Monthly Archive: September 2019

அமேஸான் – கடிதம்

  அமேசான் இனிய ஜெயம் , அமேசான் அதிருஷ்ட போட்டி மீதான உங்கள் பதில் கண்ட எதிர்வினைகளை மூன்று வகைமையின் கீழ் தொகுக்கலாம். ஒன்று. அப்படியெல்லாம் அமேசான் வந்து இலக்கியத்தை அழித்து விடாது. ஆசான் சூழல் தன்னை திரும்பி பார்க்க வைக்க தனது பெட் தியரியை பேசுகிறார். அவரே தேவை டான் ப்ரௌன்கள் என எழுதியவர்தான். இரண்டு. இணையவெளி உருவாக்கிய புரட்சிகளில் ஒன்று இத்தகு ‘அளவுகோல்களை’ முன்வைக்கும் ஆண்டைகள் வசமிருந்தது அது இலக்கியத்தை ஒடுக்கப்பட்ட வர்க்கம் நோக்கி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126273

மும்மொழி- கடிதம்

மும்மொழி கற்றல் வணக்கம் ஜெ., மும்மொழி கற்றல் (https://assets1.jeyamohan.in/122793#.XYetqmZS82w)கட்டுரை வாசித்தேன். வரைவு தேசிய கல்விக்கொள்கை 2019, படித்துப் பார்க்கப்படாமலேயே அனைத்துத் தரப்பினராலும் விமர்சனம் செய்யப்பட்டு வருவது துரதிர்ஷ்டவசமானது. தமிழ் நாட்டைத் தவிர வேறு எங்கும் இப்படி நிகழ்ந்துள்ளதா எனத் தெரியவில்லை. வரைவு வெளியிடப்பட்ட இரண்டொரு நாட்குளுக்குள்ளாகவே, மூன்றாவது மொழியாக ஹிந்தி என்பது விலக்கிக்கொள்ளப்பட்டு ஏதாவது ஒரு இந்திய மொழி எனத் திருத்தி வெளியிடப்பட்டது. குறிப்பாக, தமிழ் போன்ற தென்னிந்திய மொழிகளில் ஒன்றை ஹிந்தி பேசும் பகுதி மாணவர்கள் படிக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126227

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-14

பகுதி மூன்று : பலிநீர் – 1  அஸ்தினபுரியில் கனகரின் பித்து தொட்டுத்தொட்டு படர்ந்து செறிந்துகொண்டிருந்தது. போர் தொடங்கியபோதே எழுந்தது அது. ஒருநாளில் ஒன்றுடனொன்று தொடர்பில்லாத நூறு பணிகள் அவர்மேல் வந்து விழுந்தன. நாழிகைக்கு நூறு ஆணைகளை இடவேண்டியிருந்தது. ஆனால் அவற்றை இயற்றும் அமைப்பு முழுமையாகவே அழிந்துவிட்டிருந்தது. நாளும் வந்துகொண்டிருந்த ஒற்றர்களில் பெரும்பாலானவர்களை அவர் முன்னர் நேரில் சந்தித்திருக்கவில்லை. ஏவலர்கள் அனைவருமே புதியவர்கள். அமைச்சர்களிலேயே பெரும்பாலும் அனைவரும் காடேகிவிட்டிருந்தனர். துரியோதனனுக்கு கங்கைநீர் தொட்டு சொல்லுறுதி எடுத்துக்கொண்டவர்கள் அவர்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125422

காமரூபிணி

  [ 1 ] ரப்பர்மரக்காட்டில் ஒரு சாணியுருளை கிடந்தது. இன்னும் ஒருவாரம் கழித்து அதை எடுத்துப்பார்த்தால் தக்கையாக இருக்கும். உலர்ந்த சாணியின் ஓட்டுக்குள் ரப்பர்மரத்தின் வேர்நரம்புச்சுருள்கள் உருண்டு சுருண்டு சொம்மியிருக்கும். அதை மண்ணுடன் இணைப்பது ஒரு சிறிய வேர்ச்சரடுதான். கடைசித்துளிவரை உறிஞ்சப்பட்டக்கூடு.”லே மக்கா, ரப்பர்ணாக்க நீ என்னண்ணுலே நெனைக்கே மயிரே? அவ யச்சியில்லா? முண்டும்முலக்கச்சயும் இட்ட நம்ம ஊரு யச்சியில்லலே. சட்டையும் காதோலையும் இட்ட கிறிஸ்தியானி யச்சியாக்கும் அவ!” என்றார் நாராயணன் அண்ணன். பொதுவாக தெற்குதிருவிதாங்கூர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/595

’ஜக்கு’ ஜெகதீஷ்- கடிதங்கள்

  அஞ்சலி – ‘ஜக்கு’ ஜெகதீஷ் அன்புள்ள ஜெ,                     அஞ்சலி – ‘ஜக்கு’ ஜெகதீஷ்  பற்றிய பதிவை தங்கள் இணையத்தளத்தில் படித்தேன். இந்த பதிவை இணையதளத்தில் பதிவிட்டமைக்கு நன்றிகள். ஜக்குவை பற்றி செல்வேந்திரன் எழுதியதற்கு ஆயிரம் நன்றிகள். ஜக்குவை பற்றி படித்து கொண்டிருக்கும்போதே என் மனம் வெட்கி தலை குனிந்தது. எனது பெயர் பாலாஜி, வயது 25. நான் ஒரு பொறியாளன். எனக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126214

