1916 ல் திருவனந்தபுரத்தில் இருந்து வந்த தமிழன் பத்திரிகையில் அதன் ஆசிரியர் பண்டித எஸ்.முத்துசாமிப் பிள்ளை ஒரு சம்பவத்தை எழுதியிருந்தார். ஏதாவது ஒரு விஷயமாக சாலைக்கடைப் பக்கமாக அவர் போகாத நாள் இல்லை. ஒருநாள் போகும்போது ஒரு பண்டாரம் சிவகணம் போல நின்று ‘முத்திநெறி அறியாத மூர்க்கரோடு முயல்வேனை‘ என்ற பாடலை ‘கல்லும் கரையும் வண்ணம்‘ பாடிக்கொண்டிருந்தார். இவர் நின்று அதை கவனித்தார். பண்டாரத்துக்கு ஓரளவு சில்லறை சேர்ந்தது தானும் சில்லறை போட்டு நகரும்போது …
Daily Archive: September 30, 2019
Permanent link to this article: https://www.jeyamohan.in/3217
நாகசாமி,கடலூர் சீனு- கடிதங்கள்
அமேஸான் – கடிதம் அன்புள்ள ஜெ, ஊருக்கு திரும்ப ஆயத்தமாகியிருப்பீர்கள். நியூ யார்க்கில் உங்களை சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி. கடலூர் சீனுவின் கடிதம் படித்தேன். ஹ்ம்ம் பாப்கார்ன் அறிவு ஜீவிகளை மறுக்க அறிவுத் தரப்பே இல்லையென்று அங்கலாய்த்து விட்டு அப்புறம் அறிவு ஜீவி தரப்பே தமாஷ் என்கிறார். ஹ்ம்ம்ம் பாவம் அவருக்கு பிடித்த நாகசாமியை குறைச் சொல்லி விட்டேன். பத்ம பூஷன் வாங்கியவரை அவமதித்து விட்டேனாம். கடலூரார் பத்ம விருது பெற்ற …
Permanent link to this article: https://www.jeyamohan.in/126352
வாசகசாலை- கடிதம்
வாசகசாலை கூட்டங்கள் குறித்து… அன்பின் ஜெ, வாசகசாலை குறித்த விவாதங்களை கவனித்து வருகிறேன். விஷ்ணுபுரம் மற்றும் வாசகசாலை இரண்டு அமைப்புகளின் நிகழ்வுகளிலும் பங்கெடுத்துள்ளேன். இரண்டு தரப்புடனும் உரையாடும் வாய்ப்பும் உள்ளது. ஆனால், நான் பேச வேண்டியது உங்களுடனே என்று எண்ணுகிறேன். முதலில் உங்களுக்கு வரும் கடிதங்கள். உங்களை வாசித்து, உங்களுடன் உரையாடும் நிலையில் உள்ள ஒருவர் ஏன் வாசகசாலையின் நிகழ்வுகளுக்கு செல்ல வேண்டும். சென்றாலும் ஏன் விமர்சனங்களை முன்வைக்க வேண்டும் என புரியவில்லை. …
Permanent link to this article: https://www.jeyamohan.in/126310
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-16
பகுதி மூன்று : பலிநீர் – 3 கோட்டைக்கு வெளியே செல்லும்போதுகூட கருக்கிருள் அகன்றிருக்கவில்லை. கோட்டை முகப்பின் முற்றம் நிறைய ஏராளமான மக்கள் சிறிய துணிக்கூடாரங்களிலும், பாளைகளையும் இலைகளையும் கொண்டு செய்யப்பட்ட குடில்களிலும் தங்கியிருந்தனர். அவர்களில் பலர் முன்னரே கிளம்பிச்சென்றுவிட்டிருந்தமையால் அவை ஒழிந்து கிடந்தன. பலர் அப்போதுதான் விழித்தெழுந்து கிளம்பிக்கொண்டிருந்தனர். இருளுக்குள் அவர்களின் கலைந்த குரல்களின் முழக்கம் எழுந்து சூழ்ந்திருந்தது. விண்ணில் தொலைவில் ஒளிமிக்க சில விண்மீன்கள் மட்டும் துலங்கின. கைப்பிடி அளவிற்கு உப்புப் பரல்களை எடுத்து …
Permanent link to this article: https://www.jeyamohan.in/126225