Daily Archive: October 13, 2019

பக்தியும் அறிவும்

சிலைகளை நிறுவுதல் அன்புள்ள ஜெ, நலமா? தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கும் கடிதங்களும் விவாதங்களும் புதியவகையில் எண்ணச் செய்கின்றன. முன்பெல்லாம் இந்த விஷயங்களைப்பற்றிய கேள்விகள் உள்ளத்தில் இருந்தாலும் அவற்றை இத்தனை தெளிவாகக் கேட்டுக்கொண்டதில்லை. அவற்றுக்கு இப்படியெல்லாம் பதில் யோசித்ததும் இல்லை. என்ன காரணம் என்றால் இவற்றையெல்லாம் ஒரு அன்றாடப்பார்வையிலேயே பார்த்துவந்தோம். இவற்றின் வரலாறு, குறியீடு எதையுமே யோசித்ததில்லை. ‘அறிவில்லா முட்டாளுங்க பசுவோட குண்டியக் கும்பிடுறாங்க’ என்ற அளவில்தான் நம்பிக்கைகளையும் சடங்குகளையும் பார்த்தோம். இன்றைக்கு யோசிக்கையில் செடி முளைவிடும் வயலை கும்பிடலாம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126640

நிலம்

  இருபத்திரண்டு வருடங்களுக்குப்பின் ராமலட்சுமிக்கு பொத்தைமுடி ஏறிப்போய் வெட்டுவேல் அய்யனாரைச் சேவிக்கவேண்டுமென்று ஆசை வந்தது. எப்போது அவளுக்குள் அந்த எண்ணம் வந்தது என்று அவளுக்குத்தெரியவில்லை. உறைகுத்தின தோசைமாவு மறுநாள் காலை மூடியைத் தள்ளிவிட்டுப் பூத்துமலர்ந்திருப்பதுபோல காலையில் அவள் அது தன்னிடமிருப்பதை உணர்ந்தாள். அவள் முகம் பூரித்திருப்பதைக்கண்டு அன்னமயில் ‘ஏனம்மிணி, மொகத்திலே எளவெயிலுல்ல அடிக்குது?’ என்று கேட்டாள். ராமலட்சுமி புன்னகைத்துக்கொண்டாள். அடுத்தக்கணமே மனம் கூம்பியது. முகத்தை சுவரை நோக்கித் திருப்பிக்கொண்டாள். நாலைந்துவருடம் முன்புகூட காலையில் அப்படி அகம்பூரித்திருந்தால் நாலைந்துநாள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34345

நேரு – ஒரு கடிதம்

  அன்புள்ள ஜெ,   காந்தி, சுதந்திரம், நேரு, காலனியாக்கம் என்பது போன்ற விஷயங்களில் எனது எண்ணங்களை இரண்டாக தொகுத்துக்கொள்ளமுடியும்; உங்களது கட்டுரைகளை, உரைகளை, நூல்களை வாசித்து, கேட்டு அறிவதற்கு முன் எனக்கு இருந்த புரிதல்கள் எல்லாம் தேனீர் கடைகளின் உரையாடல்கள் வழியாக வந்த ஒரு அறிதல் (அதை அறிதல் என்று கூட சொல்லமுடியாத ஒரு விதமான தவறான புரிதல்கள்). பதின்ம வயதில் வரலாறு மற்றும் குடியியல் பாடங்களில் காந்தி, நேரு, போஸ் பற்றி படிக்க நேரும்பொழுது, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126609

வருவது வரட்டும்!- கடிதம்

“வருவது வரட்டும்!” எவ்வாறோ அவ்வாறே! அன்புள்ள ஜெ,   எனக்குத் தாலாட்டாகப் பாடப்பட்ட மெட்டு இந்த “சின்னப் பெண்ணான போதிலே” பாடல், ஆனால் வரிகள் என் அம்மாவுடையது. என் தம்பி பிறந்த பின் அதே பாடல் ஒரு சில மாறுதல்களுடன்  அவனுடைய தாலாட்டு ஆகியது.   இதன் ஆங்கில வடிவத்தை உங்கள் கட்டுரை வழி தான் அறிந்தேன்.  தொடர்ந்து இணையத்தில் தேடியதில் பானுமதி அம்மா அவர்கள் பாடிய “Que sera sera” கிட்டியது.  கற்பகம் திரைப்படம்  தெலுங்கில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126612

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-29

பகுதி நான்கு : கழுநீர்க் கரை – 10 திருதராஷ்டிரரின் குடில் நோக்கி நடக்கையில் சற்று தயங்கி காலெடுத்து வைத்த நகுலன் சகதேவனின் தோளுடன் தன் தோளால் உரசிக்கொண்டான். அக்கணநேரத் தொடுகை அவனுள் இருந்த அழுத்தம் அனைத்தையும் இல்லாமல் ஆக்கி, எடையில்லாமல் உணரச்செய்தது. அவ்விடுதலை அளித்த இனிமையில் அவன் நின்றுவிட்டான். சகதேவன் திரும்பிப் பார்த்தான். நகுலன் இரண்டு அடி எடுத்து வைத்து மீண்டும் சகதேவனுடன் இணையாக நடக்கையில் இயல்பாக என கையை நீட்டி தன் இடக்கை விரல்களால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126603