Daily Archive: October 22, 2019

செட்டி நாட்டு மருமகள் மான்மியம்

செட்டிநாட்டு மாமியார் மான்மியம்     செட்டிநாட்டு மாமியாருக்கு மருமகள் சொல்லும் பதில். இந்த இருதரப்புக்கும் நடுவே ஒரு வாயில்லாப்பூச்சி வாழ்ந்துகொண்டிருக்கிறது. அதற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். வேறென்ன?   செட்டிநாட்டு மருமகள் வாக்கு   கண்ணதாசன்   அவ கெடக்கா சூப்பனகை அவ மொகத்தே யாரு பாத்தா? அவுக மொகம் பாத்து அடியெடுத்து வச்சேன் நான் பத்து வராகன் பணங்கொடுத்தார் எங்களய்யா எத்தனைபேர் சீதனமா இவ்வளவு கண்டவுக? ராமாயணத்திலயும் ராமனுக்கு சீதைவந்தா சீதனமா இவ்வளவு சேத்துவச்சா கொண்டுவந்தா? கப்பலிலே ஏத்திவச்சா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8514

திண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்

  திண்டுக்கல் காந்திகிராமம் காந்தியப் பல்கலைக்கு நான் வருவது மூன்றாவது முறை . இன்றைய காந்தி வெளியான நாட்களில் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களின் ஆதரவில் மார்க்கண்டன் அவர்களால் அழைக்கப்பட்டு உரையாற்ற வந்திருக்கிறேன். அதற்கு முன்னர் 2004ல் பார்வையாளனாக வந்தேன். இம்முறை குக்கூ நண்பர்களின் அழைப்பு. கிருஷ்ணம்மாள் – ஜெகன்னாதன் அவர்களின் வாழ்க்கை வரலாறான ‘ ‘ மற்றும் நண்பர் பாலசுப்ரமணியம் முத்துசாமி எழுதி என் தளத்தில் வெளியான இன்று காந்தியவழியில் பெரும்பணியாற்றிய ஆளுமைகளைப் பற்றிய நூலான ‘இன்றைய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126888

வாசல்பூதம் – கடிதங்கள்

வாசல்பூதம் அன்புள்ள ஜெ,   நலம்தானே? வாசல்பூதம் ஒரு நல்ல கட்டுரை. உங்கள் குறிப்பும் லக்ஷ்மி மணிவண்ணனின் குறிப்பும் சேர்ந்து ஒரு நல்ல கட்டுரையாக ஆகிவிட்டன. நான் இலக்கியத்தை வாசிக்க ஆரம்பித்ததில் இருந்தே ஆர்வத்துடன் கவனிக்கும் விஷயம் அதில் அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் ஈடுபடுகிறார்கள் என்பது. அவர்களுக்கு இலக்கியத்தின் நுட்பங்களோ அழகோ முக்கியமே கிடையாது. அவர்கள் அதில் பார்ப்பதெல்லாம் தங்களுக்கு உடன்பாடான கருத்து இருக்கிறதா என்று மட்டும்தான். அதை அவர்கள் ஒரு நிபந்தனையாகவே வைக்கிறார்கள்   அவர்கள் அதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126794

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38

பகுதி ஐந்து : எஞ்சும் கனல் – 5 குடிலை அடைந்து மரவுரி விரிக்கப்பட்ட மூங்கில் மஞ்சங்களில் அமர்வது வரை இளைய யாதவரும் அர்ஜுனனும் ஏதும் பேசிக்கொள்ளவில்லை. கால் தளர்ந்து பரசுராமரின் முற்றத்தில் அமர்ந்து அழுத அர்ஜுனனை இளைய யாதவர் தோள்தழுவி அணைத்து அழைத்துவந்தார். அவன் விம்மிக்கொண்டே இருந்தான். அவர் ஆறுதாக ஒரு சொல்லும் உரைக்கவில்லை. அவன் ஓய்ந்து மஞ்சத்தில் படுத்துக்கொண்டதும் “உன் அழுகை நன்று… சில எல்லைகளை கடந்துவிட்டாய் என்பதற்கான சான்று அது” என்றார். அர்ஜுனன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126849