Daily Archive: September 28, 2019

மானுட உரிமைகளும் தனிமனிதர்களும்

  பாதை பிரச்னை: பெண் தீக்குளித்து தற்கொலை – 12 பேர் மீது வழக்கு  மேலே உள்ள செய்தியை வாசித்தபோது ஒரு வகை அமைதியின்மை ஏற்பட்டது. இத்தகைய செய்திகள் நம்மை வந்தடைந்து அடுத்த கணமே அடுத்தகட்டச் செய்திகளால் அழிக்கப்பட்டுவிடுகின்றன. ஆனால் இச்செய்திக்குள் செல்லத்தக்க ஓர் அகத்தூண்டல் எனக்கு இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன் எங்களூரில் ஒருகுடும்பம் இப்படி குளக்கரையில் வீடு கட்டி குடியிருந்தது. அவர்கள் ஒரு சிறுபான்மைச் சாதியினர். ஊரில் அச்சாதியில் அவர்கள் மட்டுமே. அவர்களை ஊரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126288

அமேஸான் – கடிதம்

  அமேசான் இனிய ஜெயம் , அமேசான் அதிருஷ்ட போட்டி மீதான உங்கள் பதில் கண்ட எதிர்வினைகளை மூன்று வகைமையின் கீழ் தொகுக்கலாம். ஒன்று. அப்படியெல்லாம் அமேசான் வந்து இலக்கியத்தை அழித்து விடாது. ஆசான் சூழல் தன்னை திரும்பி பார்க்க வைக்க தனது பெட் தியரியை பேசுகிறார். அவரே தேவை டான் ப்ரௌன்கள் என எழுதியவர்தான். இரண்டு. இணையவெளி உருவாக்கிய புரட்சிகளில் ஒன்று இத்தகு ‘அளவுகோல்களை’ முன்வைக்கும் ஆண்டைகள் வசமிருந்தது அது இலக்கியத்தை ஒடுக்கப்பட்ட வர்க்கம் நோக்கி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126273

மும்மொழி- கடிதம்

மும்மொழி கற்றல் வணக்கம் ஜெ., மும்மொழி கற்றல் (https://assets1.jeyamohan.in/122793#.XYetqmZS82w)கட்டுரை வாசித்தேன். வரைவு தேசிய கல்விக்கொள்கை 2019, படித்துப் பார்க்கப்படாமலேயே அனைத்துத் தரப்பினராலும் விமர்சனம் செய்யப்பட்டு வருவது துரதிர்ஷ்டவசமானது. தமிழ் நாட்டைத் தவிர வேறு எங்கும் இப்படி நிகழ்ந்துள்ளதா எனத் தெரியவில்லை. வரைவு வெளியிடப்பட்ட இரண்டொரு நாட்குளுக்குள்ளாகவே, மூன்றாவது மொழியாக ஹிந்தி என்பது விலக்கிக்கொள்ளப்பட்டு ஏதாவது ஒரு இந்திய மொழி எனத் திருத்தி வெளியிடப்பட்டது. குறிப்பாக, தமிழ் போன்ற தென்னிந்திய மொழிகளில் ஒன்றை ஹிந்தி பேசும் பகுதி மாணவர்கள் படிக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126227

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-14

பகுதி மூன்று : பலிநீர் – 1  அஸ்தினபுரியில் கனகரின் பித்து தொட்டுத்தொட்டு படர்ந்து செறிந்துகொண்டிருந்தது. போர் தொடங்கியபோதே எழுந்தது அது. ஒருநாளில் ஒன்றுடனொன்று தொடர்பில்லாத நூறு பணிகள் அவர்மேல் வந்து விழுந்தன. நாழிகைக்கு நூறு ஆணைகளை இடவேண்டியிருந்தது. ஆனால் அவற்றை இயற்றும் அமைப்பு முழுமையாகவே அழிந்துவிட்டிருந்தது. நாளும் வந்துகொண்டிருந்த ஒற்றர்களில் பெரும்பாலானவர்களை அவர் முன்னர் நேரில் சந்தித்திருக்கவில்லை. ஏவலர்கள் அனைவருமே புதியவர்கள். அமைச்சர்களிலேயே பெரும்பாலும் அனைவரும் காடேகிவிட்டிருந்தனர். துரியோதனனுக்கு கங்கைநீர் தொட்டு சொல்லுறுதி எடுத்துக்கொண்டவர்கள் அவர்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125422