Daily Archive: October 3, 2019

அமெரிக்காவின் வண்ணங்கள்

ராஜன் சோமசுந்தரத்துடன் அமெரிக்காவில் ஒருமாதம் ஓய்வுச்சுற்றுலா என்பது ஒரு பெரிய ஆட்ம்பரம்தான், ஒருவேளை தொழிலதிபர்களுக்கும் நடிகர்களுக்கும் மட்டுமே வாய்ப்பது. வாசகர்கள் ,நண்பர்கள் இருப்பதனால் எனக்குச் இயல்வதாகிறது. இம்முறை அருண்மொழி வராமலிருந்ததுதான் பெரிய குறை. அவள் இருந்திருந்தால் நான் பாட்டுக்கு இன்னமும் ‘சின்னப்புள்ளைத்தனமாக’ இருந்திருக்கலாம். என் வாழ்க்கையில் அவளுடைய பங்களிப்பு என்ன என்று இப்போதுதான் தெரிந்தது. நான் இயல்பாக இருக்கும் ஓர் இடம். இலக்கியவாதி அல்ல. அறிவுஜீவி அல்ல. சாதாரண அசட்டு நாரோயிலான். அபத்தமான, அசட்டுத்தனமான கருத்துக்களை அவளிடம்தான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126423/

ஜெயகாந்தன் -கடிதங்கள்

ஊட்டி, அபி, இளவெயில், குளிர் அன்புள்ள ஜெ ஜெயகாந்தனைப்பற்றிய உங்கள் கருத்துக்களுடன் முதன்மையாக உடன்பாடுகொள்கிறேன். தமிழிலக்கியத்தில் மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டவர் ஜெயகாந்தன். அவருடைய முக்கியமான படைப்புக்கள் படிக்கப்படவே இல்லை என்று தோன்றுகிறது. இரண்டு அடிப்படைகளில் அவர் ஒரேயடியாக நிராகரிக்கப்பட்டார். ஒன்று, வணிக இதழ்களில் வெளிவந்தாலே அது இலக்கியமல்ல, பலரும் வாசித்தாலே அது இலக்கியத்தகுதி கொண்டது அல்ல என்ற ஒரு வகை சிற்றிதழ் மூர்க்கம். இன்னொன்று, கலை என்பது பூடகப்படுத்துவதும் மென்மையாகச் சொல்வதும் மட்டுமே என்ற குறுக்கல் நோக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125639/

ஆழ்மன நங்கூரங்கள்

அமேசானில் ‘தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்’ மின்னூல் வாங்க நற்றிணையில் தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் – அச்சுநூல் வாங்க குலதெய்வங்கள் பேசும் மொழி – முன்னுரை இது அக வெளி -லட்சுமி மணிவண்ணன் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு. தங்கள் நலம் விழைகிறேன். இன்று ஒரே மூச்சில் கிண்டிலில் தங்களது “தேவதைகள்; பேய்கள்; தேவர்கள்” தொகுப்பினை வாசித்து முடித்தேன். கதைக்கட்டுரைகளாக விரியும் இவை ஒவ்வொன்றும் மெல்ல மனதிற்குள் தனித்தனி வரலாறாக விரிந்தன. சிதல்புற்றினைத் தன் வாழ்நாளில் கண்டிராத அச்சிறு ஜீவன்களுக்கு அவற்றைக் கட்டுவதற்கான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126293/

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-19

பகுதி மூன்று : பலிநீர் – 6 கனகர் இளைய யாதவரை விழியசையாது நோக்கிக்கொண்டு நின்றிருந்தார். முன்பு ஒருமுறையும் அவரை அவ்வண்ணம் பார்த்ததில்லை என்று தோன்றியது. பார்க்கும்தோறும் முன்பொருமுறையும் அவரை மெய்யாகவே பார்த்ததில்லை என்ற நம்பிக்கை உறுதிப்பட்டபடி வந்தது. ஒவ்வொரு முறையும் தொலைவில் அவரை பார்க்கையில் முதற்கணம் எழும் அகத்திடுக்கிடல், அவர் அணுகி வருகையில் எழும் சொல்லில்லா உளக்கொந்தளிப்பு, அணுகியபின் மெய்மறைய உளமழிய இன்மையென்றே உணரும் இருப்பு, அகன்றபின் விழிக்குள் எஞ்சும் பாவையென அவரை மீண்டும் காணுதல், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126408/