Daily Archive: October 23, 2019

யுவன் சந்திரசேகர், மதுரை, ஒருநாள்

  மதுரைக்கு வருவதை நான் தவிர்ப்பதற்கு பல காரணங்கள் உண்டு, ‘மதுரையை வெறுக்க இருபது காரணங்கள்’என ஒரு நீண்ட கட்டுரையே எழுதலாம். முதல்காரணம் உடைந்து சரிந்து சிரியப்போர்க்களம் போல காணப்படும் அதன் தெருக்களும் மையச்சாலைகளும். இரண்டாவது காரணம் எங்குமுள்ள புழுதி. கடைசியான காரணம் உணவகங்களில் கைகழுவுவதற்காக வைத்திருக்கும் அண்டாநீரில் கையை உள்ளே விட்டு அலம்பிக்கொண்டு போகும் வழக்கம். அதற்கு முந்தைய காரணம், போஸ்டர்களில் தெரியும் அரிவாள். ஆகவே கடைசிக்காரணத்திற்கு நான் பொதுவாக எதிர்வினை ஆற்றுவதில்லை. ஆனால் மதுரையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126922/

நீ மதுபகரூ…

சினிமாப்பாடல்களில் வரிகளின் இடம் என்ன? வரிகள் வழியாகவே இசை நினைவில் நின்றிருக்கிறது,எனக்கு. வரிகள் நன்றாக இல்லை என்றால் இசை உவகையூட்டுவதில்லை. தமிழின் பல மகத்தான பாடல்களை நான் கேட்பதே இல்லை. கீழ்மைநிறைந்த வரிகளால்தான். நல்ல வரிகள் அமைந்தால்கூட கேட்கக்கேட்க கொஞ்சம் சலிப்பூட்டுகின்றன அவை. ஓர் இடைவெளிக்குப்பின் அவற்றை கேட்டால் மட்டுமே வரிகள் புத்துயிர்கொள்கின்றன. ஆகவேதான் தெரியாத மொழிப்பாடல்களை மேலும் நுட்பமாக கேட்கமுடிகிறது. பாடல்களின் வரிகளில் பொருள்முழுமை பெறாத குழந்தைத்தனம் இருக்கவேண்டும். அல்லது எண்ணி முடிவடையாத ஒரு மர்மம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126790/

உரைகள் கடிதங்கள்

    அன்புள்ள ஜெ   இலக்கியம் குறித்த உங்கள் உரைகளை நான் அடிக்கடிக் கேட்பதுண்டு. பொதுவாக நீங்கள் செய்திகளை, தகவல்களை முக்கியமானதாகச் சொல்வதில்லை. ஒரு குறிப்பிட்ட பார்வையைச் சொல்கிறீர்கள். பெரும்பாலும் அந்தப்பார்வையை மட்டும் சொல்லி, இப்படி நீங்கள் பார்க்கலாம் என்று மட்டும் சொல்லி நின்றுவிடுகிறீர்கள்.   குறிப்பாக கவிதைகளைப்பற்றிய மூன்று உரைகளுமே மாறுபட்டவை. வெவ்வேறு கோணங்களை திறந்து காட்டுகின்றன அவை. முதல் உரையில் இன்றைய கவிதையின் டச் ஸ்கிரீன் தன்மையை, மெல்லத்தொட்டுக்காட்டும் இயல்பைச் சுட்டிக்காட்டுகிறீர்கள். இரண்டாவது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126750/

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-39

பகுதி ஐந்து : எஞ்சும் கனல் – 6 எப்போதுமே தனிமையை ஓர் அழுத்தமாகவே யுயுத்ஸு உணர்ந்து வந்தான். ஆனால் ஒன்று நிகழ்வதற்கு முன் அமையும் தனிமையை அவன் வியப்புடன் மீளமீள எண்ணிக்கொள்வதுண்டு. அப்போது மானுடர் அனைவருமே சற்று கைவிடப்பட்டவர்களாகத் தெரிவார்கள். அவர்களை ஆட்டுவித்த சரடுகள் அனைத்தும் தளர்ந்துவிட, செய்வதறியாமல் தளர்ந்து நின்றிருப்பார்கள். செயல் அவர்களில் விண்ணிலிருந்து மின் இறங்கி மரங்களைப் பற்றி எரியச்செய்வதுபோல நிகழ்கிறது. செயல்கள் அனைத்தையும் அவற்றுக்குரிய தெய்வங்களே இயற்றுகின்றன. பெருஞ்செயல்களை பெருந்தெய்வங்கள். அவன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126911/