Daily Archive: September 20, 2019

சுயபண்புமுன்னேற்றம்

இந்தக் குறிப்பை பெங்களூர் விமானநிலையத்தில் இருந்து எழுதுகிறேன். கழிவறைக்குச் செல்லவேண்டும். எனக்கு முன்னால் சென்றவர் ஏகப்பட்ட பெட்டிகள் ஏற்றிய ஒரு தள்ளுவண்டியை கழிவறை வாயிலை முழுமையாக மூடும்படி நிறுத்திவிட்டு சென்றுவிட்டார். உள்ளே எவருமே போக முடியாது. இப்பால் நின்று இருவர் தவிக்க ஒருவர் சத்தம்போட்டார். உள்ளே போனவர் திரும்பி வந்து பொறு என கைகாட்டிவிட்டு துடைக்கும்தாளை எடுத்து நிதானமாக துடைத்துவிட்டு அதை தள்ளி வைத்தார். அப்போது மனிதர்கள் அவசரப்படுவதைப்பற்றி ஒரு புலம்பல் வேறு- ‘என்ன மனிதர்களோ, மரியாதையே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126000

ஆங்கில இலக்கியம் இன்று, ஒரு துளிச்சித்திரம்- நரேன்

  தற்கால ஆங்கில இலக்கியத்தில் குறிப்பாக 2010 க்குப் பிறகான நேரடி ஆங்கில எழுத்துக்களில் சிறுகதைகளின் இடம் மற்றும் அதன் போக்கை வாசகப் பார்வையாக அனுகுவதே இச்சிற்றுரையின் எண்ணம். நவீன இலக்கியத்தில் ஆங்கில எழுத்துலகின் மையமாக உருவெடுத்திருக்கும் அமெரிக்காவின் சிறுகதைகளை முன்வைத்தே ஆங்கில சிறுகதைகளின் இடத்தை அனுமானிக்க வேண்டியிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் சிறந்த ஆங்கில சிறுகதைகளின் பட்டியலை நோக்குங்கால் பெருவாரியான சிறந்த கதைகள், விருது பெற்றவைகள் புலம் பெயர்ந்தவர்களின் கதைகளாகவே இருக்கிறது. அதற்கான காரணத்தை விளங்கிக் கொள்ள …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125933

ஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்

  ஜப்பானில் நடைபெற்ற 28வது ஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்’ சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது ஜப்பானில் நடைபெற்ற 28வது ஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்’ திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றிருக்கிறது. அதன் இயக்குனர் எஸ் சாய் வசந்த் இந்த பெருமதிப்பு மிக்க விருதை, விழா இயக்குனர் ஹரிகி யாசுஹிரோ மற்றும் திரைப்பட விழா கமிட்டியின் தலைவர் குபோடா இசாவ்விடம் இருந்து பெற்றுக் கொண்டார். விருதை பெற்றுக்கொண்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126159

இந்தியப்பெருமிதம் – கடிதங்கள்

இந்தியப் பெருமிதம் அன்புள்ள ஜெ   இந்தியப்பெருமிதம் என்னும் கட்டுரையை வாசித்தேன். உண்மையில் அதை வாசிக்கும்போது முதலில் கோபம்தான் வந்தது. அதற்குப்பின்னர்தான் கசப்பு. இந்தியாவில் இலங்கை- திருச்சி, சிங்கப்பூர் –சென்னை ஏர் இந்தியா, லங்கா ஏர்லைன்ஸ் விமானங்களில் ஒருமுறை பயணம்செய்த எவரும் அதிலுள்ள எந்த வரிகளையும் மறுக்கமுடியாது. பொதுநாகரீகம் என்பதே இந்தியாவில் இன்னும் உருவாகவில்லையோ என்று தோன்றும். சென்றவாரம் வரநேர்ந்தது. என் அருகே இருந்தவர் நேர்காலடியில் இருமி காறித்துப்பிக்கொண்டே இருந்தார். விமானத்தில் தரையில் துப்பும் ஒரு மனித …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125658

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-6

பகுதி ஒன்று : இருள்நகர் – 5 கூடத்தை ஒட்டியிருந்த உள்ளறைகளுக்குள் மெல்லிய காலடி ஓசைகள் கேட்கத் தொடங்கின. எவரோ கனகரிடம் “விழித்துக்கொள்ளுங்கள், யானை அணுகுகிறது” என்றார். அவர் “யானையா?” என்றார். “யானை!” என்று மீண்டும் அவர்கள் சொன்னார்கள். “விழியற்றது அது. அதன் வழியில் நின்றுகொண்டிருக்கிறீர்கள்” என்றார் ஒரு முதியவர். அவர் கனகருக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்தார். அவரை பார்க்கமுடியவில்லை. “யார், நானா?” என்று அவர் கேட்டார். “நீங்கள் விழியற்றவராக ஆனால் நன்று.” மறுகணம் தன்னுணர்வு கொண்டு வாயைத் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125822