Daily Archive: September 12, 2019

சுகிசிவமும் சுப்ரமணியனும்

  அன்புள்ள ஜெ, இணையத்தில் இப்போது திரு.சுகி.சிவம் அவர்களின் வேத, தமிழ் கடவுள் என்பதின் விளக்கங்கள் சர்ச்சை ஆகி வருகின்றது. நீங்கள் கவனித்திருக்கக்கூடும்? பெரும்பாலும் இவ்வித இணைய வம்புகள் / கூச்சல்களை நான் பொருட்படுத்துவதில்லை. மேலும் இந்து மதம் பற்றி “இந்திய ஞான மரபின் ஆறு தரிசங்கள்” படித்தபின், எனக்கு எவ்வித குழப்பமும் இல்லை. மதம் என்பது குறிப்பாக இந்து மதம், தத்துவம், மற்றும் குறியீடுகள்தான் அதன் மையமாக இருக்கும். வழிபாடுகள் அதன் சடங்குகள் சமுதாயத்தின் அமைப்பை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125778

சிவப்பயல் -கடிதங்கள்

சிவப்பயல் அன்புள்ள ஜெ, சீரியசாக எழுதப்பட்ட கட்டுரைகள் நடுவே அவ்வப்போது உங்கள் புன்னகை வந்துசெல்லும் அழகான சின்னக் கட்டுரைகள் உண்டு. ஒரு சித்திரம் அல்லது ஒரு நினைவு. அந்தக்கட்டுரைகள்தான் எனக்கு நெடுங்காலம் நினைவில் நின்றிருக்கின்றன. ஏன் என்று நான் யோசிப்பதுண்டு. எனக்கு தோன்றுவது இதுதான். இங்கே கருத்தியல் அரசியல் எது சார்ந்து எழுதினாலும் ஒரு எதிர்மறைத்தன்மை அல்லது விமர்சனத்தன்மை வந்துவிடுகிறது. ஆனால் இந்தவகையான கட்டுரைகள் முழுக்கமுழுக்க நேர்நிலையானவை. காலையில் இவற்றை வாசிப்பது ஓர் இனிய தொடக்கமாக அமைகிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125653

நீலவானும் மண்ணும்

பனிமலையில் பாடல்களைக் கேட்கையில் காட்சிவடிவத்தை நான் அரிதாகவே பார்க்கிறேன். அவை பெரும்பாலும் என்னுள் எழும் காட்சிகளை விடக்குறைவாக, மிகத்தொலைவாகவே இருக்கின்றன. ஆனால் ஹம்ராஸ் படத்தின் இமையமலைக் காட்சிகள் பல நினைவுகளை எழுப்புபவை. நான் கண்ட இமையமலைக்காட்சிகள். ஒளிரும் நீரோடைகள். பனிமலைகள். ஆனால் மகேந்திர கபூர் அவரே மேடையில் பாடும் இந்தப்பாடல் ‘ஹே நீல் ககன் கி தலே’ இன்னொருவகை அனுபவமாக இருந்தது. திரையில் ஒலிக்கும் வடிவின் பெரிய அளவிலான பின்னிசை ஏதுமில்லை. அவருடைய குரலை இன்னும் அணுக்கமாகக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125857

பகடி எழுத்து – காளிப்பிரசாத்

தீவிரச் சிறுகதைகளும் பகடிச் சிறுகதைகளும் -சாம்ராஜ்   அன்புள்ள ஜெ, சிறுகதை அரங்கில் சுனில் கட்டுரையைத் தொடர்ந்து  அவர் விட்டு விட்ட பல எழுதாளர்களைப் பற்றிய விவாதம் எழுந்த்து. அந்த அரங்கில் சாம்ராஜும் தன் உரையில்  ஒரு முக்கியமான பகடி எழுத்தாளரை விட்டுவிட்டார் என நான் கருதுகிறேன்.  தமிழின் முக்கியமான அந்த பகடி எழுத்தாளர் பற்றி நான் பேசிய உரையின் எழுத்து வடிவத்தை இணைத்திருக்கிறேன் அன்றாடங்களின் அபத்தத்தை எழுதுதல் அன்புடன், R.காளிப்ரஸாத் ***

Permanent link to this article: https://www.jeyamohan.in/125863