Daily Archive: September 10, 2019

இந்துமத விவாதங்கள்

  அன்புள்ள ஜெ   நான் இந்துமதம் பற்றிய சிந்தனைகளில் ஆர்வம் கொண்டவன். நான் இந்துமதம் பற்றித்தெரிந்துகொண்டதெல்லாம் என் அப்பாவிடமிருந்து. அப்பா கம்யூனிஸ்டுக் கட்சியைச் சேர்ந்தவர். ஆகவே மிகவும் எதிர்மறையான நாத்திகப்பார்வையே எனக்கு அளிக்கப்பட்டது. புகழ்ச்சிக்காகச் சொல்லவில்லை. எனக்கு உங்கள் தளம் வழியாகவே இந்துமதம் அறிமுகமாகியது. இதிலுள்ள கலை, தத்துவம், மெய்யியல் எல்லாமே தெரியவந்தது. உங்கள் நூல்களை வாசித்திருக்கிறேன். நாம் பாண்டிச்சேரியில் ஒருமுறை சந்தித்திருக்கிறோம்   ஆனால் இப்போது இந்துமதம் சார்ந்து நடக்கும் விவாதங்களைப் பார்க்கையில் திகைப்பு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125739/

மோடி முதலை பாலா- கடிதம்

மோடி,முதலை -கடிதம்   வணக்கம் ஜெ.,   இந்தக் கடிதத்தில் https://www.jeyamohan.in/125145#.XW9Yro9S_b0 பாலா குறிப்பிட்டிருக்கும் இரண்டு விசங்கள் குறித்த செய்திகள் சமீபத்தில் வெளிவந்தன.   /* மிகப் பிரபலமான ஜிம் கார்பெட் தேசியப்பூங்காவின் ஊடே செல்லும் சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்படுகிறது. உலகில் மிக அதிகமான புலிகளைக் கொண்ட சரணாலயம் இது*/   இந்தச் சாலை அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. Road will imperil Corbett tiger population, Centre tells National Green …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125881/

மங்கல இசை மன்னர்கள்

மங்கல இசை மன்னர்கள் வாங்க… மங்கல இசை மன்னர்கள் நூல் பற்றி   காவிரிக்கரையோர கிராமம் ஒன்றிற்க்கு துக்கநிகழ்வுக்கான ஒரு பயணம். துக்கவீட்டில் சம்பிரதாயங்கள் நடந்துகொண்டிருக்க, நேரம் கடத்த அருகாமை திண்ணையொன்றிற்க்கு அழைத்துப்போனார் உடன் வந்த தாய்மாமன். இடிபட காத்திருக்கும் சுத்துகட்டு ஓட்டுவீடு. சிரிதும் பெரிதுமாய் நீள்செவ்வக வடிவிலான பழங்கால திண்ணைகள். புழக்கம் காரணமாய் வலப்பக்க சிறுதிண்ணை மட்டும் பளபளப்பை பரிமளிக்க, இடது திண்ணை மென்தூசியால் மெழுகப்பட்டிருந்தது. ”இது யாரு வீடு தெரியுமா?…” காலஞ்சென்ற பிரபல நாதஸ்வர …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125729/

தடம் – கடிதங்கள்

தடம் இதழ் அச்சிதழ்கள், தடம்     அன்புள்ள ஜெ, நலமா? தடம் இதழ் நிறுத்தப்படுவது குறித்த உங்கள் பதிவு. நான் தடம் இதழ் ஆரம்பித்த சில இதழ்களுக்கு அதை படிப்பதில்லை. முதன்மையான காரணம் உள்நோக்கம் கொண்ட காழ்ப்புணர்ச்சி அரசியல்- பொது பிரச்சினையிலும் இலக்கியத்திலும். திரும்ப திரும்ப மதவாத அரசியலின் ஆபத்து குறித்து மட்டுமே வெவ்வேறு வடிவங்களில் உள்நாட்டு – வெளிநாட்டு எழுத்தாளர்களின் புலம்பல்களை வெளியிடுவது ஆனால் இஸ்லாமிய மதவாதம் குறித்து பேசாமல் இருப்பது, தலித் அடக்குமுறை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125675/

ஒரு வரலாறு வெளியாகும் பொருட்டு…

  “அந்த நீதிமன்றத்தின் ஒரு பக்கத்தில் 112 வழக்கறிஞர்கள் அமர்ந்திருந்தனர். அனைவரும் கோட் சூட் அணிந்திருந்தனர். அவர்களைச் சுற்றிலும் அவர்களது உதவியாளர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் மிகவும் இளமையாக இருந்தனர். நீதிமன்ற வளாகத்தின் எஞ்சிய பகுதிகளில் இவர்களைப் பணிக்கு அமர்த்திக்கொண்டுள்ள நூற்றுக்கணக்கான ஆசிய, ஐரோப்பிய, அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் அமர்ந்திருந்தனர். அந்தந்தநாட்டு அரசாங்கப் பிரதிநிதிகள் வந்திருந்தனர். பிரச்சனையின் காரணகர்த்தாவான உலகவங்கிப் பிரதிநிதிகள், ‘எத்தனை கோர்ட் படிகள் நாங்கள் ஏறி இறங்கி இருப்போம்’ என்ற மிதப்பில், மவுனமாக எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். வழக்கு கிட்டத்தட்ட இருபது நாட்கள் நடைபெற்றது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126006/