Daily Archive: October 14, 2019

வாசல்பூதம்

 “அதுமேலே ஏறி நிக்கணுமா?” லக்ஷ்மி மணிவண்ணனின் குறிப்பை சிரிப்புடன் வாசித்தேன். [கீழே] அவர் குறிப்பிடும் இந்தக் கூட்டத்தில் நானும் கலந்துகொண்டேன் என நினைக்கிறேன். கூட்டம் முடிந்த்துமே எனக்கும் சிலபல கண்டனங்கள், அன்பான எச்சரிக்கைகள். ஏனென்றால் நான் போதுமான அளவு கண்டிக்கவில்லையாம். முகநூலில்கூட பலர் எழுதியிருந்தார் என்றார்கள் கண்டிப்பதற்கு என ஒரு மொழி இருக்கிறது. சுந்தர ராமசாமி ஒரு புளியமரத்தின் கதையில் எழுதியதுபோல ‘லின்லித்கோவுக்குச் சவால். தைரியமிருந்தால் இங்கே வா. இங்கே நாகர்கோயில் மணிமேடையில் நின்று எனக்கு பதில்சொல். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126656/

சண்டேஸ்வரர் கலைக்களஞ்சியம்- கடிதம்

இனிய ஜெயம்   கொஞ்சநாள் தமிழ் எண்ம நூலகம் பராமரிப்புப் பணிகள் காரணமாக,ஓய்ந்து நின்றிருந்தது.தற்போது செயல்படத் துவங்கிய நிலையில், நான் முன்பு வாசித்த நூலின் சுட்டியை உயிர்ப்பிக்க முடிந்தது.   திருவாவடுதுறை ஆதீனம் வெளியீடான சண்டேசுவரர் கலைக்களஞ்சியம். சண்டேஸ்வரர் எனும் தனித்த வழிபாட்டு மரபின் புராணம் வரலாறு சிற்ப வழிபாட்டுமுறை   போன்ற  அனைத்து அலகுகளும்  குறித்த விவரங்கள் பல்வேறு படங்களுடன் அடங்கிய முழுமையான நூல்.   https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZteluU2&tag=%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D#book1/   இந்த நூலின் அட்டைப்படமே சண்டேஸ்வர அனுக்ரக மூர்த்திதான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126589/

ஆகுலோ ஆகுனை…

முகில்செய்தி முகில்செய்தி- கடிதங்கள் அன்புள்ள ஜெ, நலம் தானே. மேகசந்தேசம் பதிவு எனக்குள் எத்தனையோ நினைவுகளை கிளர்த்தியது. முக்கியமாக… ‘ஆகுலோ ஆகுணை’ பாடலில்  வரும் இந்த இரு வரிகள். “ஆகலா தாகமா சிந்தலா வந்தலா, ஈ கரணி வெர்ரினை ஏகதம திருகாட” (பசியா தாகமா கவலையா கலக்கமா… இப்படி ஒரு பித்த்தியாய்  தனிமையில் திரிகையில் …) இந்த வரிகளை முதலில் ஒரு தெலுங்கு கதை தொகுப்பின் முதல் பக்கத்தில் பார்த்தேன். இயக்குனர் வம்சியின் கதைகள் அவை. இந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126643/

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30

பகுதி நான்கு : கழுநீர்க் கரை – 11 இரும்புப் பாவை மடங்கி தன் மடியில் விழுந்ததும் திருதராஷ்டிரர் தோள் தளர்ந்தார். இரு கைகளும் உயிரிழந்தவை என பக்கவாட்டில் சரிய, பாவை அவர் மடியிலிருந்து நழுவி தரையில் கால் மடிந்து சரிந்து ஓசையுடன் விழுந்தது. என்ன நிகழ்ந்தது என்று அறியாமல் அனைவரும் விழி திறந்து நோக்கி நிற்க திருதராஷ்டிரர் இரு கைகளையும் தலைக்கு மேல் விரித்து விரல்களை அகற்றி விரித்து காற்றைப் பற்ற முனைவபர்போல அசைத்தார். குளிர்கண்டவர்போல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126683/