Daily Archive: October 6, 2019

கீதையை எப்படிப் படிப்பது? ஏன்?

அன்புள்ள ஜெயமோகன்,   பகவத் கீதையைப்பற்றி இப்போது நடந்துவரும் விவாதங்களை கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இந்துமதத்தின் பிரதான நூலான பகவத் கீதை ஒரு சாதிவெறிபரப்பும் நூலா ? சுயநலத்துக்காக கொலை செய்வதை அது வலியுறுத்துகிறதா ? என்னைப்போன்றவர்களுக்கு இந்தவகையான சர்ச்சைகள் மிக்க குழப்பத்தை அளிக்கின்றன. கீதையைப்பற்றி இப்போது தமிழில் மிகவும் எதிர்மறையான பார்வையை அளிக்கும் நூல்கள் பல வந்துள்ளன. அவற்றைப்படித்துவிட்டுச் சிலர் ஏளனமும் கண்டனமும் செய்கிறார்கள். பகவத் கீதை உரைகளில் அதற்கான பதில் உண்டா ? அவற்றில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35/

காடு – ஒரு வாசிப்பும் மறு வாசிப்பும்- கலைச்செல்வி

காடு அமேசானில் வாங்க காடு வாங்க   இருவாசிப்புகளுக்கு இடைப்பட்ட காலம் கிட்டத்தட்ட நான்காண்டுகள். இந்த நான்காண்டுகளில் நிறைய புத்தகங்கள் வாசித்தாயிற்று. நிறைய எழுதியுமிருக்கிறேன். இடையில் நகர்ந்த காலங்களுக்குள் என்னை ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள தோன்றுகிறது. பொதுவாக ஆழ்ந்த வாசிப்பு அல்லது தன்னை ஒப்புக்கொடுக்கும் வாசிப்பு நேரும்போதெல்லாம் புத்தகத்தின் முதல் பக்கத்தில் அல்லது பின்பக்கத்திலிருக்கும் வெற்றுத்தாளில் யார் யாருக்கு உறவு, அவர்களின் பெயர்கள், பிடித்தமான அல்லது கவனம் கோரும் பக்கங்கள் குறித்த பென்சில் குறிப்புகள் போன்றவற்றறை எழுதிக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126386/

விந்தையான மனிதன் விந்தன்-வளவ. துரையன்

கசப்பெழுத்தின் நூற்றாண்டு புரட்சிப்பத்தினி திராவிட இயக்க இலக்கியம் – சாதனைகளும் மிகைகளும் ”இருப்பவனைப் பற்றி எழுதி அவன் பணத்துக்கு இரையாவதை விட, இல்லாதவனைப் பற்றி எழுதி அவன் அன்புக்கு உண்மை இரையாவதே மேல்” என்னும் குறிக்கோளுடன் இறுதிவரை இலக்கியப் பணியாற்றியவர்தாம் விந்தன். விந்தன் என்னும் புனைபெயரில் எழுதிய கோவிந்தன் 22-09-1916-ஆம் ஆண்டு பிறந்தார். வேதாசலம்-ஜானகியம்மாள் இணையருக்கு மூத்த மகனாக அவர் செங்கற்பட்டு மாவட்டம் நாவலூர் என்ற கிராமத்தில் பிறந்தார். அவர் குடும்பம் வறுமையில் பிடியில் இருந்ததால் அவர் நடுநிலைப்பள்ளிவரை கூடப் படிக்க முடியவில்லை. தந்தையார் செய்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126378/

யுவன் சந்திரசேகர் கருத்தரங்கு- மதுரை

  எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் படைப்புக்கள் குறித்த ஒருநாள் கருத்தரங்கு மதுரையில் நண்பர்களால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. நாள் 19 -10-2019 இடம் மதுரை அமெரிக்கன் கல்லூரி, கருத்தரங்க அறை காலை 930 முதல் மாலை வரை

Permanent link to this article: https://www.jeyamohan.in/126502/

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-22

பகுதி நான்கு : கழுநீர்க் கரை – 3 நகுலன் சிறுபொழுது துயிலலாம் என்றுதான் குடிலுக்குச் சென்றான். பச்சை ஓலைகளை வெட்டி முடைந்து கட்டப்பட்ட தாழ்வான குடிலுக்குள் அவன் நுழைந்தபோது உள்ளே ஒருவன் நிற்பது தெரிந்தது. “யார்?” என்று திடுக்கிட்டதுமே அவனுக்கு அது நிழல் எனத் தெரிந்துவிட்டது. ஆனால் அந்த முந்தைய கணத்தில் அங்கே நின்றவன் சதானீகன். அவன் நடுங்கியபடி குடில்படலைப் பிடித்தபடி நின்றான். சகதேவன் கமுகுப்பாளை வேய்ந்த மூங்கில் மஞ்சத்தில் படுத்திருந்தான். அவன் “இளையோனே” என …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126445/