ஃபாசிசம் -கடிதம்

ஃபாசிஸத்தின் காலம்   இனிய ஜெயம் தீயின் எடை முடித்து ஒரு சிறிய இடைவெளி. எதையும் வாசிக்கவில்லை. சிறு மழைப் பயணம். தினசரி பொருநைக் குளியல். நெல்லையப்பர் கோவில் உலா, அம்மன் சன்னதி நண்பர்கள் சூழ அல்வா அரட்டை. உறவுகள் இடையே சிறிய இனிய சுப நிகழ்வு. மனமே குளிர்ந்து, கூழாங்கல் தெரியும் தெளிந்த ஆழம் கொண்ட நதி போல கிடக்கிறது. ஒரு வாரம் கழித்து இணையம் திறந்தேன். உலகம் மிக வேகமாக என்னை உதிர்த்து விட்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125889

வெண்முரசு( சென்னை )கலந்துரையாடல்

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம், இந்த மாத  வெண்முரசு( சென்னை )கலந்துரையாடல் வருகிற ஞாயிறு  மாலை 6 மணி முதல்  8 மணி வரை நடைபெற உள்ளது     இதில் ”’இமைக்கணத்தில் கர்ணன் மற்றும்  பீஷ்மர்” , என்கிற  தலைப்பில், நண்பர் காளிபிரசாத்  பேசுகிறார் .   வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.. நேரம்:-  வரும் ஞாயிறு (29/9/2019) மாலை 6:00 மணிமுதல் 08:00 மணி வரை தொடர்புக்கு  9043195217 / 9952965505   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126304

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-13

பகுதி இரண்டு : குருதிமணிகள் – 7 அணிவகுத்தபடி வந்த அரசியர்நிரை தன்னை அணுகியபோது கனகர் குருதியின் கூரிய கெடுமணத்தை உணர்ந்தார். அது அலையென எழுந்து சூழ்ந்துகொள்ளும் மணம் அல்ல. சிறிய பளபளக்கும் ஊசிபோல மென்மையானது. அறிதற்கரியது, ஆயினும் தைத்து உட்புகுந்து அங்கிருப்பது. பசியின்போது உணவின் மணம்போல அனைத்துப் புலன்களும் சென்று தொட்டு ஏற்றுக்கொள்ளும் மணம் அது. ஆனால் எப்போதும் புலன்கள் அதை பெருகிச்சென்று பெற்றுக்கொள்கின்றன. எனில் எப்போதும் அகம் அதை காத்திருக்கிறதா? ஒவ்வொரு நீர்த்துளியும் இன்னொரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126036

முற்றழிக!

கீழ்க்கண்ட செய்தியை வாசிக்கையில் அட்லாண்டாவில் இருந்தேன். ஒரு கணத்தில் குமரிநிலத்திற்குத் திரும்பி மீண்டேன். அலையலையாக நினைவுகள். வெவ்வேறு எண்ண ஓட்டங்கள். `தங்கத்துக்குப் பதில் தகரம்’ – திருவட்டார் கோயில் திருட்டு வழக்கில் 27 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு   சில ஆண்டுகளுக்கு முன் ஒரு திருமணத்திற்காக குலசேகரம் சென்றிருந்தேன். திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் நடுவே ஒரு கிசுகிசுச் செய்தி பரவியது. அவர்களில் ஒருவர் திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் ஆலயத்தில் நகைக்கொள்ளை செய்தவரின் நெருக்கமான உறவினர். அனைவரும் அவரையே நோக்கினார்கள்.அவர் அருகே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126267

ஃபாசிசம் -கடிதங்கள்

ஃபாசிஸத்தின் காலம் வணக்கம் ஜெ   இன்று வளர்ந்துவரும் ஃபாஸிசம் பெரிய உளச்சோர்வை ஏற்படுத்துவதாக இருக்கிறது. குறிப்பாக இந்து சமுதாயத்திற்குள் வளரும் ஃபாஸிசம் இந்து மதத்திற்கே எதிராய் முடியும். இதற்கு முக்கியக் காரணம் பிற அடிப்படைவாதத் தரப்புகளைப் பார்த்து அப்படியே ‘காப்பி’யடிக்கும் போக்கு. இஸ்லாமின் மதவாதத் தரப்பையும், கிறிஸ்தவத்தின் அடிப்படைவாதத் தரப்பையும் முன்மாதிரியாகக் கொண்டு இந்து மதமும் அப்படி இருக்கவேண்டுமென்று விழைகிறார்கள்.   அதாவது ராணுவ ஒழுங்கு, கடுமையான விதிமுறைகள், மத விசுவாசம், மத நிந்தனை, மத …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125884

Older posts «

» Newer posts