Daily Archive: October 26, 2019

கலைப்படம் இங்கே உருவாவதற்கு முன்…2

கலைப்படம் இங்கே உருவாவதற்கு முன்…1 [முன் தொடர்ச்சி] எந்த கலைரசனையிலும் அக்கலையை வகைபிரித்து அழகியல் ரீதியாக வரையறை செய்து அதற்கேற்ப உளநிலைகளை உருவாக்கிக்கொள்வதும் அதற்குரிய தொடர்பயிற்சியை மேற்கொள்வதும் இன்றியமையாதது. இலக்கியத்துறையில் இந்நோக்கத்துடனேயே வணிக எழுத்து – இலக்கியம் என்னும் பிரிவினை உருவாக்கப்பட்டது. இலக்கியத்திலேயே செவ்வியல், கற்பனாவாதம், யதார்த்தவாதம், இயல்புவாதம் போன்ற அழகியல் வேறுபாடுகள் உருவாக்கப்பட்டன. நவீனத்துவம், பின்நவீனத்துவம் போன்ற காலகட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டன. அவற்றுக்குள் பல்வேறு வடிவத்தனித்தன்மைகள் வரையறை செய்யப்பட்டன. இவற்றை அறிந்துகொள்ளுதல் ரசனைக்கு மிகமிக இன்றியமையாதது. உதாரணமாக, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127020

தீமை, அழகு- கடிதங்கள்

யக்ஷி உறையும் இடம் அன்புள்ள ஜெ   யக்ஷி உறையும் இடம் ஒரு அதிர்ச்சியான கட்டுரை. ஒரு சமகாலச் செய்தியிலிருந்து வழக்கமான நீதிநெறி சார்ந்த பிரச்சினைக்குச் செல்லாமல் புதிய ஒரு கேள்வியைக் கேட்கிறீர்கள். முக்கியமான கேள்வி அது. ஏன் நாம் அழகானவர்களுக்கு எப்போதுமே ஒரு தனி இடத்தை அளிக்கிறோம்?   முன்பு என்னிடம் இந்தியாவில் இனவாதம் உள்ளதா என்று கேட்டார்கள். ஏனென்றால் இந்தியாவுக்கு வரும் ஆப்ரிக்கர்கள் இங்கே அவர்கள் மிகமோசமாக நடத்தப்பட்டதாகவே சொல்லியிருக்கிறார்கள். அது இனவாதம்தான். ஆனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126764

நீ மது பகரூ – கடிதம்

நீ மதுபகரூ… நீ மதுபகரூ – காலையில் தலைப்பை வாசித்ததிலிருந்து மனதிற்குள் இந்த ஒற்றை வார்த்தை குடி கொண்டுவிட்டது. எங்கோ கேட்ட வார்த்தை எங்கோ கேட்ட வார்த்தை என மனம் அதற்றிக் கொண்டேயிருந்தது. பின் கட்டுரையை வாசிக்க வாசிக்க ஞாபகங்கள் ஒவ்வொன்றாக மேகத்திலிருந்து வெளி வரும் நீல நிலா போல் தெளியத் தொடங்கின.   பொதுவாகத் தமிழ் மண்ணிற்கு இல்லாத சில நல்ல விஷயங்கள் என மற்ற மாநிலத்தவருக்கு சில பண்புகள் உண்டு. அவற்றில் ஒன்று கூடிப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127045

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-42

பகுதி ஆறு : விழிக்குமிழிகள் – 3 திருதராஷ்டிரரின் குடில் முன் சஞ்சயன் நின்றுகொண்டிருந்தான். அவர்கள் வருவதைக் கண்டு புன்னகையுடன் அருகணைந்து விதுரரின் கால்களைத் தொட்டு வணங்கினான். அவன் தலைமேல் கைகளை வைத்து வாழ்த்திய விதுரர் “எப்படி இருக்கிறார்?” என்றார். சஞ்சயன் “உடல்நிலை நலமாகவே இருக்கிறது” என்றான். சகதேவன் “மகிழ்ச்சியாக இருக்கிறார் என்றுதானே கேள்விப்பட்டேன்” என்றான். சஞ்சயன் “ஆம், அதை மகிழ்ச்சி என சொல்லலாம் என்றால் நேற்று மாலைவரைகூட மகிழ்ச்சியாகவே இருந்தார்கள்” என்றான். விதுரர் “சொல்க!” என்றார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126981