Daily Archive: October 5, 2019

“வருவது வரட்டும்!”

சிலபாடல்கள் சில தருணங்களில் ஒரு பண்பாட்டின் அடையாளமாக ஆகிவிடுகின்றன. அவை எங்கிருந்து கிளம்பி எப்படி அவ்வண்ணம் ஆகின்றன என்பது வியப்புக்குரியது.பலசமயம் பொருட்படுத்தப்படாத ஏதாவது நாடகம், சினிமாவிலிருந்து அவை வரும். நாட்டார்பாடல்கள் இயல்பாக அந்த இடத்தை அடைவதுண்டு. அவை தலைமுறை தலைமுறையாகப் பாடப்பட்டு பலருடைய உணர்வுகள் பகிரப்பட்டு பல தருணங்களுடன் இணைந்து ஒரு கட்டத்தில் ஒரு தெய்வச்சிலைபோல் ஆகிவிடுகின்றன இப்படி உருமாறும் பாடல்களுக்குச் சில பொதுத்தன்மைகள் உள்ளன. அவற்றிலொன்று அவை மிக எளிமையானவையாக இருக்கும் என்பது. மழலையர்பாடலின் தன்மை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126472/

செங்காட்டுக் கள்ளிச்செடி

சில்லென்று சிரிப்பது அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் செங்காட்டு கள்ளிச்செடி சில்லென்று சிரிப்பது குறித்தான உங்களின் பதிவை விரும்பி வாசித்தேன். கள்ளிச்செடிகளைக்குறித்து அத்தனை அழகாக சொல்லியிருந்தீர்கள். எனக்குத்தெரிந்து கள்ளிகளை யாரும் இத்தனைக்கு கவனித்து பாடல்களோ கவிதையோ கட்டுரைகளோ எதுவும் எழுதினதேயில்லை தாவரவியல் ஆய்வுக்கட்டுரைகளும் கூட அதிகமில்லை.  வைரமுத்து சில பாடல்களிலும் கள்ளிக்காட்டு இதிகாசத்திலும் குறிப்பிட்டிருக்கிறார். நீங்கள் ஈராறு கால் கொண்டெழும் புரவியில் திருகுகள்ளியைப்பற்றி சொல்லியிருக்கிறீர்கள் இந்தப்பதிவில் நீங்கள் சொல்லியிருக்கும் சில விவரணைகளெல்லாம் ஒரு தாவரவியலாளராக என்றென்றைக்கும் நினைவிலிருக்கும் எனக்கு. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126237/

இரு கடிதங்கள்

முற்றழிக! மானுட உரிமைகளும் தனிமனிதர்களும் அண்ணன், உங்கள் மீது எனக்கு தனிப்பட்ட பிரியம் எப்போதும் உண்டு. எனது பல நண்பர்களுக்கு அது பிடிப்பதில்லை. அவர்களிடம் உங்களை நான் நிரூபிப்பதும் எளிதல்ல.  உங்களில் நான் நிறைவடையும் ஓரிடம் உண்டு. ஆனால் அது பிறர் கண்களுக்கு ஒருபோதும் தெரியாது. “மானுட உரிமைகளும் தனிமனிதர்களும்” நூறு நாற்காலிகளை கடந்து நிற்கும் ஒரு எழுத்து. ஒரு செய்தி எப்படி நமது கைக்கு வந்து  சேர்கிறது என்பதிலிருந்து மனித மாண்புடன் அதன் உள் ஆழம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126384/

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-21

பகுதி நான்கு : கழுநீர்க் கரை – 2 நகுலன் யுதிஷ்டிரனின் குடிலை அடைந்தபோது வாசலில் பிரதிவிந்தியன் நின்றிருந்தான். எனில் உள்ளே அவைகூடியிருக்கிறது என்னும் எண்ணத்தை அடைந்து தான் பேசவேண்டிய சொற்களை தொகுத்துக்கொண்டபோதுதான் அவன் அகம் ஓங்கி அறையப்பட்டதுபோல திடுக்கிட்டது. புரவியிலிருந்து விழப்போகிறவன்போல நிலையழிந்து கடிவாளத்தை இறுகப்பற்றி மீண்டான். அந்த ஒவ்வா அசைவை உணர்ந்து புரவி நின்றுவிட்டது. அதன் கழுத்தைத் தட்டி ஆறுதல்படுத்தி மேலே செல்ல வைத்தான். அவன் அகம் படபடப்பு ஓய்ந்து அமைந்தபோது அழுத்தம் மிக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126406/