Daily Archive: October 4, 2019

அமெரிக்க நூலகச் சந்திப்பு

  அமெரிக்க நூலகம் ஒன்றில் பேசுவது என்பது ஒருவகையில் சாதாரண நிகழ்வு, ஆனால் இன்னொருவகையில் அரிய வாய்ப்பு. அவர்கள் எழுத்தாளரை கூடுமானவரை ஆராய்கிறார்கள். அவருடைய எழுத்தின் தரம், அவருடைய ஏற்பு இரண்டையும். ஆகவே நண்பர் ராஜன் சோமசுந்தரம் அமெரிக்காவில் வடகரோலினாவில் ராலே அருகிலுள்ள Wake County Government Public Library சார்பில் நூலகத்தில் ஒரு பேச்சு குறித்துச் சொன்னபோது குழப்பமாக உணர்ந்தேன். அதை தவிர்க்கலாமென்றேன். ராஜன் வற்புறுத்தினார்   முக்கியமான சிக்கல், என்னால் ஆங்கிலத்தில் பேசமுடியாது என்பது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126460

ஓஸிபிசா, ரகுபதிராகவ…

எண்பதுகளில் ஓஸிபிஸா குழு சென்னைக்கு வந்தது. அதைப்பற்றிக் குமுதம் செய்திகளாக வெளியிட்டுக்கொண்டிருந்தது. ஒளியமைப்புகள் மட்டும் ஐம்பது லாரிகளில் கொண்டுவரப்பட்டு அரங்கை அடைந்தன என்று செய்தி வெளியிட்டிருந்தார்கள். ஆனால் நிகழ்ச்சி முடிந்தபின் குமுதம் இதழில் அரசுபதில்களில் ‘பாட்டா அது ?காட்டுக்கூச்சல்’ என எழுதியிருந்தார்கள். மேலும் ஐந்தாண்டு கழித்து நான் முதன்முதலாக ஓஸிபிஸாவின் பாடலைக் கேட்டேன். எனக்குப்பிடித்திருந்தது. ஏன் அதைக் காட்டுக்கத்தல் என்கிறார்கள் என்று ரமேசன் அண்ணனிடம் கேட்டேன், டேப்ரெக்கார்டர் என்ற அற்புத வஸ்துவுக்குச் சொந்தக்காரர். அப்போதுதான் வளைகுடாவிலிருந்து திரும்பியவர். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/33125

நிஜந்தனின் ’நான் நிழல்’

நிஜந்தனின் நான் நிழல் வாங்க அன்பு ஜெயமோகன்,   கடந்த செப்டம்பர் மாதத்தின் பிற்பகுதியில்தான் நிஜந்தன் எனக்கு அறிமுகமானார். புதிய வெயிலும் நீலக்கடலும் எனும் அவரின் நாவலை ஓரிரவில் முழுமூச்சாய் வாசித்து முடித்தேன். அசோக்ராஜன் எனும் மையப்பாத்திரத்தைக் கொண்டு கிளைகிளையாய் விரிந்திருந்தன உபபாத்திரங்கள். மனித உடல்களை அல்லது மனங்களை வாட்டி எடுக்கும் காமத்தின் தகிப்புகளைப் பல நவீன நாவல்கள் பேசிவிட்ட பிறகும், நிஜந்தனின் சொல்முறை எனக்கு புதுவிதமான ஈர்ப்பைக் கொடுத்தது. அந்த ஈர்ப்பின் உந்துதலால் அவரின் மற்ற நாவல்களைத் தேடத் துவங்கினேன். பேரலை, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126375

ஆழமின்மை – கடிதங்கள்

நாள்தோறும்… முகில்வண்ணம் ஆழமில்லாத நீர் அன்புள்ள்ள ஜெ   ஆழமில்லாத நீர் கட்டுரையை வாசித்தபோதுதான் ஒன்று தோன்றியது- இந்தக்கட்டுரைகள் இயற்கை வர்ணனைகள் அல்ல. ஏற்கனவே இப்படி வந்தா கட்டுரைகளை அவ்வாறு நினைத்துக்கொண்டிருந்தேன். இவை நீங்கள் எதையோ கண்டடைவதன் சித்திரங்கள். இவற்றை வெளியே உள்ளவற்றைக்கொண்டு விளக்குகிறீர்கள். அல்லது உங்களுக்கே சொல்லிக்கொள்கிறீர்கள். பெரும்பாலான வாசகர்களுக்கு அது புரியாது என்றாலும் உங்கள் அணுக்கமான வாசகர்கள் வந்து சேர்ந்துவிடுவார்கள் என நம்புகிறீர்கள். அல்லது உங்களுக்காகவே எழுதிக்கொள்கிறீர்கள்.   ஆழமில்லாத நீர், பசுஞ்சுடர்வு, முகில்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126073

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-20

பகுதி நான்கு : கழுநீர்க் கரை – 1 நகுலன் தன் புரவியில் ஏறிக்கொண்டு இளவரசியரின் தேர்நிரையின் இறுதியாகச் சென்ற தேருக்குப் பின்னால் சீரான விசையில் சென்றான். அவன் புரவியின் ஒரு கால் முறிந்து கட்டுபோடப்பட்டிருந்தது. ஆகவே அதன் நடையின் தாளத்தில் ஒரு பிழை இருந்தது. அப்பிழையை அவன் உள்ளம் மீட்டி மீட்டி அதை தன் அகத்தாளமாக ஆக்கிக்கொண்டது. அந்தப் பிழைக்காலடியின் ஓசை ஒரு தொடுகைபோல, ஒரு தனிச்சொல்போல ஒலித்துக்கொண்டிருந்தது. சீரான தாளங்களின் இரக்கமற்ற முழுமையிலிருந்து அவனை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126447