Daily Archive: September 19, 2019

அஞ்சலி – ‘ஜக்கு’ ஜெகதீஷ்

  2017 கோவை புத்தகத்திருவிழாவில்தான் நான் ஜக்குவை முதன் முதலில் பார்த்தேன்.  ஜெயமோகனின் அனைத்து நூல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் திரு அமைத்திருந்த ஸ்டாலுக்கு ‘பனி மனிதன்’ புத்தகத்தைத் தேடி வந்திருந்தார். இன்னும் நடை பயிலாத குழந்தைகளை வைத்து தள்ளிக்கொண்டு போகும் வகையிலான ஒரு சக்கர நாற்காலியில் அவர் பிணைக்கப்பட்டிருந்தார். தலை அசையாமலிருக்க கழுத்துப்பட்டை. இரு கால்களும் அசைவற்று திசைக்கொன்றாய் விலகிக்கிடந்தன. கைகள் எதிரெதிராய் திருகி வளைந்திருந்தன. தூரத்துப்பார்வைக்கு அமர்சேவா மையம் ராமகிருஷ்ணன் போலிருந்தார். கொசுவம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126146/

சென்னையில் வாழ்தல்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் ஒரு உடல் நலக்குறைவின் பொருட்டு, மூளையை முற்றிலும் மழுங்கடிக்கும் வீரியமுள்ள மருந்துகள் எடுத்துக்கொள்வதால், வகுப்புக்களுக்கு செல்ல முடியவில்லை. கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளலாமென்று, ஒரு நீண்ட மருத்துவ விடுப்பில் சென்னை, செம்பரம்பாக்கம் சென்றேன். சரண்அப்பா துவங்கவிருக்கும் புதிய கிளையின் கட்டுமானப்பணிகள் அங்கு நடப்பதால்  அவரிருக்கும் ஒரு அடுக்ககத்தில் தங்கி இருந்தேன். இப்படியான பெருநகரங்களில் இத்தனை நீண்ட நாட்கள் தங்கி இருப்பது இதுவே முதன் முறை. (கடைசியும் கூட!) திருமணமாகி. அபுதாபியில் பல வருடங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125655/

நமது கல்வி -கடிதங்கள்

’மொக்கை’ – செல்வேந்திரன்   மும்மொழி கற்றல்   அன்புள்ள ஜெ   மும்மொழி கற்றல் ஒரு நல்ல கட்டுரை. பலகாலமாக நீங்கள் சொல்லிவருவதுதான். ஆனால் மீண்டும் அனைத்தையும் ஒன்றாகத் தொகுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். இன்றைய கல்விமுறையின் பிரச்சினை இதுதான். அது இரண்டு எல்லைகளில் உள்ளது. அரசு சார் கல்வியால் எந்தப்பயனும் இல்லை. அங்கே கல்வியே இல்லை. அரசூழியர்களுக்கே உரிய மெத்தனம். மற்றபக்கம் தனியார்க்கல்லூரியில் கல்வியை வணிகப்பொருளாக்கி வியாபாரப்போட்டியாக்கி வெறும் டிரெயினிங் ஆக்கிவிட்டார்கள்.   கல்வியை வடிவமைப்பவர்களுக்கு அவர்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125634/

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-5

பகுதி ஒன்று : இருள்நகர் – 4 அகத்தளத்தின் இடைநாழியினூடாக நடந்து காந்தாரியின் அரண்மனை முகப்பை அடைந்து அங்கு காவல் நின்றிருந்த ஏவல் பெண்ணிடம் தன் வரவை அறிவிக்கும்படி கனகர் கைகாட்டினார். அவள் தலைவணங்கி உள்ளே சென்றதும் பெருமூச்சுடன் தன் ஆடையை சீரமைத்தபடி உடல்தளர்த்தி நின்றார். ஓர் இடத்திற்குச் சென்றபின்னரும் அங்கே சென்றுசேராத தன் உள்ளத்தைப் பற்றி எண்ணிக்கொண்டார். எண்ணியிராத இடங்களுக்குச் சென்று திகைத்து நின்றிருந்தது தன்னுணர்வு. அங்கு வந்த பாதை முற்றாகவே அழிந்துவிட்டிருந்தது. அங்கிருந்து மீண்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125619/