Monthly Archive: October 2019

மொழி- எல்லைகளும் வாய்ப்புகளும்

இருத்தலின் ஐயம் தொடர்ச்சி   நிஷாந்த் கடிதத்தில் மொழி குறித்து…   உண்மையென்பதே மாயச் சுடராக இருக்’கிறது’.இருக்கலாம்.மொழியாலும்,பிரஞ்ஞையாலும் அதுவும் நித்திய சுடரா’கிறது’.பிரஞ்ஞை உயிர் ஆற்றல்.மாயைக்கொரு சொட்டு பிரஞ்ஞை.திவ்ய சுடர். (இவ்வாறு இருக்’கிறது’.) //நம் பிரக்ஞைக்கு அப்பாற்பட்ட, நம்மால் ஒருபோதும் அறியவே முடியாத பொருள்வய உலகம் வெளியே இருக்கிறது. // This line of yours was depressing and at the same time delightful. ஒற்றை இலக்கணம் தான் உள்ளது.ஒற்றை இலக்கணத்தின் கிளைகளே மொழிகள்.புற உலகத் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127156

வாஷிங்டனில்…

  அன்புள்ள ஜெயமோகன்,   நீங்கள் சென்ற மாதம் வாசிங்டன் வந்த போது உங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. இரண்டு நாட்கள் உங்களோடு வாசிங்டனில் சுற்றியது நல்ல அனுபவம். நீங்கள் 2015இல் வந்தபோது இருந்ததாக எனக்குத் தோன்றிய சிறு இறுக்கமும் இப்பொழுது இல்லை. முற்றிலும் இயல்பாக தோழமையோடு இருந்தீர்கள். இளைய வாசகர்களும் ஜெயமோகன், ஜெயமோகனென்று உங்களைச் சுற்றி குழைந்துவந்தார்கள். வெள்ளை மாளிகைக்கு அருகில் வாசிங்டன் கோபுர புல் வெளியில், மாலை வேளையில் அனைவரும் ஊர்ச் சுற்றி களைப்பாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127164

பூமணியை தொடர்தல்…

குருதி [சிறுகதை] நிலம் மதிப்ப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,   சமீபத்தில் தங்கள் வலைதளத்தில் மறுபிரசுரம் செய்யப்பட்ட  ‘குருதி’ சிறுகதையை வாசித்தேன். அதில் மையக் கதாப்பாத்திரமாக வரும் பெரியவரை வெக்கையிலும் வாசித்ததாக நினைவு. சுவாரசியத்திற்காக வெக்கையைப் புரட்டுகையில், அய்யா  பனைமரத்தின் அடியில் செலம்பரத்திடம் அந்தப் பெரியவரின் கதையைக் (ப. 99) கூறுகிறார். குருதி சிறுகதையில் வந்த அதே பெரியவர். நிலத்திற்காக அதே இரட்டைக் கொலை. சிறையில் அதே கம்பீரம்.  நீங்கள் சற்று மேலாக பெரியவரின் பின்புலத்தைக் கூறியிருக்கிறீர்கள். வெக்கையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127161

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-47

பகுதி ஏழு : தீராச்சுழி – 3 பூர்ணை குடிலுக்கு வெளியே முகமனுரையை கேட்டாள். “அரசியருக்கும் சேடியருக்கும் வணக்கம்” எனும் குரல் சற்று அயலாக ஒலிக்கவே சந்திரிகையிடம் விழிகளால் பார்த்துக்கொள் என்று காட்டிவிட்டு குடிலிலிருந்து வெளியே வந்தாள். அங்கு நின்றிருந்த மருத்துவர் அவளுக்கு முகமறியாதவராக இருந்தார். அவர் மீண்டும் தலைவணங்கி “நான் தங்களைத்தான் பார்க்க வந்தேன். அரசியர் இருக்கும் நிலையை நான் அறிவேன். தாங்கள் ஒருமுறை எங்கள் அரசியை வந்து பார்க்க இயலுமா?” என்றார். பூர்ணை திரும்பி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127251

இருத்தலின் ஐயம்

  அன்புள்ள ஜெயமோகன்   பெரும் சோர்வு தான் எஞ்சுகிறது. இலக்கியமாகட்டும் இயலுலகவியலாகட்டும் புகைப்படக்கலையாக்கட்டும் எதுவும் ஒரு கட்டத்திற்குமேல்  சோர்வையே அளிக்கிறது.தேடலை மட்டுப்படுத்தும் சோர்வல்ல. பேரியக்கமொன்றில் பங்கெடுத்த உணர்வு.இறுக்கமான பள்ளி கல்விச் சூழலில் எத்தகைய பண்பாட்டு நுனிகளாலும் தீண்டப்படாமல்  பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு வெற்று ஜடமாய் வெளிவந்து அடர்த்தியான உள் உலகமொன்றை  புலன் உணரப் பெறுவது சவுக்கியமாகத் தான் இருக்கிறது. சிந்தனை உருப்பெறுகிறது.நம்மை அடையாளப்படுத்தும் படைப்புகளே முதலில் நிறைவு தருகிறது. ‘நான்’ எனும் கருத்தாக்கம் இல்லாத படைப்புகளின் மீதான கிண்டல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127091

