Daily Archive: September 11, 2019

பழையமுகம் (சிறுகதை)

[சிறுகதை] கல்யாணம் உள்ளே வந்து புன்னகைத்து பின்னால் திரும்பி ”வாடி” என்றான். பூப்போட்ட சிவப்பு சேலையால் முக்காடுபோட்ட ஒரு பெண் உள்ளே வந்தாள். கல்யாணம் ”அண்ணா வேற என்னமாம் வேணுமா?” என்றான்.

Permanent link to this article: https://www.jeyamohan.in/6909

திப்பு சுல்தான் யார் – பி.ஏ.கிருஷ்ணன்

  திப்பு மறுபடியும் பேசப்படுகிறார்.சிலருக்கு அவர் சுதந்திரப் போராட்ட வீரர். வெள்ளையரை வெளியேற்ற அயராது பாடுபட்டவர். மதச்சார்பின்மையின் சின்னம். சிலருக்கு அவர் இஸ்லாமிய அடிப்படைவாதி. இந்துக்களை வேரோடு ஒழிக்க, விடாது முயற்சி செய்தவர். இந்திய வரலாற்றின் மிகப் பெரிய கொடுங்கோலர்களில் ஒருவர். வரலாறு என்ன சொல்கிறது?இதை அறிய நாம் சில கேள்விகளக் கேட்க வேண்டும். பதில்களை வரலாற்றுப் புத்தகங்களில், வரலாறு விட்டுச் சென்ற சுவடுகளில் தேட வேண்டும். திப்பு சுல்தான் – வரலாறு என்ன சொல்கிறது? ***

Permanent link to this article: https://www.jeyamohan.in/125827

16- 08-2019- கடிதங்கள்

கவிஞனின் ஒருநாள் அன்புள்ள ஜெ கவிஞனின் ஒருநாள் ஒரு நல்ல குறிப்பு. அப்படி அடையாளம் காட்டியிராவிட்டால் அந்த ஒருநாள் எவராலும் கவனிக்கப்படாமலேயே போயிருக்கும். ஒருநாளில் இவ்வளவு அற்புதமான கவிதைகளை ஒரு கவிஞன் எழுதியிருக்கிறான் என்பதே மிகமுக்கியமான விஷயம்தான். இன்னும் சில ஆண்டுகளில் இந்த ஒருநாள் ஒருவேளை நிறையவே பேசப்படக்கூடியதாக ஆகிவிடலாம். ஆனால் இப்படி அடையாளம் காட்டினால் மட்டுமே முகநூலில் அந்த நாளுக்கு முக்கியத்துவம் வருகிறது. அதுதான் முகநூலின் பிரச்சினை எம்.ராஜேந்திரன் *** அன்புள்ள ஜெ போகன் சங்கரின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125644

பாலா- வைகுண்டம் -பொருளியல்- விவாதம்

காந்தி – வைகுண்டம் – பாலா திரு பாலா அவர்களின் நீண்ட பதிலில் மேட்டிமை வாதம், மனச்சாய்வு போன்ற சொற்கள் சற்று வருத்தமளிக்கின்றன. மக்கள் நலத்திட்டங்களும், ஏன் இலவசங்களும், தவறு என்று நான் சொல்லவேயில்லையே. தொழில் வளர்ச்சி காணும் சமூகத்தில் மட்டுமே இவை சாத்தியம் என்ற என் கருத்தை சொன்னேன். தமிழ்நாட்டின் மக்கள் நலத்திட்டங்கள் டாஸ்மாக்கினாலும், திருப்பூர், ஓரகடத்தினாலும் சாத்தியம் ஆகின்றன என்கிறேன். இதையும் தீர்வாகச் சொல்லவில்லை. ஐயமாகவே .சொல்கிறேன். மாற்றுக்கருத்துக்கு தற்கால தரவு உண்டா என்றே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125569