Daily Archive: September 15, 2019

பொன்னீலன் 80- விழா

வணக்கம் நான் ராம் தங்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களோடு பேசிக் கொண்டிருக்கும்போது, பொன்னீலன் அண்ணாச்சிக்கு இந்த ஆண்டு 80 ஆவது பிறந்தநாள். அவர் எழுத வந்து 55 ஆண்டுகள் ஆகிறது என்கிற தகவலை அவரிடம் சொன்னேன். உடனே நாஞ்சில்நாடன் இதனை ஒரு பெரிய விழாவாக ஒரு நாள் நிகழ்வாக எடுக்க வேண்டும். நாகர்கோவிலில் தான் எடுக்க வேண்டும். தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து முக்கியமான ஆளுமைகளை அழைத்து இந்த விழாவை எடுக்கவேண்டும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126087

தினமணியும் நானும்

எங்கள் வீட்டில் அன்றெல்லாம் நாளிதழ்கள் வாங்குவதில்லை. வீட்டில் நாளிதழ்வாங்குவதென்பது எழுபதுகளில் கிராமங்களில் எண்ணிப்பார்க்கமுடியாத ஒன்று. டீக்கடைகளில் தினத்தந்தி வாங்கப்படும். ஊரேகூடி வாசிப்பார்கள். நான் நாளிதழ்களை நாடகத்தனமாக வாசிப்பதில் திறன்கொண்டவன்.  “பேச்சிப்பாறை நீர்மட்டம்!” என அறிவித்து ஆழ்ந்த இடைவெளிக்குப்பின்  “இருபது அடி!” என்பேன். பெருமூச்சுகள் ஒலிக்கும்.    நான் அறிந்த நாளிதழ்களின் எச்சாயலும் இல்லாத நாளிதழாக இருந்தது தினமணி. அவ்வப்போது அதைப்பார்த்திருந்தாலும் வாசிக்கத் தோன்றியதில்லை. அதன் மொழிநடையும் செய்திகளின் அமைப்பும் சிறுவர்களுக்கு உரியதாக இருக்கவில்லை. பின்னர் தினமணியை தொடர்ந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125843

சாக்லேட்டிற்கும் கவிதைக்கும் என்ன வித்தியாசம்?

  கவிதை என்பது ஒரு சமூகத்தின் கூட்டுநனவிலியில் உள்ள படிமங்கள் மொழிக்குறிகள் மூலம் இணைக்கப்பட்டு புதிய படிமங்கள் உருவாக்கப்படும் ஒரு வெளிப்பாட்டு முறை – ஜெயமோகன்     கவிதை மட்டுமல்ல, கவிதை பற்றி எழுதியது கூட புரியாத ஒரு ஆரம்ப நிலை வாசகன், தமிழின் முதன்மை கவிஞர்களில் ஒருவரான தேவதேவனை சந்தித்தால்?   ஊட்டி குரு நித்யா காவிய முகாமிலிருந்து கோவை ரயில் நிலையம் வரை கவிஞர் தேவதேவன் அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு அமைந்தது. அவருடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125830

நீரும் நெறியும் கடிதங்கள்

நீரும் நெறியும்   அன்புள்ள ஜெ   நீரும் நெறியும் பழைய கட்டுரை. ஆனால் மீண்டும் மீண்டும் புதிதாக வாசிக்கவைக்கிறது. ஏனென்றால் இன்றைக்கும் இருக்கும் பிரச்சினை. நாம் காவேரிநீரை நமக்குத்தரவில்லை என்பதை மட்டும் உணர்ச்சிப்பிரச்சினையாக ஆக்கிக்கொள்கிறோம். நமது நீராதாரங்கள் அழிவதைப்பற்றி கவலைப்படுவதில்லை.நம்முடைய நீரை நம் சகோதரர்களுடன் பகிர்ந்துகொள்வதுமில்லை.   நாம் இந்த மனநிலையை எவரேனும் சுட்டிக்காட்டினால் அவர்மேல் கோபம் கொள்கிறோம். கொந்தளிக்கிறோம். உண்மையில் நம்முடைய பிரச்சினைதான் என்ன என்பதே சிக்கலான கேள்விதான். நம்முடைய பலவீனங்களையும் சில்லறைத்தனங்களையும் மறைக்கவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125637

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-1

தோற்றுவாய் மலைசரிந்து இறங்கி, மண் செழிக்க ஒழுகி, அழிமுகத்தில் கடலைச் சேர்ந்து விரிநீர் என்றானது கங்கை. அலையலையெனப் பெருகி தன்னைத் தானே நிறைத்துக்கொண்டது. காற்றும் ஒளியும் கொண்டு வெளியாகியது. நீலவானாகியது. தன்னில் தான் செறிந்து எட்டுத் திசைகளையும் நிறைத்து அமைந்தது. கேள் அரசே, இது முன்னர் நிகழ்ந்த கதை. முன்னர் நிகழ்ந்தவை கோடி கோடி. அவற்றில் கண்ணீரும் கனவும் சென்று தொட்டவை மட்டுமே ஒளிகொள்கின்றன. ஒளிகொள்வனவற்றை மட்டுமே எடுத்துச்சேர்க்கின்றனர் நூலோர். எண்ணிப்பயில்கின்றனர் வழிவழி வருவோர். மானுடரின் விழிநீர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126043