Daily Archive: September 1, 2019

நீதிமன்றத்தில் அனுமன்!

எட்டு கிரிமினல் கேஸ் வாங்க செய்குதுதம்பி பாவலர் நாஞ்சில்நாடன் முன்னுரை இந்தியாவுக்கு பிரிட்டிஷார் அறிமுகம்செய்த விந்தைகள் பல உண்டு. ரயில், பேருந்து முதல் தபாலட்டை வரை. அவற்றில் மிகமிக விந்தையாக நம்மவர்களுக்கு அன்று தோன்றியது நீதிமன்றம்தான். இரண்டு காரணங்கள், ஒன்று பொதுவாகவே இங்கே புரணி பேசுவதும் மாறிமாறி வாதம் செய்துகொள்வதும் மிகுதி. இங்கே அத்தனை திண்ணைகளும், ஆலமரத்தடிகளும் அதற்கான களங்கள். அவை இடைவிடாது வழக்குகள் நிகழும் நீதிமன்றங்கள். அதற்கப்பால் இங்கே நீதிவழங்கும் பஞ்சாயத்துக்கள் இருந்தன. சாதித்தலைவர்களின் பஞ்சாயத்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125441/

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று-நீர்ச்சுடர்

  வெண்முரசு நாவல்தொடரின் இருபத்துமூன்றாவது நாவல் நீர்ச்சுடர். போர்முடிந்து நீர்க்கடன்கள் இயற்றப்படுவதும் யுதிஷ்டிரனின் மணிமுடிகொள்ளலும் இந்நாவலின் கதைக்களம். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டாக மகாபாரதப்போரே நிகழ்ந்துகொண்டிருந்தது. அக்காலங்களில் பலவகையான அலைக்கழிப்புக்கள், கொந்தளிப்புகள். இனி அவற்றிலிருந்து மெல்ல விடுபடுவேன் என நினைக்கிறேன் நீர்ச்சுடரை செப்டெம்பர் 15 அன்று தொடங்கலாமென நினைக்கிறேன். அப்போது அமெரிக்காவிலிருப்பேன். ஜெ   வெண்முரசு விவாதங்கள் 

Permanent link to this article: https://www.jeyamohan.in/125418/

ஏழு நதிகளின் நாடு

இனிய ஜெயம் முக்கால் நூற்றாண்டைத் தொடப்போகும் சுதந்திர இந்தியாவின் விடுதலைத் திருநாளை, அன்றைய இரவை விழித்திருந்து விடுதலை  நாளின் நினைவுகளை மீட்டும் வண்ணம் எதையேனும் வாசிப்பது  என முடிவு செய்திருந்தேன். குகாவின் இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு நூலை எடுக்கப் போனேன்,வரிசையில் வரிசை தப்பி நின்றிருந்த  செல்வேந்திரன் பரிசளித்திருந்த நான் வாசித்திராத  நூல் ஒன்று என்னைத் தூக்கு என்னைத்  தூக்கு என்று துள்ள, எடுத்தேன். சந்தியா பதிப்பகம் வெளியிட்ட, சிவ முருகேசன் மொழிபெயர்த்த [இடரற்ற வாசிப்பை நல்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125121/

முகில்செய்தி- கடிதங்கள்

  முகில்செய்தி அன்புள்ள ஜெ மேகசந்தேசம் பாடல்களைக் கேட்டேன். என் பழைய நினைவுகளைக் கிளர்ந்தெழச்செய்தது அது. அந்தப்படம் நான் ஹைதராபாதிலிருந்த போது வெளிவந்தது. பெரிய ஹிட். பாடல்கள் இரண்டு ஆண்டுகள் மக்களை பித்துப்பிடிக்க வைத்திருந்தன. அதில் ஒவ்வொருபாட்டும் ஒவ்வொரு வகை. அஷ்டபதிப் பாட்டு இரண்டு. கர்நாடக சங்கீதப்பாட்டு இரண்டு. எனக்குப் பிடித்த பாடல் நவரச சும மாலிகா. நான் நான்கு வருடங்கள் அதைத்தான் ரிங்டோனாகவே வைத்திருந்தேன். நீங்கள் கொடுத்திருந்த இணைப்பிலேயே முண்டு தெலிசேனா பிரபு என்னும் அற்புதமான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125392/