‘நூறுமலையாளம் உண்டெங்கிலெந்தெடி பெண்ணே? காறுமலையாளம் அல்லேடி மலையாளம் கண்ணே!’ ஒரு பழைய நடவுபாட்டு. நூறுமலையாள மண் இருந்தாலுமென்ன கார் மலையாளம் அல்லவா மலையாள மண்? அழகான பாடல். அக்காலங்களில் நாற்றுநடவு செய்பவர்கள் அடிக்கடிப் பாடிக்கேட்டிருக்கிறேன். ஆறுமலையாளிக்கு நூறு மலையாளம் [ஆறு மலையாளிகள் சேர்ந்தால் நூறு மலையாள உச்சரிப்பு] என்ற பழமொழியுடன் இதையும் சேர்த்துப் புன்னகைத்துக்கொள்வதுண்டு. இரவும்பகலும் மழைபெய்துகொண்டிருக்கும் குமரிமாவட்டத்தில், சேறுகலங்கிய வயலில் முட்டளவு இறங்கிநின்று நாளுக்கு பத்துமணிநேரம் வேலைபார்ப்பவர்கள், திரும்பிச்செல்லும் வீடும் சற்றே …
Daily Archive: September 7, 2019
Permanent link to this article: https://www.jeyamohan.in/125869
தூக்குமேடைக் குறிப்புகள்
தூக்குமேடைக்குறிப்புகள் வாங்க ஆசிரியருக்கு, கடந்த இரு மாதங்களாக நாங்கள் இணை வாசிப்பு ஒரு அமைப்பை துவங்கி உள்ளோம். ஒரே சமயத்தில் ஒரே புத்தகத்தை வாசித்து அது குறித்து தொடர்ச்சியாக விவாதிப்பது என்பது இதன் செயல்பாடு. இதன்மூலமாக அந்த புத்தகத்தை அழுத்தமாக மனதில் பதிய வைத்துக் கொள்வது இதன் என்பது நோக்கம். இப்போதைக்கு சுமார் 20 பேர் உள்ளோம் படித்தபின் அனைவரும் அதை பற்றி ஒரு குறைந்தபட்ச குறிப்பு எழுத வேண்டும் அதை அனைவரும் கூட்டாக வாசிக்க வேண்டும் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/125463
அகதி வாழ்வு
அன்பு ஜெயமோகன், சமீபமாய் ஈழத்துக்குத் திரும்பி இருக்கும் எழுத்தாளர் தொ.பத்திநாதன் அவர்களின் நேர்காணல் இம்மாதக் காலச்சுவடில்(செப்டம்பர் 2019) வெளியாகி இருக்கிறது. மிகச்சுருக்கமான அதே நேரம் நேர்த்தியான உரையாடலாக அந்நேர்காணல் அமைந்திருந்தது. அவரின் இரு கட்டுரைகளுக்கான இணைப்பை இங்கு தருகிறேன் நட்டாற்றில் கைவிடப்பட்டவர்களா தமிழகம் வாழ் ஈழ அகதிகள்? தமிழகத்தின் ஈழஅகதிகள் நேர்காணலைத் தொடர்ந்து, இலங்கைக்குச் சென்றிருக்கும் அவரை ஆதவன் தொலைக்காட்சி பேட்டி கண்டிருந்தது. அக்காணொலியும் சிறப்பான ஒன்று. அதன் சுட்டியை இத்துடன் இணைத்திருக்கிறேன். …
Permanent link to this article: https://www.jeyamohan.in/125726
கடலூர் சீனுவின் கடிதங்கள்…
உங்கள் இணையத்தில் திரு கடலூர் சீனு அவர்களின் கடிதம், கட்டுரைக்கென விசிறி வட்டம் உருவாகியிருக்கும் என நினைக்கிறேன். சில வேளைகளில் மிகக் கட்சித்தனமான வாக்கியங்களால் ஒரே பத்தியில் பல விஷயங்களை தாண்டி விடுகிறார். உங்கள் குழுமத்தின் அறிவு செயல்பாட்டையும், கூர்மையையும் தமிழ் இலக்கிய வட்டம் நன்கு அறியும். ஆனால் அதில் பங்கு கொள்ளாத இயலாத என்னை போன்றோருக்கு திரு சீனு அவர்களின் கடித பங்களிப்பு அங்கு நடக்கும் விவாதங்களை “ஒட்டு கேட்ட” மன திருப்தியை அளிக்கிறது. …
Permanent link to this article: https://www.jeyamohan.in/125632