Daily Archive: October 16, 2019

வெட்டீருவேன்!

ரயில் பயணத்தில் நான் வெறும் செவிகள். இம்முறை செவிகளை அறைந்து ஈ பறக்கும் ஓசையெழ ஒரு கூச்சல் அருகே எழுந்த்து. “லே, தாளி, வெட்டீருவேன். வெட்டிப் பொலிபோட்டிருவேன்…என்னங்கியே? எனக்க கிட்ட சோலிய காட்டுதியா? ஏல சரக்கு வருமா? வராதா? ஏல வருமா வராதா? அதைச்சொல்லு. என்னது? பின்ன என்ன மசுத்துக்குலே செக்க பேங்கிலே போட்டே? ஏலே என்ன்ன்னுலே நெனைச்சே? வெட்டீருவேன்! வெட்டி சரிச்சிருவேன். ஆமா” மூச்சுவாங்க செல்பேசியை அமுக்கிவிட்டு “வெளையாடுதானுவ” கருப்பான, குண்டான, முடியை ஒட்டவெட்டிய, மீசை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126715/

கன்னிநிலம் பற்றி…

  கன்னிநிலம் வாங்க அன்புள்ள ஜெயமோகன், தமிழில் நவீன இலக்கியத்தில் நான் வாசித்த முதல் காதல் கதை கன்னி நிலம்தான். நவீனம் கூரான கத்தியொன்றால் உறவை அறுத்து அறுத்து அதிலும் வலுவற்ற புண்ணாகிப்போன ஒரே இடத்தை அறுத்து அறுத்து ‘ஏதுமில்லை’ என கைவிரிக்கிறது. சோர்வின் பெருமழை பெய்துகொண்டே இருக்கிறது. கொஞ்ச நாள் முன்பு ஸ்ரீரங்க வின் முதலில்லாததும் முடிவில்லாததும் வாசித்தேன். மீண்டும் கூர் கத்திதான். காதலும் காமமும் திசையறியாது சுற்றி சுற்றி சோர்வதன் எழுவதன் காட்சி. எழுச்சியின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126705/

கீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம்

  காடு அமேசானில் வாங்க காடு வாங்க குட்டப்பனின் வாழ்க்கையை வாழவேண்டும் என்கிற ஆசை கொண்டதனாலேயே கிரிதரன் தன் வாழ்வை தொலைக்கிறான் என்கிற எண்ணம் வந்தபோது காலை தூக்க கனவிலிருந்து எழுந்தமர்ந்தேன். உண்மைதானா என்கிற எண்ணம் நாள் முழுவதும் தொடர்ந்தது. அப்படிதான் இருக்க வேண்டும் என்று நினைக்கும்போது இஞ்சினியர் அய்யரையும் அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என நினைத்தேன். குட்டப்பனின் தெளிவு, எல்லாவற்றிற்கும் தீர்வு காணும் குணம், சோர்வேயறியாத உடல்பலம், எல்லோருக்கும் பயன்படும் அவன் சேவைகள் கண்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126681/

வெக்கை பற்றி…

வெக்கை வாங்க   ஜெமோ,   ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டுமொரு கடிதம். அமெரிக்க பயணம், இடைவிடாத வெண்முரசு மற்றும் கிடைக்கும் இடைவெளியில் சினிமா வேலை என்று பரபரத்துக் கொண்டிருக்கும் உங்களுடைய செயலூக்கம் என்னைப் போன்றவர்களுக்கு ஒரு உற்சாக டானிக்.   சமீபத்தில் படித்த வெக்கை நாவல் பற்றிய என்னுடைய அவதானிப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.   https://muthusitharal.com/2019/10/12/வெக்கை-பற்றி/   அன்புடன் முத்து

Permanent link to this article: https://www.jeyamohan.in/126668/

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-32

பகுதி ஐந்து : எஞ்சும் கனல் – 2 யுயுத்ஸு தனக்குரிய சிறுகுடிலுக்குள் சென்று ஆடை மாற்றிக்கொண்டிருந்தபோது ஏவலன் வந்து சிற்றமைச்சர் பாஷ்பரின் வருகையை அறிவித்தான். ஓய்வெடுப்பதற்காக மஞ்சத்தை நோக்கியபடிதான் அவன் உள்ளே நுழைந்திருந்தான். பெருமூச்சுடன் ஆடையை சீரமைத்துவிட்டு “அனுப்புக!” என்று யுயுத்ஸு சொன்னான். பாஷ்பர் உள்ளே வந்து தலைவணங்க யுயுத்ஸு வணங்கி அவரை அமரும்படி சொன்னான். தரையில் விரிக்கப்பட்ட பாயில் அவன் அமர்ந்ததும் பாஷ்பர் எதிரில் அமர்ந்தார். இளையவரான பாஷ்பர் சற்று நிலைகொள்ளாதவர் போலிருந்தார். அஸ்தினபுரியிலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126725/