Daily Archive: October 21, 2019

செட்டி நாட்டு மாமியார் மான்மியம்

‘நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’ கண்ணதாசன் கவிதைகளில் என்னைக்கவர்ந்த கவிதைகளில் ஒன்று இது. இத்தகைய மரபுக்கவிதைகளில் நுண் அர்த்தங்களும் ஆழ்பிரதிகளும் இல்லை. நேரடியானவை. இவற்றில் உள்ள சரளமான மொழியோட்டமே முதன்மையான சுவை. இந்தக்கவிதையில் மண்ணின் அடையாளம் உள்ளது. கவிஞரின் அபாரமான நகைச்சுவை உணர்ச்சி உள்ளது. அந்த மாமியாரின் மாய்மாலமெல்லாம் சொற்களிலேயே வெளிப்படுகிறது. கவிமணியின் நாஞ்சில்நாட்டு மருமக்கள் வழி மான்மியத்தை முன்னுதாரணமாகக் கொண்டு கவிஞர் இதை எழுதியிருக்கிறார்   செட்டிநாட்டு மாமியார் வாக்கு கண்ணதாசன்   நல்லாத்தான் சொன்னாரு நாராயணச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8512/

ஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி

  இரு காந்திகள். இன்றைய காந்திகள் சுதந்திரத்தின் நிறம் காந்திகிராம் பல்கலைக்கழகத்தை ஒட்டியுள்ள கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அம்மாவின் ஊழியரகத்துக்குக் கடந்த சில ஆண்டுகளாகவே சென்று வருகிறோம். ஊழியரகம் காந்திகிராம் பல்கலைக் கழகத்துக்கும் முன்னரே கட்டப்பட்டது. ஜெகந்நாதனும், இந்தியா வந்து குடியேறி தன்னலமற்ற காந்தியப் பணியாற்றிய அமெரிக்க மிசனரியான கெய்த்தானும் சேர்ந்து அருகிலிருந்த மலையிலிருந்து பெரும் கற்களைத் தாமே சுமந்து வந்து கட்டிய கட்டிடம் இது. கஃபார் கான் முதல் மார்டின் லூதர் கிங் வரை பலரும் வந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126886/

குற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்

குற்றவாளிக்கூண்டில் மனு வாங்க எஸ்.செண்பகப்பெருமாள் என்பவர் எழுதிய குற்றவாளிக்கூண்டில் மநு எனும் நூல் மநுஸ்மிருதி குறித்த சிறு விளக்க நூல். தற்போது சாதி, தீண்டாமை குறித்த விவாதங்கள் வரும்போது மநுவும் உடன் வந்துவிடுகிறார். மநுஸ்மிருதியே தீண்டாமைக்கும் சாதிக்கொடுமைக்கும் மூலகாரணம்; மநுஸ்மிருதியே இந்தியாவின் மையமான சட்டவிதிகளாக இருந்துள்ளன என்பதுபோன்ற பல்வேறு வாதங்களை இந்த மநுவை எதிர்ப்பவர்கள் முன்வைக்கிறார்கள். இந்தியாவில் வர்ண முறை நடைமுறையில் இருந்தது, பின்னர் அது மாறாத சாதி சமூகமாக உருமாறியது, வேதங்களை பாதுகாக்கும் நோக்குடன் மநுஸ்மிருதி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126780/

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37

பகுதி ஐந்து : எஞ்சும் கனல் – 4 அன்று பகல் முழுக்க தேரில் அவர்கள் சென்றுகொண்டே இருந்தார்கள். அந்த திசையை ஏன் இளைய யாதவர் தெரிவுசெய்தார் என அவன் வியந்தான். கங்கைக்கு இணையாகவே அது சென்றது. நெடுந்தொலைவில் எங்கோ ஆறு இருந்தது. வழியிலோடிய ஓடைகள் அனைத்தும் அதை நோக்கியே சரிந்தன. பலகைகளைக்கொண்டு ஓடைகள்மேல் பாலம் அமைக்கப்பட்டிருந்தது. சுட்ட செங்கற்களால் காட்டாற்றின்மேல் பாலம் கட்டப்பட்டிருந்தது. ஒவ்வொரு பாலத்தின் அருகிலும் மரத்தின்மேல் ஒரு காவல்மாடத்தில் சில காவலர் இருந்தார்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126846/