Daily Archive: October 1, 2019

நாம் எதைப்பற்றியாவது பெருமிதம் கொள்ளமுடியுமா?

இந்தியப் பெருமிதம் சுயபண்புமுன்னேற்றம் ஆசிரியருக்கு,   குடிமை ஒழுக்கத்தில் நாம் பல படிகள் தாழ்ந்திருந்தாலும், நாம் வளர்த்துக் காட்டிய பண்பாட்டு விழுமியம் குறித்து நாம் பெருமைக்கொள்ள இடமிருக்கிறது. இந்தியாவெங்கிலும் நாம் பயணித்ததிலும் உங்களுடன் நான் கண்ட இரண்டு கும்பமேளாவிலும் இந்தியன் என்பதில் நான் நிச்சயம் பெருமிதம் கொள்கிறேன். எங்கும் காணப்படும் இந்திய பண்பாட்டு ஒருமை உணர்வும் மக்களிடையே இயல்பில் வெளிப்படும் கலாச்சார தோழமையும் ஒருவனை உள்ளபடியே நெகிழ்ச்சியூட்டுவது. எனக்கு மறுபிறவியில் நம்பிக்கை இல்லை எனினும் அடுத்த பிறவி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126349

மீறலுக்கான தண்டனையின் மூலம் எங்கிருந்து பெறப்படுகிறது?

கீதையை எப்படிப் படிப்பது? ஏன்? அன்புமிக்க ஜெயமோகன் அவர்களுக்கு,   நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.   கீதையை எப்படிப் படிப்பது? ஏன்?  மீதான என்  எண்ணங்கள்   மதுரையில் தெருவெங்கும் குட்டி குட்டி அழகான கோயில்கள் , மாதந்தோறும் பூக்களால் அலங்கரிங்கப்பட்டு பல்லக்குளில் மாசி வீதிகளில் இறைவன், இறைவியின் ஊர்வலம், வருடந்தோறும் ஊரை மக்கள்திரள்களால் நிரப்பும்  திருவிழாக்கள் என இருந்தாலும்,  மார்க்ஸிய மதத்தை தவிர  அனைத்தையும்  ஐயத்தோடு அணுகும் சூழலில் தான் வளர்ந்தேன்.  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127153

கூண்டுக்குள் பெண்கள்

சித்தார்த்தனும் தம்மமும்-சிவக்குமார் ஹரி தம்மமும் தமிழும் தம்மம் தோன்றிய வழி… அன்புள்ள சார், இது நிகழ்ந்து பல வருடங்கள் இருக்கும். அன்று என் அலுவலகத்தின் தணிக்கைநாள். கணினி பாதுகாப்புத் தணிக்கை.  அதற்கு முந்தைய வருடங்களில் பல ஓட்டைகள் கண்டடையப்பட்டிருந்ததால் இம்முறை அதற்கு மேலதிகாரிகளிடத்திலிருந்து கூடுதல் கவனம் இருந்தது. நானும் அந்நேரத்தில் அந்த நிறுவனத்தில் புதிதாக  சேர்ந்திருந்தேன். காலை ஒன்பது மணிக்கு ஆரம்பித்த தணிக்கை ஒவ்வொரு மணிக்கும் சான்று அளிக்கக் கூடிய  விவரங்களையும் செயலிகளையும் இயக்கி அதற்கான ஒப்புதல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126245

மும்மொழிகற்றல்- மறுப்பு

மும்மொழி கற்றல் மும்மொழி- கடிதம் அன்புள்ள ஜெ, வணக்கம். மும்மொழிக்கொள்கை குறித்த சாய் மகேஷ் அவர்களின் கடிதம் தொடர்பாக சிலவற்றை தெளிவுபடுத்தலாமென எண்ணுகிறேன். 1. 484 பக்க தேசிய கல்விக்கொள்கை வரைவானது, கல்வியியல் தொடர்பான பல முக்கிய புத்தகங்களைப் பதிப்பிக்கும் பாரதி புத்தகாலயத்தின் முயற்சியால் ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில் முழுவதுமாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்தப் பெரும்பணியை பலரை ஒருங்கிணைத்து செய்திருக்கிறார்கள். தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் இப்படி நிகழ்ந்துள்ளதா எனத் தெரியவில்லை. அவர்களனைவருக்கும் இக்கடிதம்வழி முதல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126335

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-17

பகுதி மூன்று : பலிநீர் – 4 புரவியில் பயணம் செய்துகொண்டிருந்தபடி அரைத்துயிலில் சென்றுமீண்டுகொண்டிருந்த சித்தத்தை அறைந்து எழுப்பிய விந்தையான முழக்கத்தை கனகர் கேட்டார். அதை தன்னைச் சூழ்ந்திருந்த காட்டிலிருந்து பல்லாயிரம் நிழலுருவங்கள் கொப்பளித்து ஒழுகியபடி எழுப்புவதாக உணர்ந்தார். பிறிதொரு இடத்தில் அவரே அவர்களை முகமில்லாத பெருந்திரள் மக்களாக பார்த்துக்கொண்டிருந்தார். அவர்கள் ஒரு மலைச்சரிவிலென ஒழுகி இறங்கினர். அம்மலைச்சரிவு ஒருகணத்தில் செங்குத்தாக வெட்டப்பட்ட பாறை விளிம்பென மாறி அவர்களை கீழே உதிர்த்தது. அப்பால் இருண்டு திரண்டு அமைந்திருந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126332