Daily Archive: September 8, 2019

போதையும் தமிழகமும்

  அன்புள்ள ஜெமோ, எழுத்தாளர். சரவணன் சந்திரன்  பேஸ்புக்கில் போட்டிருந்த பதிவு இது.   இது சார்ந்து மற்ற நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஒவ்வொருவரும் சொன்ன செய்திகளை கேட்டபோது ஏனோ திடீரென எனக்கு வயதாகிவிட்ட ஒரு உணர்வு தோன்றியது … நான் பழைய ஆள் ஆகிவிட்டது போன்றும், நான் வாழ்ந்த ஒரு காலகடட வாழ்க்கை சூழ்நிலை எப்போதோ கடந்து போய்விடடது போலவும் இப்போது இருப்பது வேறு ஏதோ உலகம் போன்றும்…..   இதெல்லாம் அதிர்ச்சியாக எனக்கு இருப்பதை இன்றைய இளைஞர்களிடம் சொன்னால்  இதெல்லாம் ஒரு மேடட்டரே இல்லை என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125627

வேங்கடத்துக்கு அப்பால்…

நமது ஊற்றுக்கள் வேங்கடத்துக்கு அப்பால் தமிழ் டிஜிட்டல் நூலகம் வேங்கடத்துக்கு அப்பால் வாங்க…   அன்புள்ள ஜெயமோகன்,   தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானின் ‘’வேங்கடம் முதல் குமரி வரை’’ நூலைத் தொடர்ந்து அவர் எழுதிய ‘’வேங்கடத்துக்கு அப்பால்’’ என்ற நூலை வாசித்தேன். நண்பர்கள் சிலருடன் கோவையிலிருந்து காரில் புறப்பட்டு ஒரு இந்தியப் பயணத்தை நிகழ்த்துகிறார். அப்பயணத்தில் அவர் சென்ற தலங்களைக் குறித்து எழுதுகிறார். அவர் பயணித்திருக்கும் பாதை இந்தியப் பயணம் மேற்கொள்ள விரும்பும் ஆர்வலர்களுக்கு இந்தியாவின் இந்தியக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125622

அபி- அந்தியின் த்வனி

கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது அபி கவிதைகள் நூல் அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,   தற்செயல் என்று எதுவுமில்லை என்று நானும் கருதுகிறேன் அல்லது அனைத்தும் ஓயாத தற்செயல்களின் மொத்தம்.  கவிஞர் அபி அவர்களின் கவிதைகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.  முதலில் மிக கொஞ்சம் வாசித்தபோது நிச்சயம் இவரை வாசித்தாக வேண்டும் என்று ஒரு எண்ணம் துளிர்த்து அது இனிமையாக உள்ளிருந்து மென்காற்றி்ல் அவ்வப்போது ஆடிக்கொண்டிருந்தது.  அவரது கவிதை நூல் எங்கு கிடைக்கும் நண்பர்களிடம் கேட்க எண்ண அவரது மாணவர்கள் இணையத்தில் ஏற்றியது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125328

பனிமலையில்

தும் அகர் சாத் தேனே கா [நீ என்னுடனிருப்பது வரைக்கும் அழகிய பாடல்களை பாடிக்கொண்டிருப்பேன்] மகேந்தர் கபூர் http://meaninngtranslation.blogspot.com/2015/12/tum-agar-saath-dene-ka-lyrics.html   திருவனந்தபுரத்தில் அன்றெல்லாம் இந்திப்படங்கள் கொஞ்சம் பழசாகி மீண்டும் வரும். ஸ்ரீகுமார்-ஸ்ரீவிசாக் இரு அரங்குகளில் ஒன்றில். கல்லூரி முதலாண்டில் திருவனந்தபுரம் சென்றபோது சும்மா ஒன்றுமேதெரியாமல் ஏறி அமர்ந்து பார்த்தபடம் ஹம்ராஸ். யார் நடித்தது,என்ன கதை, என்ன பின்னணி ஒன்றும் தெரியவில்லை. ஆனால் விந்தையான ஓர் அனுபவம். அந்தப்படம் வெறும் காட்சியனுபவமாகவே என்னுள் பதிந்துவிட்டது. அதை முழுக்கமுழுக்க கண்களாலேயே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125798