Monthly Archive: September 2019

பி.எஸ்.என்.எல்லில் நிகழ்வது…

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு.. நீங்கள் முன்னாள் BSNL ஊழியர்..  உங்களுக்கு தற்போதைய BSNL நிலை தெரியும் என்று நினைக்கிறன்..  இந்த வருடம் மூன்று முறைகள் ( பெப்ரவரி ஜூலை ஆகஸ்ட் மாதங்கள்) சம்பளம் தள்ளிப்போனதில் ஊழியர்கள் அச்சமடைந்துள்ளார்கள் ..அரசு BSNLக்கு CELLULAR FIELD நுழைய தாமதமாகத்தான் அனுமதி கொடுத்தது..  தொடர்ந்து 3G லைசென்சும் தாமதமாக வழங்கப்பட்டது .தற்போது 4G கேட்டும் அரசு தாமதப்படுத்துகிறது. இதனால் LEVEL PLAYING FIELD என்பது கேள்விக்குறியாகிறது. இதை பற்றியும் நீங்கள் அறிவீர்கள் என …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126193

காமத்தையும் காதலையும் பற்றி…

  இப்புத்தகம் இருபாலருக்கும் உரியது எனினும் மறைமுகமாக ஆண்களின் புரிதல் இன்மை சார்ந்தே அதிகம் பேசும் தொனியில் இருக்கிறது. பெண்களின் அவசரத் தன்மை, பாராட்டுகளுக்கு ஏங்கும்போது இணைக்குக் கிடைக்கும் எதிர்வினைகள், பெண்கள் பரிசுப் பொருட்களை இணையிடம் இருந்து வாங்கும்போது வெளிப்படுத்தும் எதிர்வினைகள் என்று கவனிக்கத் தவறுகிற நுண்மையான வாழ்வியல் மடிப்புக்களைத் தேர்ந்த உதாரணங்களுடன் எழுதப்பட்டிருப்பது இன்றைய கால யுவன் யுவதிகளுக்கு அதிகம் உதவக்கூடும்.   நீ கூடிடு கூடலே : கற்பகத்தருவும், ஆலகாலமும்

Permanent link to this article: https://www.jeyamohan.in/125611

1000 மணிநேர வாசிப்பு

ஆயிரம் மணிநேர வாசிப்பு -சாந்தமூர்த்தி ஏற்புரை இன்று (12-09-2019)பிற்பகல் 1000 மணி நேர வாசிப்பு சவால் போட்டியில் 1000 என்ற இறுதி இலக்கை வெற்றிகரமாகத் தாண்டி வாசிப்பு தவத்தை நிறைவு செய்தேன். எடுத்துக் கொண்ட மொத்த நாட்கள்:151(ஐந்து மாதங்கள்)   வாசிப்பு தவம் நிறைவு!  

Permanent link to this article: https://www.jeyamohan.in/126112

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-8

பகுதி இரண்டு : குருதிமணிகள் – 2 புரவி அருகணையும் ஒலிகேட்டு கனகர் திரும்பி நோக்கினார். புரவிமேல் அமர்ந்திருந்த இளம்வீரனை அவரால் அடையாளம் காணமுடியவில்லை. புரவி புண்பட்டு ஒரு காலை உடைத்துக்கொண்டது. ஆனால் சற்றே தேறி அந்தக்காலை சாய்வாக எடுத்துவைத்து நடந்து வந்தது. அதன்மேல் அமர்ந்திருந்தவன் உடலிலும் அந்தக்கோணல் தெரிந்தது. அருகணையும்தோறும் அவன் மிகவும் இளையோனாகத் தோன்றினான். புரவி நின்று அவன் கால்சுழற்றி இறங்கி அவரை அணுகியபோது அவன் பெண் என அவர் உணர்ந்தார். ஏற்கனவே எங்கோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125839

கிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா?

அன்புள்ள ஜெ, இன்று கிருஷ்ண ஜெயந்தி இதை ஒட்டி முகநூலில் எங்களுக்குள் ஒரு உரையாடல் நடந்தது. கிருஷ்ணன் எந்த வகையில் ஒரு தெய்வம் என்று ஒருவர் கேட்டார். கிருஷ்ணனின் குணாதிசயங்களாக சொல்லப்படுபவை திருட்டுத்தனம், பெண்பித்து, சூது ஆகியவை மட்டுமே. அத்தகைய ஒரு மனிதரை எப்படி தெய்வமாக வழிபட முடியும்? அவனை அணுகித் துதிப்பவர்களுக்கு அவன் பல நன்மைகளை செய்வதாகவும் மாயமந்திரங்களைச் செய்ததாகவும் கதைகள் உள்ளன. அத்தனை குணக்கேடுகள் உள்ள ஒருவன், தன்னை வணங்குபவர்களுக்கு நன்மை செய்தால் மட்டும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/90241

