Daily Archive: September 25, 2019

அசோகமித்திரனும் சாதியும்

[email protected] என்ற மின்னஞ்சலில் இருந்து இந்தக் கட்டுரைக்கான இணைப்பு என் முகவரிக்கு அனுப்பப்பட்டிருந்தது. இது ஒரு போலி முகவரி என்பதில் ஐயமில்லை. இந்த முகவரியை இவ்வாறு சில நோக்கங்களுக்காக மட்டுமே உருவாக்குவதும் உண்டு. இந்தக்கட்டுரையை எனக்கு அனுப்பியவர் கூடவே எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் கடிதத்தின் தலைப்பு ‘நானும் என்னுடன் வந்திருந்த புகைப்படக்காரரும் என்ன ஜாதி என்று அசோகமித்திரன் கேட்டதையும்’ என கட்டுரையாசிரியரின் ஒருவரியாக இருந்தது.   என் கவனத்திற்கு இதைக்கொண்டு வருவதில் இருந்தே இவருடைய நோக்கத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126259

வீடு -கடிதங்கள்

வீடு நமக்கு… அன்புள்ள ஜெ   சில குறுகிய கட்டுரைகள் உங்கள் தளத்தில் ஆழமான மனப்பதிவுகளை உருவாக்கிவிடுகின்றன. அதிலொன்று வீடுநமக்கு. அந்தப்பாடல் எனக்கு மனப்பாடமாகத் தெரியும். ஆனால் வீடு ஓடு போன்ற சொற்களுக்கு இப்படி விரிவான அர்த்தம் கொள்ளமுடியும் என்று தோன்றியதே இல்லை   சித்தர்பாடல்களை வரிக்குவரி குறியீட்டு அர்த்தம்தான் கொள்ளவேண்டும் என்று கேட்டிருக்கிறேன். ஆனாலும் இப்படி ஒரு வாசிப்பை நடத்த நமக்கு ஒரு தொடக்கம் தேவைப்படுகிறது   மருதுபாண்டியன்   அன்புள்ள ஜெ   வீடுநமக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125641

வெள்ளிநிலம்- கடிதம்

வெள்ளிநிலம் -குழந்தை வாசிப்பு அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் கோவை புத்தகத்திருவிழாவில் வெள்ளிநிலம் வாங்கியிருந்தேன். இது தொடராக வந்தபோது ஒரு சில அத்தியாயங்கள் மட்டுமே வாசித்திருந்தேன் எனினும் அந்த பிட்சுவின் உடல் தோண்டி எடுக்கப்பட்ட துவக்கம் மனதில் அப்படியே பசுமையாக இருந்தது. புத்தகமாக வாசிக்க காத்திருந்து வாசித்தேன் இப்பொழுது. பனிமனிதனும் இதுவுமே நீங்கள் சிறார்களுக்காக எழுதியவை. பனிமனிதனைக்காட்டிலும் வெள்ளிநிலம் சாகசங்களும் மர்மங்களும் பயணங்களும் ஆபத்துக்களுமாக  நிறைந்திருந்தது. முழுக்கதையுமே எனக்கு மிகவும் பிடித்திருந்தாலும் முக்கியமாக இரண்டு விஷயங்கள் மிகவும் வசீகரித்தது; சிறுவன் நோர்போவுடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126076

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-11

பகுதி இரண்டு : குருதிமணிகள் – 5 வஜ்ரநாகினி அன்னையின் சிற்றாலயத்தின் அருகே மண் சரிவாக செதுக்கப்பட்டு ஆழத்திற்கு இறங்கிச் சென்றது. ஐந்தடி உயரமான சிறிய கல்ஆலயத்திற்குள் ஒரு முழ உயரத்தில் நின்றிருந்த அன்னையின் உருவம் சந்தன காப்பிடப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதற்குள் கால் மடித்து அமர்ந்திருந்த முதிய சூதப்பெண்மணி அணிகளை முழுமை செய்துகொண்டிருந்தார். ஆலயத்திற்கு முன்பு மண் வெட்டி அகற்றப்பட்டு உருவாக்கப்பட்டிருந்த நீள்சதுர வடிவ முற்றத்தில் மலர்களால் களம் அமைக்கப்பட்டிருந்தது. சிவந்த மலர்களாலும் நீல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125968