அன்புள்ள ஜெ, நலமா, நான் நலம்.சிறிது நாட்களுக்கு முன்பு இலக்கிய அமைப்புகள் பற்றி கலைச்செல்வி எழுதிய கடிதம் ஒன்று உங்கள் தளத்தில் வாசிக்க நேர்ந்தது. கலைச்செல்வி எழுதி இருப்பது நூற்றுக்கு நூறு உண்மை ஆனால் அந்த கடிதத்தில் கலைச்செல்வி பதிவு செய்திருக்கும் வாசகசாலை என்கிற இலக்கிய அமைப்பு பற்றி மட்டும் எனக்கு நிறைய முரண்பாடுகள் உள்ளது. இந்த அமைப்பை ஆரம்ப கட்டத்திலிருந்து கூர்ந்து கவனித்து வருகிறேன். தீவிர இலக்கிய அமைப்பாக தன்னை ஊர் ஊராக …
Daily Archive: September 24, 2019
Permanent link to this article: https://www.jeyamohan.in/126252
அமெரிக்கா- கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, இன்று காலைதான் ராஜன் சோமசுந்தரத்திற்கு குறுஞ்செய்தி அனுப்பி தங்களின் நலனைத் தெரிந்துகொண்டேன். சுனில் ஆரம்பித்து வைத்த வாசிப்புச் சவாலில் இன்று இருநூறைத் தாண்டிவிட்டேன். ராதா முந்நூற்று முப்பதில் இருக்கிறாள். போன செப்டம்பரில் நான் காடு வாசித்தேன். இந்த செப்டம்பரில் அவள் காடு வாசித்தாள். உனக்கு காடு நாவலில் பிடித்த பாத்திரம் யார் என்று கேட்டதற்கு காடுதான் என்றாள். இன்று ஏழாம் உலகம் நாவலை வாசித்துவிட்டு கண்கலங்கி ராதாவிடம் பேசினேன். கண்கள் கலங்கியது , …
Permanent link to this article: https://www.jeyamohan.in/126249
பெளத்தமும் விஷ்ணுபுரமும்
ஜெயமோகன் விஷ்ணுபுரம் நூலை எழுதிய பின்னர் அதில் கெளஸ்துபம் பகுதியில் வரும் தத்துவ விவதாங்களை பற்றி அறிமுகத்தை உருவாக்கும் பொருட்டு இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் என்ற நூலை எழுதினார்.அதே கெளஸ்துபம் பகுதியில் வரும் பெளத்தக் கருத்துகளை விளக்கும் பொருட்டு பெளத்த அறிஞர் ஓ.ரா.ந.கிருஷ்ணன் எழுதியுள்ள நூல் “ஜெயமோகனின் விஷ்ணுபுரம் புதினத்தில் பெளத்தக் கருத்துக்கள்”.கிருஷ்ணன் இந்த நூலில் விஷ்ணுபுரத்தின் கெளதுஸ்பம் பகுதியில் வரும் பெளத்த கருத்துக்களை பற்றி மட்டும் தன் மாற்றுப் பார்வையை முன்வைக்கிறார்.அதன் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/126115
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-10
பகுதி இரண்டு : குருதிமணிகள் – 4 தீர்க்கசியாமர் பாடிக்கொண்டிருந்தபோதே அப்பாலிருந்த முதிய சேடி ஓலைச்சுவடியில் அதிலிருந்த செய்திகளை பொறித்துக்கொண்டிருந்தாள். அவளுடைய எழுத்தாணியின் ஓசை யாழின் கார்வையுடன் இணைந்தே கேட்டது. யாழிசை பறந்துகொண்டிருக்க அது நிலத்தில் அழுந்த ஊர்ந்துகொண்டிருப்பதுபோலத் தோன்றியது. கனகர் அந்த எழுத்தாணியையும் தீர்க்கசியாமரின் யாழையும் மாறிமாறி நோக்கிக்கொண்டிருந்தார். அவை இரண்டும் ஒன்றையொன்று தொட முயன்றபடி சுழன்றுவந்துகொண்டிருக்கின்றன என்று எண்ணிக்கொண்டார். “அன்னைக்கு அரிசிப்பொடியும் மஞ்சள்பொடியும் வேம்பின்தளிரும் செம்மலர்களும் கொண்டு பூசனை செய்க! ஐந்து கான்மங்கலங்களும் எட்டு …
Permanent link to this article: https://www.jeyamohan.in/125965