Daily Archive: October 10, 2019

குருதி [சிறுகதை]

சேத்துக்காட்டார் என்று சொன்னபோது ஊரில் எவருக்கும் யாரென்றே தெரியவில்லை. ‘சேக்கூரானா? மாடு தரகு பாப்பாரே?’ என்று கலப்பையும் கையுமாகச் சென்றவர் கேட்டார் சுடலை ‘இல்லீங்க..இவரு கொஞ்சம் வயசானவரு….’ என்றார் ‘வயசுண்ணா?’ ‘ஒரு எம்பது எம்பத்தஞ்சு இருக்கும்’ ‘இந்தூரா?’ ‘ஆமாங்க..’ ‘அப்டி யாரு நம்மூரிலே?’ மேலும் கீழும் பார்த்துவிட்டு ‘நமக்கு அவரு என்னவேணும்?’ என்றார் சுடலை அரைக்கணம் தயங்கிவிட்டு ‘நான் அவருகூட செயிலிலே இருந்தேன்’ என்றார் கலப்பைக்காரர் முகம் மாறியது. ‘நமக்கென்னாங்க தெரியும்…நானே குத்தகைக்கு எடுத்து ஓட்டிட்டிருக்கேன்…வரட்டுங்களா?’ என்றார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34372/

காடு இரு கடிதங்கள்

    காடு அமேசானில் வாங்க காடு வாங்க ,அன்புள்ள ஜெ   வணக்கம். நான் மாதவி,   வயது 25. சில மாதங்களாக தங்கள் இலக்கியங்களை வாசித்து வருகிறேன். சமீபத்தில் தங்கள் காடு நாவலை முழுவதுமாக படித்தேன். பல நாட்களாக அதிலிருந்து மீள முடியவில்லை. கிரிதரன் போல நானும் முதலில் காடு கண்டு பயந்தேன். பின்பு காடு எனக்குள் மெல்ல விரிவடைய ஆரம்பித்தது.காடு என்பது குறுகிய எல்லைகளுக்குள் அடைக்க முடியாது,நம் மனமும் அப்படியே.   பருவ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126388/

இசை- கடிதம்

வீட்டவிட்டு போடா!’ அன்பின் ஜெயமோகன் உங்களது அமேரிக்க சிறு – வரவு நல்ல முறையில் அமைந்தது கண்டு மகிழ்ச்சி. அமேரிக்க இசை பற்றிய உங்கள் பதிவு நன்று. இன்னொரு தடவை வந்து போங்கள். நியு ஓர்லியன்ஸ், மெம்பிஸ் என அமேரிக்க இசையை கொஞ்சம் நேரடியாக நுகர்ந்து பின் செல்லலாம். நானும் இதை சாக்காக வைத்து கொஞ்சம் நாள் கான்கிரிட், கலவை என பார்க்காமலிருக்கலாம். ப்ளூஸ் கேட்டு, கேட்டு நம் மனதில் பதிந்துவிட்டால் வேறு இசை வகைகளை கேட்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126552/

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-26

பகுதி நான்கு : கழுநீர்க் கரை – 7 நகுலன் யுதிஷ்டிரனின் அவைக்களத்திற்கு உடனே செல்லவேண்டும் என்றுதான் தன் குடிலுக்கு வந்தான். நீராடி ஆடைமாற்றிச் செல்லலாம் என்று தோன்றியது. காலையிலேயே உடல் வியர்வையில் நனைந்து ஆடைகளை ஈரமாக்கியது. புலரொளி மறைந்ததுமே எழுந்த இளவெயில் கீற்றுக்கள் காட்டுக்கு அப்பாலிருந்து இலைகளை ஊடுருவிச் சாய்ந்து வந்து விழுந்து வெட்டி அகற்றிய புதர்களின் வேர்கள் விரல்கள் என, நரம்புகள் என பரவியிருந்த சிவந்த ஈரமண்ணில் விழுந்து மெல்லிய புகையை கிளப்பிக்கொண்டிருந்தன. அவன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126567/