்மையாக அதன் கலைத்தன்மையே ரசனை மற்றும் மதிப்பீட்டில் கருத்தில்கொள்ளப்படவேண்டும். மாறாக சினிமாவில் ஏற்கத்தக்க அல்லது தேவையான கருத்துக்கள் சொல்லப்பட்டிருந்தால் அதை நல்ல சினிமா என்று சொல்வது அக்கலைக்கே எதிரான பார்வை. ஆனால் இங்கே ஓங்கியிருப்பது அதுவே. சாதகமான அரசியல்நிலைபாடு கொண்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127027/

பூதான் சாதி

திண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம் ஜெமோ, என்னுடைய சிறுவயதில் நிறைய தாத்தாக்கள் அடிக்கடி  இப்படிச் சொல்லக் கேட்டதுண்டு, “நான் இப்ப கஷ்டப்படுறதுக்கு காரணம், எங்களோட அப்பா பொறுப்பில்லாம சொத்தையெல்லாம் ஊருக்கு எழுதி வச்சதுதான்…” இரண்டு தலைமுறைக்கு முன்பு நடந்த இந்த விஷயத்தின் பின்புலம் எதையுமே தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் கூட இல்லாமல் கடந்து வந்திருப்பதுதான் சற்று நெருடலையும், வேதனையையும் அளிக்கிறது. இப்புத்தகத்தைப் பற்றிய அவதானிப்புகளை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். பூதான சாதி அன்புடன் முத்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127000/

குருதிப்புனல் வாசிப்பு

குருதிப்புனல் வாங்க   அன்பின் ஜெ, நான் கிராமத்திலேயே வளர்ந்ததாலும் தகப்பனார் அவருடைய வேலையின் பெரும்பகுதியை வருவாய்துறையின் ஆதிதிராவிடர் நலத்துறையில் செய்ததாலும் சாதிவெறி எவ்வாறு ஒரு சமூகத்தை பின்னோக்கி இழுத்துச்செல்கிறது என்பதை உணர்வுபூர்வமாக அறிய பல சந்தர்ப்பங்கள் வாய்த்தன. சிறுவனாக இருந்தபொழுதில் தினமும் பால்வண்டி வந்து பால் நிலையத்தில் கொட்டப்பட்ட பாலினை காலையிலும் மாலையிலும் தருமபுரிக்கு எடுத்துச்செல்லும். ஏதாவது சாதித்தகராறு என்றால் முதலில் தெரிவது இந்த பால்வண்டி வராததே. உடனே பால் வியாபாரிகள் சல்லிசான விலையில் பாலை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126728/

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-43

பகுதி ஆறு : விழிக்குமிழிகள் – 4 சங்குலன் திருதராஷ்டிரரின் அறையிலிருந்து வெளிவந்து, விதுரரை பார்த்ததும் நின்றான். அவர் அருகணைந்ததும் அவன் முகம் விரிந்து புன்னகையாகியது. தலைவணங்கி விலகி நின்றான். விதுரர் அவனருகே சென்று அவனுடைய தோளில் கை வைத்து புன்னகையுடன் “மெலிந்துவிட்டாய்” என்றார். அவன் நாணத்துடன் சிரித்து தலைகுனிந்து “போர் நாட்களில் மலையில் இருந்தேன். போதிய உணவில்லை” என்றான். அவர் அவன் தோளில் கைவிரல்களைச் சுருட்டி இருமுறை குத்திய பின் “அங்கும் வேட்டையாடி உண்டிருப்பாயே” என்றார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126998/