Daily Archive: September 13, 2019

ஆழமில்லாத நீர்

  இரவெல்லாம் மழை முழங்கிக்கொண்டிருந்தது. காலையில் துளிச்சாரலும் காற்றும் சூழ்ந்திருக்க  நடக்கச் சென்றேன். இன்று இந்த மண்ணில் படும் முதல் மானுடக்காலடி என்னுடையது. எனக்குமுன் ஒரு நாய் சென்றிருக்கிறது. சில பறவைகள். அனேகமாகக் கொக்குகள். செம்மண்ணில் மழை கூழாங்கற்களை சற்று மேலே தூக்கிப் பரப்பியிருக்கிறது. முன்பு பல ஆயிரமாண்டுகள் தொடர்ந்து பெய்த ஆதிமழையால் இவ்வண்ணம் எழுப்பப்பட்ட கற்களே அதோ அந்த மலைமேல் உச்சிப்பாறைகள் என அமைந்திருக்கின்றன. அந்த மழையில் உருவான ஓடைகளே பள்ளத்தாக்குகள். ஒவ்வொன்றும் கழுவப்பட்டு குளிர்ந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125918

மொழி,எழுத்து,மதம்- அ.பாண்டியன்

ஜாவி-காட்- வனப்பெழுத்தும் வாய்ச்சண்டையும் மும்மொழி கற்றல் வணக்கம் ஜெயமோகன் அவர்களே, உங்கள் மும்ழொழி கல்வி பற்றிய கட்டுரையை வாசித்தேன். அதில் நீங்கள் கூறிய இரு கருத்துகளை தொட்டு சில விடையங்களை அனுபவப்பூர்வமாக பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன். காரணம் மும்மொழி கல்வி பற்றியும் எழுத்துரு மாற்றம் பற்றியும் மலேசியர்களின் அனுபவம் இந்தியர்களை விட கூடுதலாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். கடந்த அறுபது ஆண்டுகளாக இங்கு ஒரு மொழியா, இரு மொழியா அல்லது மும்மொழியா என்கிற வினாவுக்கு தக்க பதில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125955

ஊட்டி கடிதங்கள்

ஊட்டி, அபி, இளவெயில், குளிர் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் ’ஊட்டி குளிர் அபி’ வாசித்தேன். பொள்ளாச்சியிலும் நீங்கள் சொல்லியிருந்த அதே சீதோஷ்ணம், குளிரும் சாரல் மழையும் பச்சை பிடித்திருக்கும் சுற்றுப்புறங்களும் இளவெயிலுமாக இருக்கிறது. அதனாலோ என்னவோ வழக்கமான, ”அடடா ஊட்டிக்கு நானும் போயிருந்திருக்கலாம்” என்னும் ஏக்கம் வராமல் நானும் அங்கே வந்திருந்தது போலவே இருந்தது ஊட்டி எனக்கு மிகப்பழகிய ஒரு இடம். கோத்தகிரி வனக்கல்லூரியில் 3 வருடங்கள் ஆய்வு மாணவியாக இருந்திருக்கிறேன். எனினும் குருநித்யா ஆசிரமம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125670

காஷ்மீரின் குளிர்

  https://youtu.be/nspiSdUFoNg   அறுபது எழுபதுகளின் இந்தி சினிமாக்களில், வண்ணம் வந்து, ஈஸ்ட்மென் படச்சுருள் அறிமுகமாகி, நவீன ஒளிப்பதிவுக்கலை பரவலாகத் தொடங்கியபின் காஷ்மீர் பேரழகுடன் வெளிப்பட்டிருக்கிறது. காஷ்மீர் ஒரு பொதுக்கனவாக வெகுஜன மோகமாகவே அன்று இருந்திருக்கவேண்டும். டெல்லியில் இருந்து மிக அணுக்கமான இடங்களாக ஸ்ரீநகரும் குலுமணாலியும் இன்று தோன்றுகின்றன. எழுபதுகளில் அது ஒரு வாழ்நாள்கனவாக இருந்திருக்கும். திரும்பத்திரும்ப பார்த்திருக்கிறார்கள் அழகான ஒளிப்பதிவில் டால் ஏரியும் ,குல்மொஹர்கள்பூத்த பூங்காக்களும் பனிமலைகளும் விழிகளை நிறைக்கின்றன. இந்த காஷ்மீரை ஒருவேளை இன்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125900