Daily Archive: October 20, 2019

வெக்கை, அசுரன், வன்முறை

பூமணி- மண்ணும் மனிதர்களும்   அன்புள்ள ஜெ,   பூமணியின் வெக்கை பற்றிய ஆய்வுக்கட்டுரையில் நீங்கள் அந்நாவல் அன்பைப்பற்றிப் பேசுவது என்று வரையறை செய்கிறீர்கள். சிறுவன் கொலைசெய்துவிடுகிறான். அவனுடைய உறவும் சாதிசனமும் அவனுக்காகக் கொள்ளும் பரிவும், அவனை அவர்கள் பொத்திப்பொத்திப் பாதுகாப்பதும்தான் அந்நாவல். அந்த கரிசல் நிலமும் ஒரு தாய்க்கோழி போல அவனை பொத்திப் பாதுகாக்கிறது. அந்த உறவுகளும் அந்த நிலமும் ஒன்றுதான். அவ்வளவுதான் நாவலில் பேசப்படுகிறது   அசுரன் பேசுவது பழிவாங்குவதன் கதை. நிலத்திற்கான ரத்தம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126767

அமெரிக்கா- கடிதம்

புகைப்படங்கள் ஜெமோ அவர்களுக்கு,   அதற்குள் ஒரு வாரம் கடந்து விட்டது. இருமை மனநிலை.. ஒவ்வொரு கணமும் நினைவில் இருப்பதாகவும், இல்லாததாகவும்.. ஊழ்கத்தில் ஒரு நொடியில் விரிந்துக்கொள்ளும் சொல்லை போல், அன்றாடம் உங்களை கைக்கருகில் வைத்திருந்த  எனக்கு, ராஜன் உதவியால் பட்டென்று திறந்துக்கொண்டது பல வருடங்களாய் ஆசைப்பட்ட உங்களோடு ஒரு பயணம். விடுமுறைக்கு பாட்டி வீட்டிற்கு கிளம்பும் சிறுவனாய் புறப்பட்டிருந்தேன். நூலகத்தில் நடந்த நிகழ்ச்சியை தவற விட்ட முள் குத்திக்கொண்டிருந்தாலும், இன்னும் சில மணித்துளிகளில் உங்களை காணும் மகிழ்ச்சியில் குதித்துக்கொண்டிருந்தேன். வரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126835

கீதை கடிதங்கள்

  கல்விச்சாலையில் இந்திய மரபிலக்கியங்கள் பக்தியும் அறிவும் பக்தியும் அறிவும் கிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா? கீதையை எப்படிப் படிப்பது? ஏன்?     வணக்கம் ஜெ, தி.க வின் அருள்மொழி ஒரு விவாதத்தில் ‘உபநிடதங்களும், பகவத் கீதையும் தத்துவ நூல்கள் அல்ல; அவை இறையியல் நூல்கள்‘ என்றார். நீங்கள் கீதையை தத்துவ நூல் என்றே குறிப்பிட்டு வந்துள்ளீர்கள். இவையிரண்டையும் எப்படி பிரித்துப் புரிந்துகொள்வது ? விவேக்ராஜ்   அன்புள்ள விவேக்ராஜ்,   கீதையை இறையியல் நூல்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126775

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-36

பகுதி ஐந்து : எஞ்சும் கனல் – 3 தேர் கிளம்பியதுமே யுயுத்ஸு ஒன்றை உணர்ந்தான். அது போருக்குரிய தேரல்ல. சீரான நெடும்பாதையில் விரைந்து செல்லக்கூடியதும் அல்ல. இரட்டைப்புரவி கட்டப்பட்டது. மேடுபள்ளமான சிறிய தொலைவுக்கு செல்வதற்குரியது. அரசகுடியினர் பிறரறியாது ஊர்வதற்குரிய மூடுதிரைகள் அமைக்கப்பட்டது. அதன் நுகம் தோல்பட்டையால் தளர்வுற தேருடன் இணைக்கப்பட்டிருந்தது. சகடங்கள் மையக்கூடத்துடன் நெகிழ்வாக பொருத்தப்பட்டிருந்தன. அடியில் வளைந்த ஏந்துவிற்களுக்கு நடுவே இழுத்துக் கட்டப்பட்ட தோல்பட்டைகளின் மேல் அதன் மேற்கூண்டு அமைந்திருந்தது. அதை தொட்டில் என்றே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126824