Daily Archive: September 4, 2019

அழிசி விமர்சனக்கட்டுரைப் போட்டி

அன்பின் ஜெ, வணக்கம். நலம்தானே? சென்ற ஆண்டு நடத்திய விமர்சனப் போட்டி இவ்வாண்டும் தொடர்கிறது. 2000-ஆம் ஆண்டுக்குப் பின் அறிமுகமான எழுத்தாளர்களின் படைப்பை முன்வைத்து கட்டுரையைக் கோருகிறோம். இம்முறை மூன்று பரிசுகள். எழுத்தாளர்கள் பாவண்ணன், எம்.கோபாலகிருஷ்ணன் மற்றும் க.மோகனரங்கன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட இசைந்துள்ளனர். இரண்டாயிரத்துக்குப் பின் எழுதவந்தவர்களின் முழுப் படைப்புகளைப் பற்றிய விமர்சனமாக இருக்க வேண்டும் என்று விரும்பினோம். சென்ற முறை, 24 கட்டுரைகளே வந்தன என்பதை நினைத்துப்பார்த்து, முழுப் படைப்புகளுக்குப் பதிலாக ஏதேனும் ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125742/

ஃபாசிஸத்தின் காலம்

எம்.எஃப் ஹூசேன் இந்து தாலிபானியம் பஷீரும் ராமாயணமும் இரு எல்லைகள் அன்புள்ள ஜெ போரும் அமைதியும்  குறித்து நீதிமன்றம் சொன்ன கருத்துக்களைப்பற்றிய உங்கள் கருத்துக்களைச் சொல்லியிருந்தீர்கள். ராஜராஜசோழன் பற்றி ரஞ்சித் ஒரு கருத்துச் சொன்னார். அதன்பொருட்டு அவர் நீதிமன்றத்தில் கண்டிக்கப்பட்டார். காவல்நிலையத்தில்  கையெழுத்திடவேண்டும் என்னும் நிபந்தனையின்படி பிணை பெற்றார். ஒரு கருத்து சொன்னதற்கே அவரை குற்றவாளியாக காணும் நீதிமன்றத்தின் செயல்பாட்டை எப்படி காண்கிறீர்கள்? சந்திரசேகர் *** அன்புள்ள சந்திரசேகர் இதைப்பற்றி கொஞ்சம் தாமதமாக பேசலாம் என ஒத்தி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122859/

நீதிமன்றம், நெறிகள் – கடிதம்

நீதிமன்றத்தில் அனுமன்! அன்புள்ள ஜெ, நீதிமன்றத்தில் அனுமன் கட்டுரையை வாசித்தேன் .இது தொடர்பாக வேறொரு பார்வையை முன்வைக்க முயல்கிறேன் . அ) பாரதத்தில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகவே ஸ்ம்ருதிகள் எழுதி தொகுக்கப்பட்ட சட்டங்களாக இருந்து வந்தன .ஆனால் இந்தியா முழுவதற்கும் ஒரே ஸ்ம்ருதியாக இருந்தது இல்லை .ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு வித ஸ்ம்ருதி .இவை சில அடிப்படை விஷயங்களில் ஒன்றாகவும் ஏனையவற்றில் வித விதமாக வினோத விஷயமாகவும் இருந்து வந்தன . விலக்கப்பட்ட திருமண உறவுகள் தொடங்கி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125621/

தடம் -கடிதங்கள்

தடம் இதழ் ஜெமோ, உங்கள் படைப்புகளான  விஷ்ணுபுரம்  மற்றும் பின்தொடரும்  நிழலின் குரல் வழியாக உங்களை நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில்தான் தடம் இதழை விகடன் ஆரம்பித்திருந்தது. அதிலிருந்த உங்களுடைய மிக விரிவான நேர்காணலும்  அதைத் தொடர்ந்து வந்த ‘நத்தையின்  பாதை’ தொடரும் உங்களை நெருங்கி அறிய உதவின. ஒவ்வொரு மாதமும் அக்கட்டுரைகளைப்  படித்துவிட்டு உங்களுக்கு கடிதங்கள் எழுதியிருக்கிறேன். அதில் வந்த மற்றவர்களின் கட்டுரைகள், விரிவானவை  மட்டுமல்ல. முக்கியமானவை என்றும் நம்புகிறேன். குறிப்பாக, சமீபத்தில் வெளிவந்த  ராஜேந்திர சோழனின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125565/

மீள்கை

  ஒரு சிறு நினைவுடன் தொடர்புள்ள பாடல் இது. தேவ் ஆனந்தின் ‘கைடு’ படம் 1965ல் வெளிவந்தது நான் சின்னக்குழந்தை அப்போது. அன்று இது மிகப்புகழ்பெற்ற படம். ஆனால் தமிழகத்தில் சென்னைக்கு வெளியே எவரும் பார்த்திருக்கமாட்டார்கள். ஆர்.கே.நாராயணனின் நாவலின் திரைவடிவம். இதன் ஹாலிவுட் வடிவத்திற்கு நோபல் பரிசு பெற்ற பேர்ல் எஸ் பெர்க் திரைக்கதை எழுதியதாகச் சொல்வார்கள். அன்றெல்லாம் பீகாரிகள் குடும்பமாக வந்து எங்களூரில் பிச்சை எடுப்பார்கள். அங்கே வெள்ளம் என்றும் பஞ்சம் என்றும் சொல்வார்கள். உண்மையிலேயே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125707/