Daily Archive: October 24, 2019

கூடல்நாதனின் தாலாட்டு

சபரிமலையில் இரவில் ஐயப்பனுக்கு பூசை முடிந்து நடைசாத்துவதற்கு முன்னர் பாடப்படும் புகழ்பெற்ற பாடல் “ஹரிவாராசனம் விஸ்வமோகனம்“. 1975 ஆம் ஆண்டு வெளிவந்த சுவாமி அய்யப்பன் என்னும் படத்திற்காக இதற்கு மத்யமாவதி ராகத்தில் ஜி.தேவராஜன் இசை அமைத்தார். யேசுதாஸ் பாடினார். அதற்கு முன்னரும் பல இசைவடிவங்கள் இதற்கு இருந்தாலும் அன்றுமுதல் இப்பாடலே சபரிமலையில் பாடப்படுகிறது. இன்றும் கேரளத்தில் முதன்மையாக கேட்கப்படும் சில பாடல்களில் ஒன்று. இந்தப்பாடலின் ஆசிரியர் யார் என்று ஒரு விவாதம் ஐம்பதாண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்பாடலின் மூலவடிவம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126857

குருதி- கடிதம்

குருதி [சிறுகதை] அன்புள்ள ஜெ வணக்கம். உங்கள் கதையின் பாத்திரங்கள் உருவமாக சொல்லாக செயலாக உணர்வாக உயிபெற்று வந்து, மனமுடையவர்களா வாழ்ந்து, வாசகனை வாழவைத்துவிட்டு செல்கின்றனர். சேத்துக்காட்டார் தனது பேத்திதலையில் கைவைத்து ஆசிர்வதிக்கும்போது அவர் நம்முன் நம்முள் ஒருத்தராக வந்து நின்று மனம்படும் பாட்டை காட்டி தன் இருப்பை நம் மனத்திற்குள் ஆழ நின்று நெஞ்சம் நெகிழவைக்கின்றார். எட்டு ஆண்டுகள் காத்திருந்து நாயக்கர் வீட்டுக்கு அரிவாளுடன் சென்று நிற்கும்போது அவர் வெறும் கதை மாந்தர் இல்லை. ஓடுக்கப்பட்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126884

யுவன் என்னும் கதைசொல்லி

மதுரையில் 19-10-2019  அன்று சிற்றில் குழுமமும் மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ் உயராய்வு மையமும் இணைந்து நடத்திய யுவன் சந்திரசேகரின் படைப்புக்கள் பற்றிய ‘சொற்களின் பகடையாட்டம்’ என்னும் கருத்தரங்கில் பேசிய உரை

Permanent link to this article: https://www.jeyamohan.in/126919

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-40

பகுதி ஆறு : விழிக்குமிழிகள் – 1 சகதேவன் கண்விழித்தபோது அருகே சுருதசேனன் நின்றுகொண்டிருந்தான். அவன் அசையாமல் மைந்தனை உணர்ந்தபடி படுத்திருந்தான். அவனுடைய உடலின் வெம்மை. மூச்சின் மெல்லிய ஓசை. அதற்கும் அப்பால் அருகே ஓர் உயிர் இருப்பதை உயிர் அறியும் நுண்ணுணர்வு. சற்றே அசைந்தால்கூட அக்கணம் கலைந்துவிடும் என அவன் அறிந்திருந்தான். கலைவதற்கு முன்புவரை அது முற்றிலும் உண்மை. கலைந்த கணமே கனவு அல்லது மாயை. இமையசைவுபோதும். அல்லது உள்ளம் அசைந்தாலே போதும். பெரும்பாலான நாட்களில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126943