Daily Archive: October 12, 2019

திண்டுக்கல்லில் நூல் வெளியீட்டு விழா

“கீழ்வெண்மணியில், அந்த இரவு நில உரிமையாளர்கள் 200பேர் கையில் அருவாள், துப்பாக்கி, தீப்பந்தம் சகிதம் திமுதிமுவென புறப்பட்டு வந்தார்கள். கண்ணில் தென்பட்டவர்களை எல்லாம் வெட்டிச் சாய்த்து குடிசைகளையெல்லாம் தீவைத்துக் கொளுத்தினார்கள். சேரியில் இருப்பவர்கள் எல்லோரும் உயிருக்குப் பயந்து ஓடி ஒளிந்தார்கள். அப்பொழுது, வயதானவர்களும் பெண்களும் சிறுவர்களும் ஒரு குடிசைக்குள் ஒளிந்துகொண்டிருந்தனர். தீ வைத்தபடியே வந்த கும்பல் அந்தக் குடிசைக்கதவைப் பூட்டிவிட்டு, பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துவிட்டுப் போய்விட்டார்கள். உள்ளே இருந்த 44 பேரும் உயிரோடு வெந்து சாம்பலானார்கள்.   அடுத்தநாள் நாங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126646/

யக்ஷி உறையும் இடம்

  கேரளா தொடர் கொலைகள்: மேலும் பலரைக் கொல்ல திட்டமிட்டிருந்த ஜோலி.. அதுவும்? 6 கொலை செய்தும் அடங்காத ஜோலி.. மேலும் 2 பெண் பிஞ்சுகளை கொல்லவும் சதி! கேரளா தொடர் கொலை வழக்கு: கைது செய்யப்பட்டுள்ள ஜோலி உள்பட 3 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி   நாலைந்து நாட்களாகவே தொடர்ச்சியாக நான் கவனித்துவரும் செய்தி கேரளத்தில் ஜோலியம்மா ஜோசஃப் என்னும் ஜோலி  தாமஸ் செய்த தொடர்கொலைகள். சும்மாவே கேரளத்தில் செய்திப்பஞ்சம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126622/

ரே – கடிதம்

இசை- கடிதம் ‘வீட்டவிட்டு போடா!’ மதிப்புக்குரிய ஆசிரியருக்கு, வணக்கம். ரே சார்லஸ் அவர்களின் “I got a woman”, நீங்கள் கேட்டிருப்பீர்கள் என்று என்னுகிறேன்.  https://youtu.be/LcvtUypT5xA பாட்டில் , காதலியிடம், நான் உனது அன்பான ‘சிறு நாய்’ என்று கூறி, நாய் போலவே குரைத்து காட்டுவார். நீங்கள் கூறும் ‘தாளம்’ எப்போதுமும் ரே-விடம், உன்டு என்று நினைக்கிறன். கையிரண்டும் பியானோவில் வாசிக்க , இரண்டு கால்களும் தரையை மாற்றுமொரு பியானோவாக உருவகம் செய்து வாசிப்பதை காணலாம் . …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126586/

பூமணி- மண்ணும் மனிதர்களும்

  பூமணிக்கு விருது அளிப்பதாக முடிவுசெய்தபின்னர் அச்செய்தியை அவரிடம் நேரில் சொல்வதற்காகக் கோயில்பட்டி சென்றிருந்தேன். அதற்கு முன்னர் அவரை நான் ஒருமுறைதான் நேரில் பாத்திருக்கிறேன், ஏறத்தாழ ஏழு வருடங்களுக்கு முன்னர் வண்ணதாசனின் மகள் திருமணத்தில். ஒரு எளிமையான கைகுலுக்கல். அப்போது பூமணி ஓர் எழுத்தாளர் போலிருக்கவில்லை, நானறிந்த பல நூறு அரசு அதிகாரிகளில் ஒருவரைப்போலிருந்தார். நேர்த்தியான ஆடைகள். படியவாரிய தலைமயிர். கண்ணாடிக்குள் அளவெடுக்கும் கண்கள். மெல்லிய குரலில் பேச்சு. நிதானமான பாவனைகள். ஒரு சில சொற்கள் பேசிக்கொண்டோம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22943/

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-28

பகுதி நான்கு : கழுநீர்க் கரை – 9 யுதிஷ்டிரனின் குடிலுக்கு வெளியே நகுலன் காத்து நின்றிருந்தான். அவனருகே சகதேவன் நின்றிருக்க சற்று அப்பால் வேறு திசை நோக்கியபடி பீமன் மார்பில் கைகளைக் கட்டியபடி நின்றிருந்தான். மேலும் அப்பால் சிறிய முள்மரம் ஒன்றுக்கு அடியில் இருந்த உருளைக்கல் மீது அர்ஜுனன் அமர்ந்து முழங்காலில் கைமுட்டுகளை மடித்தூன்றி தலைகுனிந்து நிலத்தை பார்த்துக்கொண்டிருந்தான். அவன் குழல்கற்றைகள் சரிந்து முகம் மீது தொங்கிக்கிடந்தன. அவன் குரலைக் கேட்டே எவ்வளவு நாள் ஆகிறது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126590/