மணற்கடிகை

  அன்பு ஆசிரியருக்கு,   நான் பள்ளியில் பயின்ற தொன்னூறுகளில் எங்கள் ஊர் இளைஞர்கள் சிலர் வேலைக்காக வெளியூர் சென்றார்கள்.திருவிழா நாட்களில் அவர்கள் வந்து செல்லும் ஒவ்வொரு முறையும் மேலும் மேலும் வளமானவர்களாக மாறியபடியே வந்தனர்.ஒவ்வொருவரும் வெவ்வேறு பணிகளில் இருந்ததாகக் கூறப்பட்டது.ஒருவர் உணவகத்திலும் ஒருவர் சந்தையிலும் பிறர் கம்பெனிகளிலும் என.சென்னையில் பணிபுரிபவர்களெல்லாம் ஒரே நிலையிலேயே பல வருடங்கள் நீடிக்க திருப்பூர் சென்றவர்களின் வளர்ச்சி வேகமானதாக இருப்பது ஆச்சரியத்தையும் ஐயத்தையும் ஏற்படுத்தினாலும் யாரும் அவர்களிடம் கேட்டதில்லை.ஊர் செலவுகளில் அவர்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125985

பொதிகை தொலைக்காட்சியில் காந்தி

  அன்புள்ள ஜெ, பொதிகை தொலைக்காட்சியில் இன்று காந்தி பற்றிய என் உரையாடலின் காணொளி இது  காந்தி எனும் மாமனிதர் மிக நன்றாக பேட்டியெடுத்தார் சித்ரா பாலசுப்ரமணியன். இந்திய பயணத்தில் மிக மன நிறைவான நிகழ்வு இது. காந்தியைப் பற்றி பேசும் போது உங்கள் நினைவும் வந்தது. நன்றி அரவிந்தன்  

Permanent link to this article: https://www.jeyamohan.in/126163

விஷ்ணுபுரம்- கடிதம்

விஷ்னுபுரம் நாவல் வாங்க https://vishnupuram.com/ விஷ்ணுபுரம் கடிதம் விஷ்ணுபுரம் கடிதம்   அன்புள்ளஜெ, நான் பெரிய வாசிப்பாளன் கிடையாது. 2010 வரை பாலகுமாரன், சுஜாதா போன்றவர்களின் சில நாவல்கள் வாசித்ததோடு சரி. எதோ ஒரு தேடலில் கிடைத்த உங்களின் இணையதளம் தினம்தோறும்கண்டிப்பாக தொடரும் வாசிப்பாக ஆகியது. அதன் தொடர்ச்சியாக விஷ்ணுபுரத்தை வாங்கிவைத்திருந்தாலும் வாசிக்க ஆரம்பித்தது என்னவோ சிறிது காலத்திற்கு முன்பு தான். நாவலின் முதல் பகுதியான தோற்றுவாய் படித்ததும் இரண்டுமாதம் இடைவெளி. புரியாததினாலோ பிடிக்காததினாலோ அல்ல அதன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125987

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-7

பகுதி இரண்டு : குருதிமணிகள் – 1 கனகர் வழிதவறிவிட்டிருந்தார். அதை தெற்குக் கோட்டையின் கரிய பெருஞ்சுவரில் முட்டிக்கொண்டு நின்றபோதுதான் அவர் உணர்ந்தார். முதலில் அவர் அதை கோட்டை என்றே உணரவில்லை. இருளென்றே எண்ணினார். அணுகுந்தோறும் இருள் அவ்வண்ணமே நின்றிருப்பதுகூட விழிகளுக்கு விந்தையாகப் படவில்லை. மிக அருகே சென்று அவ்விருள் பரப்பின் பருபருப்பை விழிகளால் உணர்ந்த பின்னரே அது சுவரென அறிந்து புரவியை நிறுத்தினார். மூச்சிரைத்தபடி அதை வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தார். சுவர் காற்றில் திரைச்சீலை என ஆடுவதாகத் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125732

சுயபண்புமுன்னேற்றம்

இந்தக் குறிப்பை பெங்களூர் விமானநிலையத்தில் இருந்து எழுதுகிறேன். கழிவறைக்குச் செல்லவேண்டும். எனக்கு முன்னால் சென்றவர் ஏகப்பட்ட பெட்டிகள் ஏற்றிய ஒரு தள்ளுவண்டியை கழிவறை வாயிலை முழுமையாக மூடும்படி நிறுத்திவிட்டு சென்றுவிட்டார். உள்ளே எவருமே போக முடியாது. இப்பால் நின்று இருவர் தவிக்க ஒருவர் சத்தம்போட்டார். உள்ளே போனவர் திரும்பி வந்து பொறு என கைகாட்டிவிட்டு துடைக்கும்தாளை எடுத்து நிதானமாக துடைத்துவிட்டு அதை தள்ளி வைத்தார். அப்போது மனிதர்கள் அவசரப்படுவதைப்பற்றி ஒரு புலம்பல் வேறு- ‘என்ன மனிதர்களோ, மரியாதையே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126000

Older posts «