Daily Archive: September 17, 2019

விரலிடுக்கில் நழுவுவது

  கற்பனாவாதம் காமம் சார்ந்ததாக மட்டுமே நின்றுவிடுகையில் ஒரு வகையான சலிப்பை விரைவாகவே உருவாக்கிவிடுகிறது. கற்பனாவாதம் என்பது சிறகடித்தெழல். காமத்தில் சிறகடிப்பதற்கு சாண் அளவுக்கு அகலமான வலைக்கூண்டுதான் உள்ளது. எங்கெல்லாம் காமம் சார்ந்த கற்பனாவாதம் கலையாகிறதோ அங்கெல்லாம் அது அடுத்தகட்டத்திற்கு நகர்ந்திருப்பதைக் காணலாம். காமம் மானுட உறவுக்குக் குறியீடாக ஆகும். இயற்கையுடனான முயங்கலின் அடையாளமாகும். காலம் வெளியென தழுவி விரியும் பேருணர்வாகும். இறையனுபவமாக ஆகும். நாம் கொண்டாடும் மகத்தான அகத்துறைப் பாடல்கள் அனைத்துமே அவ்வகையில் காமம் என்னும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125894

கல்,கல்வி

  இனிய ஜெயமோகன் அவா்களுக்கு அறிந்திருப்பீா்கள் என நினைக்கிறேன்.  பொள்ளாச்சி கோவை பிரதான சாலையில் அமைந்துள்ள குரும்பபாளையத்தில் 2300 ஆண்டுகள் பழமையான நெடுங்கல் திருப்பூாில் இயங்கிவரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் ஆய்வு மையத்தை சாா்ந்த நண்பா்கள் கண்டெடுத்துள்ளனா். ஏறத்தாழ 14 அடி உயரமும்,  கீழ்பகுதி 4 அடி அகலமும்,   முன்பாக உள்ள கல் வட்டம் 20 அடி சுற்றளவும் 55 செ. மீ உயரமும் கொண்டதாக காணப்படுகிறது. அதனுடைய எடை 10 முதல் 15 டன் இருக்ககூடும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125571

பகடியும் தமிழிலக்கியமும்- கடிதம்

  தீவிரச் சிறுகதைகளும் பகடிச் சிறுகதைகளும் -சாம்ராஜ் அன்புள்ள ஜெ சாம்ராஜ் அவர்கள் தமிழில் பகடி எழுத்து பற்றி எழுதியிருந்த கட்டுரையை வாசித்தேன். அவருடைய முதல்வரிகளிலேயே தமிழிலக்கியத்தைப்பற்றிய ஒரு பிழையான மதிப்பீடு இருப்பதுபோல எனக்குப்பட்டது. தமிழில் முழுக்கமுழுக்க பகடி எழுதிய, வேறொன்றையும் எழுதாத இலக்கியப்படைப்பாளிகள் இல்லை. ஆனால் தமிழில் எழுதிய எல்லா முக்கியமான படைப்பாளிகளும் ஆழமான பகடிக்கதைகளை எழுதியிருக்கிறார்கள். தமிழிலக்கியத்தின் வலிமையான ஒரு பகுதியாகவே பகடி எழுத்து இருந்துகொண்டிருக்கிறது சாம்ராஜின் பிரச்சினை என்னவென்றால் அவர் அரசியல்பகடியை மட்டுமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125866

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3

பகுதி ஒன்று : இருள்நகர் – 2 அஸ்தினபுரியின் அரண்மனை எரிபுகுந்து எழுந்ததுபோல் கருகி இருந்தது. அதன் தூண்கள் அனைத்தும் தொட்டால் கையில் கரி படியுமோ என நின்றிருந்தன. சுவர்கள் இருள்திரையென்று தொங்கின. நடக்கும் பாதையில் மரப்பலகையின் தேய்தடம்மேல் படிந்திருந்த சாளரத்து மெல்லொளியும் கூட இருளே நீர்மை கொண்டதென்று தோன்றியது. அரண்மனையின் இடைநாழிகளுக்குள் நடக்கையில் அதுவரை அறிந்திராத இடத்திற்கு வரும் பதற்றத்தை கனகர் உணர்ந்தார். மறுகணம் ஏதோ கொடிது நிகழவிருப்பதைப்போல. எவரோ ஓசையின்றி பின்தொடர்வதுபோல. இருளுக்குள் எவரோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125550