Daily Archive: September 29, 2019

அஞ்சலி:மகரிஷி

  மூத்த எழுத்தாளர் மகரிஷி நேற்று காலமானார். அவருக்கு வயது 87. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் கிருஷ்ணசாமி சர்மா மற்றும் மீனாட்சியம்மாளின் மகனாக பிறந்தவர் டி.கே.பாலசுப்பிரமணியம். சேலம் பெரும்பாலும் இலக்கியச்செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கி ஆன்மிக ஈடுபாடுகொண்டு வாழ்ந்தார். மனைவி பத்மாவதி.   தி.ஜானகிராமன் அவருடைய புகழ்பெற்ற சிலநாவல்களை ஆனந்தவிகடன் முதலிய பொதுவாசக இதழ்களில் எழுதினார். அவை  அன்று பொதுவாசிப்பு எழுத்துக்குள் நுழைந்த பலரை ஆழமாக பாதித்தன. அவர்களை விமர்சன நோக்கில் ஒரு பட்டியலாகத் தொகுக்கலாம். முக்கியமானவர் ஆர்வி. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126337

சுப்பு ரெட்டியார்- கடிதம்

  நமது ஊற்றுக்கள் அன்புள்ள ஜெயமோகன்,   தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானின் ‘’வேங்கடம் முதல் குமரி வரை’’ நூல் குறித்து எழுதிய கடிதத்திற்கு தாங்கள் அளித்த பதிலில் பேராசிரியர் ந. சுப்பு ரெட்டியார் குறித்து குறிப்பிட்டு அவர் நூல்களுக்கான இணைப்பை வழங்கியிருந்தீர்கள். அவருடைய சுயசரிதையான ‘’நினைவுக் குமிழிகள்’’ஐ வாசித்தேன். நான்கு பாகங்கள். ஆயிரம் பக்கங்களுக்கு மேல். ஓர் அறிஞரின் வாழ்க்கை என்று சொல்லலாம். அவருடைய அவதானங்கள் பிரமிப்பூட்டின. நூலின் துவக்கத்தில் தனது கிராமத்தை அவர் சித்தரிக்கும் விதமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126231

கிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா?- எதிர்வினை

கிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா? ஜெ’ யின் வலைதளத்தில் ” கிருஷ்ணன் என்ற காமுகனை வழிபடலாமா ? ” என்று எழுதிய கடிதத்திற்கு ஜெ நல்ல பதிலை கொடுத்துள்ளார் .   ஆனால் ஜெ பயன்படுத்தும் ஆய்வு உபகரணங்கள் பலவும் கடும் காலனிய தாக்கம் உடையவை .ஏன் எனில் இது தான் அந்த தலைமுறை அறிவுஜீவிகளுக்கு கிடைத்தது .ஹிந்துத்துவ அறிவு ஜீவிகள் கூட ராதாகிருஷ்ணனிடமிருந்தும் தேவி பிரசாத் சடோபாத்யாவிடம் இருந்தும்தான் ஹிந்து தத்துவ மரபுகளை குறித்து அறிந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126229

வாசகசாலை- கடிதங்கள்

வாசகசாலை கூட்டங்கள் குறித்து… எழுத்தாளர் ஜெயமோகனுக்கான எதிர்வினை- வாசகசாலை   அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,   வணக்கம்.   வாசகசாலை அமைப்பு பற்றி நீங்கள் எழுதிய பதிவை படித்தேன். நோக்கம் தெளிவாக இருக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறீர்கள். அவர்கள் நோக்கம் தெளிவாகத்தான் இருக்கிறது. உங்களுக்குத்தான் குழப்பம். ஒரு படத்தில் கவுண்டமணி சொல்வார். ஈயம் பூசுன மாதிரியும் பூசாத மாதிரியும் இருக்கனும். அது போல் இலக்கியம் பேசியது மாதிரியும் இருக்க வேண்டும். ஆனால் இலக்கியத்துக்கு தேவையான அறிவார்ந்த உழைப்பையோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126305

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-15

பகுதி மூன்று : பலிநீர் – 2 கனகர் முதற்புலரியில் தன்னை எழுப்பும்படி ஏவலரிடம் ஆணையிட்டுவிட்டுதான் படுத்தார். ஏவலன் விழிகளில் தெரிந்த நம்பிக்கையின்மையைக்கண்டு உரத்த குரலில் ”என்ன?” என்றார். அவன் இல்லை என்று தலையசைத்தான். ”முதற்புலரியில், கருக்கிருளிலேயே!” என்றார். அவன் ஆம் என்று தலையசைத்தான். ”ஒளியெழுவதற்குள் இங்கிருந்து அனைவரும் கிளம்பிவிட வேண்டும். முதல் நாழிகைக்குள் நகரிலிருந்து வெளியேறிவிடவேண்டுமென்று நிமித்திகர் கூற்று. அதற்குள் நான் நீராடி ஒருங்க வேண்டும். செல்வதற்கு முன் ஒற்றர்களை சந்தித்து ஆணைகளை பிறப்பிக்கவேண்டும். இயற்றுவதற்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126173