Daily Archive: October 25, 2019

கலைப்படம் இங்கே உருவாவதற்கு முன்…

ஜெயமோகன் அவர்களுக்கு   தங்களின் சினிமா கட்டுரைகளை அனேகமாக அனைத்தையும் வாசித்திருக்கிறேன்.தியோடர் பாஸ்கரின் தமிழ் சினிமா வரலாறு, வளர்ச்சி சம்பந்தமான நூல்களையும் வாசித்துள்ளேன். சொல்லப்போனால் தமிழ் வணிக சினிமாவின் போக்குகளான புதியன எதையும் சொல்லாமல் பொது புத்தியின் ஆழத்தில் படிந்திருக்கும், வெளிப்படுத்தும் ரசனையை மட்டுமே முன்னிறுத்துவது (சங்கர் படத்தில் வரும் லஞ்சம், ஊழல், அதிகாரிகள் மட்டுமே திருந்தவேண்டும், சில சமயம் மக்களும் திருந்தவேண்டும், சர்கார் படத்தில் வந்த இலவச காழ்ப்பு, அமெரிக்க கனவு, சமீப காலமாக வந்துக்கொண்டிருக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126987

யுவன் சந்திரசேகரின் புனைவுலகம்- உரைகள்

யுவன் சந்திரசேகரின் புனைவுலகம் குறித்து 9-10-2019 அன்று மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ் உயராய்வு மையமும் சிற்றில் இயக்கமும் இணைந்து நிகழ்த்திய ஒருநாள் கருத்தரங்கின் உரைகள்.          

Permanent link to this article: https://www.jeyamohan.in/126995

பகடிகபடி!

  அன்புள்ள ஜெ,   உண்மையாகவே இந்தக் குறுங்கதையை வாசித்து பிரமித்துப்போனேன். இது என்ன வகை எழுத்து? பகடி என்றோ நகைச்சுவை என்றோ எழுதியவர் எண்ணுகிறார் என்பது வெளிப்படை. ஆனால் அதெல்லாம் இப்படியா இருக்கும்? முந்தாநாள் ஃபேஸ்புக் எழுதவந்த பையன்கள் எழுதும் பகடி- மீம்ஸ் போல. இல்லை எனக்குத்தான் ஏதாவது பிரச்சினையா?   செல்வக்குமார் https://www.vikatan.com/arts/literature/anjiraithumbi-3-suguna-diwakars-short-story அன்புள்ள செல்வக்குமார்,   பாவம், நல்ல மனுஷன். ஏதோ முயற்சி செய்கிறார். நகைச்சுவையே இல்லாத திமுகவாக இருப்பதை விட கஷ்டப்பட்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126841

அரசனும் தெய்வமும்- கடிதம்

  கிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா?- எதிர்வினை பக்தியும் அறிவும் கிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா? கீதையை எப்படிப் படிப்பது? ஏன்?   அன்பு ஜெயமோகன்,   கிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா எனும் தங்கள் கட்டுரைக்கு அனீஷ் கிருஷ்ண நாயர் எழுதி இருந்த முகநூல் குறிப்பைப் படித்தேன்.   இறைவனுக்கு அரசதன்மையைக் கற்பிப்பது மேற்குலகக் கோட்பாடு என அனீஷ் குறிப்பிடுகிறார். அரசத்தன்மை ஏற்றப்படல் என்பது எகிப்தியக்கோட்பாடு என அவர் மேலோட்டமாகக் குறிப்பிடுகிறாரோ என அஞ்சத் தோன்றுகிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126777

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-41

பகுதி ஆறு : விழிக்குமிழிகள் – 2 சகதேவன் விதுரரின் குடில் நோக்கி மூச்சிரைக்க ஓடினான். அவனை வழியில் கண்ட ஏவலர்களும் இளம் அந்தணர்களும் திகைத்து விலகினார்கள். விதுரரின் குடில்முன் ஏவலர் சிலர் நின்றிருந்தார்கள். அவன் அவர்களிடம் ஒப்புதல் பெறாமல் குடிலுக்குள் நுழைந்து “அமைச்சரே” என்று கூவினான். விதுரர் அவனை திகைப்பில்லாமல் நோக்கி “அமர்க, அரசே!” என்றபின் பிறரிடம் வெளியேறும்படி கண்காட்டினார். சகதேவன் அவர் கைகளை பற்றிக்கொண்டு “இந்த நீர்ச்சடங்கு நிகழலாகாது… இதை எவ்வண்ணமேனும் தடுத்து நிறுத்தியாகவேண்டும்” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126961