நுழைவு

பூதான் சாதி திண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம் ஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி இரு காந்திகள். இன்றைய காந்திகள் சுதந்திரத்தின் நிறம் அன்புள்ள ஜெ   நலம்தானே மேலே கண்ட புகைப்படம் எனக்கு மிகவும் பிடித்தமானது. எந்த சம்பிரதாய நிகழ்வாக இருந்தாலும் அதிலொரு செயற்கைத்தன்மையும் ஒரு சின்னத் தடுமாற்றமும் வந்துவிடும். கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் அருகே நிற்க நீங்கள் ஊழியரகத்தின் விழாவை திறந்து வைக்கும் படத்தில் அந்தச் சின்னப்பையன் சுவாதீனமாக உள்ளே மண்டையை நுழைக்கும் படம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127069

திருவிழாவில் வாழ்தல்

  பல ஆண்டுகளுக்கு முன் கோணங்கியின் நண்பரான ஒரு கிழவரைச் சந்தித்தேன். அவர் கோயில்பட்டி இனிப்பு செய்பவர். ஓய்வுபெற்றுவிட்டார். பிள்ளைகள் ‘செட்டில்’ ஆனபின் திருவிழா விற்பனைக்குச் செல்லவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். காலில் வாதம் வேறு. ஆனால் வாழ்க்கையே அழிந்துவிட்டது, இனி சாவுதான் கதி என சோர்வுடன் சொன்னார்.   அவர் சொன்ன காரணம் வியப்புக்குரியதாக இருந்தது. தன் வாழ்க்கை முழுக்க அவர் திருவிழாக்களில்தான் கழித்திருக்கிறார். ஒரு விழா முடிந்ததும் அப்படியே அடுத்த விழா.  ‘திருவிழாவிலே வாழணும்னாக்க குடுத்துல்லா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127075

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-46

பகுதி ஏழு : தீராச்சுழி – 2 யுதிஷ்டிரன் தேவிகையைப் பார்க்க வருகிறார் எனும் செய்தியை ஏவலன் வந்து அறிவித்தபோது அதை பூர்ணைதான் முதலில் கேட்டாள். அவள் குடில்வாயிலில் அமர்ந்திருந்தாள். ஏவலன் அவளிடம் செய்தியைச் சொன்னபோது “நான் அரசியிடம் தெரிவிக்கிறேன்” என்று அவள் சொன்னாள். “அரசியிடம் தனிப்பட்ட முறையில் தெரிவிக்க வேண்டுமென்று ஆணை” என்று ஏவலன் கூறினான். பூர்ணை “அரசியிடம் நான் தெரிவித்துவிடுகிறேன்” என்றாள். ஏவலன் உறுதியுடன் “அரசுச் செய்திகள் அரசியிடம் நேரில் கூறப்படவேண்டியவை” என்று கூறினான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127115

மீமொழி

  தம்பி ஒருவர் நீண்ட பாக்ஸ் கட்டிங் தலையும், அதில் கோழிச்சாயமும், விந்தையாக வழிந்த கிருதாவும், கிழிசல் ஜீன்ஸும் முடிச்சிட்ட சட்டையுமாக உற்சாகமாக இருந்தார். “படம் எப்டி தம்பி?” என்றேன் “தெறி சார்” என்றார் அருகிருந்த மலையாளி “ஆரு தெறி பறஞ்ஞு?” என்றார். அவரை ஒதுக்கி ”இல்ல படம் எப்டி இருக்குன்னு கேட்டேன்” “மாசு” என்றார். “செம மாசு” எனக்கு புரியவில்லை. “இல்ல தம்பி, நான் படம் எப்டீன்னு கேட்டேன்” என்றேன் “மரணமாசு” என்றார் “அதாவது?” என்றேன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127013

காந்தியம் துளிர்க்கும் இடங்கள் – செந்தில் ஜெகன்நாதன்

அன்புள்ள ஆசான் அவர்களுக்கு மனமார்ந்த வணக்கம்.   சென்ற வாரம் சென்னை வந்திருந்த குக்கூ சிவராஜ் அண்ணன் தொலைபேசியில் அழைத்தார். குரலில் அதீத உற்சாகம் “செந்தில் சென்னைலதான் இருக்கேன் புத்தகம் வந்துடுச்சி செந்தில் அதான் தொட்டுப் பார்த்துட்டுப் போக வந்தேன் செந்தில்..” என்று நெகிழ்ந்து பேசினார்.   எனக்கு அந்தக்கணமே அவரை  சந்திக்க வேண்டும் என்று தோன்றியது. சுதந்திரத்தின் நிறம் புத்தகத்தை, சிவராஜ் அண்ணன் கரங்களில் பார்க்கும்போது, வெளிநாட்டில் இருந்துவிட்டு வந்த தகப்பன் தன் குழந்தையின் மூடியிருக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127048

Older posts «